Thursday 31 October 2024
ப்ராய்டு
ப்ராய்டு
மனிதனுக்கு, நான் தான் பெரியவன் என்னும் எண்ணம் எப்போதும் உண்டு. மனித இனம் ஒரு narcissist! இந்த human narcissism னால் விளைந்தது தான் மதம். மதம் எப்போதும் இந்த human narcissism க்கு தூபம் போட்டுக் கொண்டே இருக்கும்.
நீ தான் பெரியவன், உனக்காக தான் இந்த உலகமே படைக்கப்பட்டது, கடவுள் தன் சாயலில் உன்னை படைத்து இருக்கிறார், அவருக்கு பிடித்தமானவன் நீ தான், நீ வேண்டிகிட்டா பூகம்பம் வரும், அல்லது வந்துகிட்டு இருக்கிற புயல் நின்னுடும் என்றெல்லாம் மதம் human narcissism ஐ வளர்க்கிறது.
ஆனா அறிவியல் என்ன பண்ணுது? தன்னுடைய கண்டுபிடிப்புகளால் மனிதன் முகத்திலேயே அறைகிறது. இப்படி மனிதனின் ego மேல் ஒரே போடாக போட்ட 3 விஷயங்களை Freud, "three blows to human narcissism at the hand of science" என்கிறார்.
1. முதல் அடி, பூமியை சுற்றி தான் சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றுகிறது. நாம் தான் இந்த அண்டத்தின் மையம் என்ற ego வை பிய்த்து எறிந்தது Copernican Revolution. cosmological blow!
2. இரண்டாவது, கடவுளின் சாயலில் நாம் அப்படியே மனிதனாகவே உருவமெடுத்தோம் என்ற நினைப்பில் வெந்நீரை ஊற்றியது Darwin னின் பரிணாம கொள்கை. Darwinian Revolution. மனிதனும் ஒரு விலங்கே என்றது biological blow!
3. Freudian Revolution, நம்முடைய செயல்கள் எல்லாம், நம்முடைய thinking எல்லாம், நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. conscious mind வேறு unconscious mind வேறு. "The ego is not master in its own house."
உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் id தான் உங்களை ஆட்டுவிக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்று உங்கள் conscious mind சொன்னால் அதன் பின்னணியில் எதிர்காலத்தை பற்றிய பயமும், insecurity, unknown கிட்ட இருந்து தன்னை தானே தற்காத்து கொள்ள உங்கள் மூளை செய்யும் defense போன்ற unconscious mind இன் செயல்கள் தான் காரணம் என்கிறார். இது psychological blow!
-படித்தது
Wednesday 30 October 2024
1952 ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்காக vauxhall எனும் மோட்டார் கார் வாங்கப்பட்டது.ஆர்.டி.ஓ ஆபிசில் புதிய சீரியல் எண் தொடங்க இருந்த தருணம். முதல்வர் என்பதால் 1 எனும் எண் ஒதுக்கினர்.ராஜாஜி உடனே நான்கு இலக்கம் இருந்தால் நல்லது எனக் கூறி 0001 என எழுதக் கூறினார்.இந்த நான்கு இலக்க எண் நடைமுறைக்கு வந்தது
Monday 28 October 2024
ஒரு மன்னன் கோபத்தில் தன் படைகளை போருக்கு அனுப்பகூடாதுபழி வாங்குவதற்காக எந்த போரையும் துவக்ககூடாதுஎன்றார் சன் சூபோர் சிந்தனையால் தூண்டபட்டதாக இருக்கவேன்டுமே ஒழிய, உணர்ச்சியால் தூண்டப்படகூடாது.ஒரு நோக்கை அடைய ஒருவரை தண்டிக்கலாம். ஆனால் அதில் நமக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் வரகூடாது. அடுத்தவரை துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் சாடிஸ்ட். நேரமையாக ஒருவரை தண்டிக்க நேர்ந்தாலும், அதற்கு மனதளவிலாவது வருத்தபட வேண்டும்.-படித்தது
