Thursday, 3 May 2018

மணி

[25/04, 6:36 pm] TNPTF MANI: நீயே கிடைப்பினும், உன் கற்பனை உருவை காதலிப்பதை நிறுத்துவேனா என்பது சந்தேகமே.

-படித்தது

[25/04, 6:40 pm] TNPTF MANI: உதிர்த்த வார்த்தைகளுக்காக வருத்தப் பட்டிருக்கிறேன்..ஆனால்,கடைப்பிடித்த மௌனத்தை நினைத்து என்றும் வருந்தியதில்லை..

-லதா

[25/04, 6:40 pm] TNPTF MANI: ஆறுதலாய் வந்து சேர்கிறது,
அன்றன்றைக்கோர் இரவு....!
[25/04, 6:41 pm] TNPTF MANI: துன்பம் எனப்படுவது அழ வைப்பதல்ல. அழ முடியாதது.

-நவின்

[25/04, 6:42 pm] TNPTF MANI: அமைதி பயந்தவனின் சுபாவம் அல்ல... கோபம் கொண்டவனின் பொறுமை...

-படித்தது

[26/04, 7:01 am] TNPTF MANI: யுவகிருஷ்ணா வின் பதிவிலிருந்து

நீங்கள் புத்தகம் வாசிப்பவராக இருந்தால் இந்த உதவியினை பலர் உங்களிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. அதாவது உங்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பட்டியலை அவர்கள் எதிர்பார்பார்கள். பட்டியல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பட்டியலுக்கு எதிரானவர்களும் இறக்கிறார்கள். பட்டியல்கள் நம்மை குறுக்கிவிடக்கூடியவை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதேபோல ஒரு புத்தக பட்டியலையோ சினிமா பட்டியலையோ முழுதாக பார்த்து முடித்துவிட்டால் நாம் மாஸ்டர் ஆகிவிடவும் முடியாது. ஒரு பட்டியல் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது குழுவின் அனுபவம், இரசனை, அணுகுமுறை சார்ந்து உருவாகக்கூடியவை. உதாரணத்திற்கு தமிழ் புனைவெழுத்தில் எனக்கு எழுத்தாளர் பா.வெங்கடேசனை மிகவும் பிடிக்கும். எனக்கு அவரது விருப்பமான புத்தக பட்டியலை அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஆர்வம் ஏற்படும். அவரிடம் நான் அப்படிக் கேட்டு ஒரு பட்டியல் வாங்கினேன். அது அவருடைய ரசனை, அணுகுமுறை, அனுபவத்தில் உருவான பட்டியல். புத்தக பட்டியல்கள் புதையலைப் போன்றவை. தேடல் உள்ள வாசகராக இருப்பின் அப்பட்டியலிலுள்ள இழைகளைப் பிடித்து புதிது புதிதான உலகங்களைக் காண முடியும். இல்லையெனில் தட்டையாக பட்டியலை வாசிதுமுடிதுவிட்டு அடுத்த பட்டியலுக்கு செல்ல நேரிடும்.

No comments:

Post a Comment