Tuesday, 29 May 2018

படித்தது

[28/04, 9:58 pm] TNPTF MANI: துரோகங்களில் தோற்பது மனிதர்கள் அல்ல. மனிதர்களை நம்பிய நம்பிக்கைதான்!

-ஈரோடு கதிர்

[29/04, 6:49 am] TNPTF MANI: படித்ததில் பிடித்தது

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.

நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

அவள் தான் மனைவி.

[29/04, 10:22 am] TNPTF MANI: தகவலுக்காக...

ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முடித்ததும் yours sincerely எனக்குறிப்பிட்டு கையொப்பம் இடுகிறோம்.
yours sincerely எனும் இவ்வார்த்தை பிறந்த கதை இதுதான்...

ரோம் நகரில் நிறைய பேர்கள் பானை தயார் செய்து விற்று வந்தார்கள். அதில் ஒருசிலர் விரிசல் பானைகளை மெழுகு அடைத்து நல்ல பானைகள் என்று கூறி விற்றார்கள். இதனால் நல்லபானைகள் விற்று வந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இப்பாதிப்பைத் தடுக்க நாங்கள் நல்லபானைகளைத்தான் விற்கிறோம் என்பதற்காக லத்தீன் மொழியில் sincere என்று சொல்லி விற்றார்கள்.

இதுவே நாளடைவில் உண்மையானவர் எனும் பொருள்பட yours sincerely என ஆகிவிட்டது.
[29/04, 11:00 am] TNPTF MANI: 1.தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத்தாலும் விடேன்.

2.பூனைகள் அல்லர், அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்.

3.சாகச் செய்வானை சாகச் செய்யாமல்
சாகின்றாய் தமிழா சாகின்றாயே!

4.அஞ்சாமை வேண்டும் தமிழர்க்கே - பகையின்
அழிவுக்கடலின் ஆழத்தில் மகிழ!

5.தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்
தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்.

6.தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழன்
தமிழன் எனப்படுதல் தப்பு

7.செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லி தன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

8 மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம்

9.தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

10.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

11.சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்றூதூது சங்கே!

12.நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி
காலையிற்படி கடும்பகல் படி
மாலை, இரவு பொருள்படும்படி
நூலைப்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம்படி
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவ தெப்படி?

- புரட்சிக்கவி பாரதிதாசன்
[29/04, 11:04 am] TNPTF MANI: கண்ணின் கடைப்பார்வை-ஒரு சிறு
கட்டளைப் போட்டுவிட்டால்-இப்பெரு
மண்ணுலகின் ஆட்சி ஆண்கள்
வாங்குமோர் வாள் வீச்சு
-பாரதிதாசன்

No comments:

Post a Comment