காந்தியை குறித்து சர்ச்சில் அரை நிர்வாண பக்கிரி எனக்குறிப்பிட்டு இழிவு படுத்தினார் என படிக்கிறோம்.உண்மையில் 1931ல் பிப் 23ல் It is alarming எனத்தொடங்கும் உரையில் அவர் குறிப்பிட்டது "காந்தியார் அரை நிர்வாணப் பக்கிரியைப் போல காட்சியளித்தாலும்,அவர் இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கப்போராட்டத்தை தன் கட்டில் வைத்திருப்பது வியப்பாக இருக்கிறது என்பார்."gandhi is still able to organise the civil disobedient movement" இது எப்படி இழிவுபடுத்துவதாகும்?-சுப.வீ
Sunday 27 October 2024
இரண்டாம் உலகப் போருக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது.வீரத்தையும் துணிவையும் உயரமும் அகன்ற மார்பும் காட்டும். மனவலிமையை காட்டுமா?ஆகவே ஆட்கள் தேர்வுக்கு உளவியல் ஆய்வுகளை சேர்த்தார்கள்.சிறுகுழுவில் எப்படி இயங்குவானோ அப்படித்தான் பெரிய சமூகத்தில் இயங்குவான் எனும் சித்தாந்தம்.போர் முடிந்ததும் நிறுவனங்கள் ஆட்கள் தேர்வில் இதை முக்கிய கருவியாக எடுத்துக் கொண்டு மனித வளப் பயிற்சிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டன. குழுவிவாதம்,(Group discussion) குழுத்தேர்வு உட்பட-கர்ட் லெவின்
Saturday 26 October 2024
Friday 25 October 2024
நைக்
1964
ஓரகன் பல்கலைகழகத்தின் ஓட்டபந்தய வீரர் பில் நைட் (Phil Knight) ஒரு போட்டிக்கு ஜப்பான் சென்றார். அப்போது ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் விலை மிக அதிகம். ஜப்பானில் சும்மா சாலையில் விற்ற ஷூக்களை வாங்கி அணிந்து கொண்டு ஓடினார். மிக விலை கூடுதலான அடிடாஸ் ஷூக்களுக்கு சமமாக அதன் செயல்திறன் இருந்தது
கல்லூரிக்கு வந்து சும்மா வேடிக்கையாக இதை கல்லூரி பத்திரிக்கையில் எழுதினார். உடனடியாக பல்கலைகழக கோச் போவெர்மேன் (Bill Bowerman) அவரை தேடி வந்தார். இருவரும் ஜப்பானில் இருந்து மலிவு விலையில் ஓட்டபந்தய ஷூக்களை வாங்கி ஓரகன் பல்கலைகழகத்தில் விற்கலாம் என பேசினார்கள். அதேபோல ஷூக்களை வாங்கி வந்து, தனது கார் டிக்கியில் ஏற்றிச்சென்று விற்றார்கள்
பல்கலைக்கழக பத்திரிக்கையில் எழுதியதால நல்ல விளம்பரம் கிடைத்தது. மற்ற பல்கலைகழகங்களுக்கும் கொண்டு சென்று விற்க, விலை உயர்ந்த ஷூக்களுக்கு பதில் இந்த ஷூக்கள் நல்லா இருக்கே என சொல்லி மாணவ்ர்கள் வாங்கினார்கள்.
ஷூவின் ஜப்பானிய பிராண்டு பெயர் ஓனிடுசுகா டைகர். உச்சரிக்க கடினமாக இருக்க, வெற்றி என்பதற்கான கிரேக்க தேவதை நைக்கியின் பெயரை சூட்டினார்கள். பிராண்டு மார்க் வேண்டும் என சொல்லி பல்கலைகழகத்தின் கிராபிக் டிசைன் துறை மாணவி கரோலின் என்பவரை அழைக்க அவர் $35 வாங்கிக்கொண்டு உலகபுகழ் பெற்ற அந்த டிக் மார்க் சின்னத்தை வரைந்து கொடுத்தார்
இருவருக்கும் அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் $35 கொடுத்தால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என சமாதானபடுத்திக்கொண்டு வணிகத்தை தொடர்ந்தார்கள். இங்கே ஷூக்கள் சக்கை போடு போடுவதை அறிந்த ஜப்பானிய கம்பனி விலையை உயர்த்தி கேட்க ஆரம்பிக்க "இது சரிவராது" என சொல்லி என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.
