நீச்சல் தெரிந்தும்
கிணற்றில் விழுந்தவன்
இறந்தான்
"தண்ணீர் இல்லாததால்"!
-படித்தது
நாட்கள் கழிகின்றன
சாவுக்கும் எனக்குமான
தூரம்
குறையும் இடைவெளி
-படித்தது
தைலம் போட்டவர்
பக்கத்திலிருப்பவர்க்கு கொடுக்கிறார்
"தலைவலியை"!
-மணி
: *வலியின் ஒலி*
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும் போது
உற்றுக் கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை.
-மகுடேசுவரன்
தவறுகளை மறைக்கும்
தைரியம் வந்தபிறகே
தவறு செய்யும் துணிச்சல் (Boldness)வருகிறது
No comments:
Post a Comment