கோச் போவெர்மேன் "நாமே ஷூக்களை உற்பத்தி செய்யலாம். அடிப்பாகத்துக்கு மட்டும் புதுமையாக எதோ செய்வோம்" என சொன்னார். இருவரும் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அங்கே வாபில் மேக்கர் (Waffle Maker) ஒன்று இருந்தது. அதில் மாவை ஊற்றி வாபில் சுடுவதை பார்த்த கோச் "இதே மாதிரி இதில் ரப்பரை ஊற்றி ஷூவின் அடிப்பாகத்தை தயாரித்தால் என்ன?" என்றார்
அவ்ளோதான்..வாபில் அடிப்பாகம் (Waffle Nike) பிறந்தது. 1984 வரை தட்டுதடுமாறி சென்றுகொண்டிருந்த கம்பனிக்கு திருப்புமுனை ஆனது புதுமுக பாஸ்கட்பால் வீரர் மைக்கேல் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தபின்னர் தான். அவர் வரலாற்று புகழ்பெற்ற கோட் ஆக, அவர் அணிந்த நைக்கி ஷூக்களும் உலகபுகழ் பெற்றன.
#பிசினஸ்_பிஸ்தாக்கள் உக்கு திரும்பின பக்கம் எல்லாம் ஐடியாதான். பார்ப்பதெல்லாம் வணிக நோக்கில் தான்
~ நியாண்டர் செல்வன்
Thursday 24 October 2024
மைக் டைசன்
"நான் அதிகாலை 4 மணிக்கு ஓடுகிறேன், ஏனென்றால் என் எதிரி இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். அது எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது." ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் பயிற்சியளிப்பீர்களா என்று கேட்டபோது மைக் டைசனின் பதில் இதுதான். டைசன் மேலும் கூறினார், "எனது எதிரிகளில் ஒருவர் அதிகாலை 4 மணிக்கு ஓடுவதை நான் அறிந்தால், நான் அதிகாலை 2 மணிக்கு ஓடத் தொடங்குவேன். யாராவது அதிகாலை 2 மணிக்குப் பயிற்சி செய்தால், பயிற்சியை தொடர நான் தூங்குவதை முழுவதுமாக நிறுத்திவிடுவேன்."
"பயிற்சி இல்லாமல், நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், நீங்கள் ஒன்றும் இல்லை." - மைக் டைசன்
படத்தில், ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன் தனது தினசரி 5-8 கிமீ வாடிக்கையாக ஓடுவதைப் படம்பிடித்துள்ளார், நிருபர்கள் 1987 இல் அவரது தீவிர பயிற்சியை ஆவணப்படுத்தினர்.
"
Wednesday 23 October 2024
ஜீயோ டாமின்
மனிதர்கள் பொருட்களை அல்ல மாறாக பிராண்டுகளையே வாங்குகிறார்கள். ஆகவேதான் விளம்பரங்கள் குறிப்பிட்டப் பொருட்களின் சிறப்புகளைச் சொல்வதற்குப் பதிலாக பிராண்டுகளை நம் உணர்வுகளோடு ஒட்டவைக்க முயல்கின்றன.
ஒரு பிராண்டுக்கு அடிமையாபவர் (Brand Loyalty) அந்த பிராண்டோடு தன்னை அடையாளம் காண்கின்றார். அந்த பிராண்டைப் போலவே கெத்தான மனிதராகத் தன்னை உணர்கிறார். அதனால்தான் உள்ளாடையே ஆனாலும்கூட (அதன் பிராண்டை) வெளிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பிட்டப் பொருள் (product) கொடுக்கும் சவுகரியத்தைவிட அதன் பிராண்ட் அடையாளம் வெளித்தெரிவதே முக்கியமானதாக இருக்கிறது. இந்த வெளிக்காட்டப்படும் உள்ளாடையில் அதன் பிராண்ட் தெரியவில்லையென்றால் அதற்கு உண்மையில் எந்த சமூக மதிப்பும் இல்லை. அதற்கேற்றார்போல்தான் அந்த கால்சட்டைகளும் திட்டமிட்டே low hip ஆக வடிவமைக்கப்படுகின்றன.
இந்த Brand Loyalty, குழந்தைப் பருவத்திலிருந்தே விளம்பரங்கள் மூலமும் சந்தைப் பொருளாதாரம் கற்பிக்கும் மதிப்பீடுகள்மூலமும் நம் ஒவ்வொருவரிடமும் நச்சாக ஊட்டப்பட்டிருக்கிறது. பத்து வெவ்வேறு பிராண்ட் பொருட்கள் இருக்கும் இடத்தில், எதிர்பார்க்கும் சில ஆப்ஷன்கள் இல்லையென்றாலும் தனது பட்ஜெட்டைவிட விலைசற்று அதிகமாகவே இருந்தாலும்கூட தான் விசுவாசமாக இருக்கும் பிராண்டை கண்ணை மூடிக்கொண்டு ஒருவரை தேர்ந்தெடுக்கச் செய்வது (loyalty beyond reason) இந்த பிராண்ட் அடிமைத்தனம்தான்.
இதையே, 'ஹெட் அண்ட் ஷோல்டர்' ஷாம்பூ பிராண்டுக்கு அடிமையான ஒருவர் தன் தலை முழுமையாய் வழுக்கையானா பின்பும்கூட (நான் இல்ல 😝) அந்த பிராண்டைத் தொடந்து பயன்படுத்தும் அடிமையாய் இருக்கிறார் என்கிறார் பார்ப்பர்.
-ஜியோ டாமின்
Tuesday 22 October 2024
மனித இதயங்களில்தான் எவ்வளவு துக்கம் உறைந்துக் கிடக்கிறது. அத்துக்கங்களைக் கொட்ட அனுதாபத்தோடு ஆழ்ந்து கேட்கும் முகங்களைத் தேடியலைகிறார்கள். சுற்றத்திடமும் பந்தங்களிடத்திலும்தான் மனிதன் தன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வான் என்றும், அவர்களிடம் தான் வெளிப்படையாகப் பேசுவான் என்றும் நம்புகிறோம். அல்ல, மூன்றாம் மனிதனிடமே, முன்பின் தெரியாதவர்களிடமே தன்னைப் பற்றி, தான் விரும்பும் விதத்தில் கூறி, தனது விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை முன்வைத்து, "எனக்கு இந்த கொடுமை நிகழலாமா?" என்று மனிதனால் கேட்க முடியும்.~ ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
Monday 21 October 2024
Sunday 20 October 2024
புத்தகம் 21
Reading_Marathon2024
#24RM050
Book No:21/100+
Pages:206
தாலிமேல சத்தியம்
-இமையம்
எழுத்தாளர் இமையத்தின் இப் புத்தகத்தினை 2023 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி விட்டேன். பத்து கதைகளில் ஏழு கதைகளை படித்து விட்டு மூன்று கதைகளை வாசிக்காமல் வைத்திருந்தேன். தற்போது வாசித்து முடிந்ததால் முழுமையாக அந்த கதைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது. இமையத்தின் எழுத்துக்கள் எங்கோ வானத்திலிருந்து வந்ததாக இல்லாமல் நம் மண்ணின் மணம் சார்ந்து, அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும், நாம் கவனித்திராத முகங்களை, சண்டைகளை, மனிதர்களின் உணர்வுகளை, இவருடைய எழுத்துக்களில் எந்தவித மேல் பூச்சும் இல்லாமல் நாம் படித்து விட முடியும். ஆனால் அந்த எழுத்துக்கள் சொல்லும் காட்சிகள் நம் மனதை நெடுங்காலம் அரித்து கொண்டே இருக்கும்.
தோற்றுப் போன கட்சிக்காரர் தான் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தினை வசூல் செய்வதற்காக வருகிறார்.
பணம் வாங்கி ஓட்டு போடும் கீழ்த்தட்டு மக்கள் ஒவ்வொருவரிடம காரராக வசூலிக்கிறார். ஆனால் உண்மையிலேய அந்த வேட்பாளருக்கு தான் தான் ஓட்டு போட்டேன் என்று கூறும் அலமேலுவின் வாதத்தினை அவர் ஏற்க மறுக்கவில்லை. அதன் பின் தன்னுடைய வாக்கு சுத்தத்தை நிரூபிக்க அவள் என்ன செய்தாள் என்பதுதான்.. தாலி மேல் சத்தியம் கதை
எதிர்பாராத விபத்தில் பிள்ளையை பறிகொடுத்த கண்ணகி வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்துக்கு வருகிறாள். விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து தன் மனதில் உள்ள வார்த்தைகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள் .அப்போது உரையாடலின் இறுதியில் வரும் வழக்கறிஞர் நடைமுறை வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதைத்தான் இந்த உலகமும் மேம்பட்ட சமுதாயம் அவளுக்கு திரும்பி செய்கிறது. அந்த இடத்தில் கண்ணகி என்ன செய்திருப்பாள்? எவ்வாறு நடந்திருப்பாள்? எனும் கதையை சாமி இருந்தா கேட்கும் என்ற வாழ்வியலின் மூலம் நமக்கு இமயம் உணர்த்துகிறார்.
40 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது அவ்வழியே வரும் ரயிலில் ஏறுகிறார். அப்போது தான் இளமையில் காதலிப்பதாக கூறிய சாரதாவும் அதே ரயிலில் வருகிறார். இருவருக்குமான உரையாடல் தன் காதலியை கைப்பிடிக்காத காரணத்தை அவரும் ஏன் கை பிடிக்கவில்லை என்ற வினாவில் சாரதாவும் உரையாடிக் கொள்வது மிகுந்த ரசனையான ஒரு கதையாக இக்கதை அமைந்திருக்கும். தனவேல் ரயில் போன திசையை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் எனும் கதையின் இறுதி வரி நம்மையும் சாரதாவை நோக்கி கைகாட்ட செய்து விடும்.
கொளஞ்சி நாதனின் தந்தை கலியமூர்த்தி இவரின் வீட்டில் தான் இருந்து வந்தார். அம்மாவை பறிகொடுத்தவர் .தந்தையை கண் போல பார்த்துக் கொண்டிருந்தார் .ஒருநாள் காலை வெளியே செல்கிறேன் என்று சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூன்று மாதம் ஆகிவிட்டது. காவலர்களிடமிருந்தும் ஒரு பதிலும் வரவில்லை. ஒருநாள் காவலர்களிடமிருந்து எஸ்பி அலுவலகத்திற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது அதனை எடுத்துக் கொண்டு போன கொளஞ்சிநாதனின் மனநிலை தான் காணாமல் போனவர்கள் கதை சொல்கிறது.
அன்றாடம் வீட்டில் இருப்பவர்களை நாம் அதிகம் கவனிப்பதில்லை அவர்களின் வெற்றிடத்தை நோக்கும் போதெல்லாம் அவர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தோம் என்பதை அப்பழுக்கற்றதாய் நம் மனதுக்கு தெரிய வைப்பது ஒரு சிலரின் பிரிவுகளை தான்.
கொரோனா காலத்தில் இறந்த தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இயற்கை மரணம் அடைந்த ஒருவரின் பிணத்தை எவ்வாறெல்லாம் அடக்கம் செய்தனர்.. எவ்வாறு அந்த சூழ்நிலையை ஒரு பெண் கடந்து சென்றாள் என்பதை மிகவும் மனம் கணக்கும் துயரத்துடன் இக்கதையை வாசிக்க நேர்ந்தது. இது அப்போது மிகவும் அதிகம் பேசப்பட்ட கதைகளில் ஒன்று.
கிட்டத்தட்ட குட் நைட் படத்தினைப் போல குறட்டை சத்தம் உள்ள தம்பதியினருக்கு என்னவெல்லாம் சிக்கல் நடக்கும் என்பதை நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் பெண்ணின் பார்வையில் எவ்வாறு ஏமாந்து போகிறாள் என்பதை பற்றியும் ரவநேரம் கதை நமக்கு சுட்டி காட்டுகிறது.
சூழலும் சமுதாயமும் ஒருவனை எவ்வாறு கெட்டவனாக பார்க்கிறது ,ஒருவனை கெட்டவன் என்று சொல்லிவிட்டாலோ ,பிறரை மட்டம் தட்டி விட்டாலோ நாம் நல்லவர்கள் என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் முகமூடியும் கழட்டும் போது தான் அவர்கள் நல்லவர்களாக கெட்டவர்களா? என்பது தெரிய வருகிறது. அப்படித்தான் விஷ பூச்சி கதையில் ஹாஸ்டலில் தங்கி இருந்த ஒரு மாணவனை ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் கெட்டவனாக சித்தரிக்கின்றனர். இறுதியில் அந்த மாணவன் மிகவும் நல்லவனாகவும் சுற்றி இருந்த ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகவும் இருக்கிறார் என்பதை காலம் நமக்கு இக்கதையின் வழியே காட்டுகிறது.
பல ஆண்டுகள் கட்சியிலிருந்த ஒருவர் இறந்து விடுகிறார். அவரின் மனைவியும் அதே கட்சிக்காரர். தான் சொந்தங்களையெல்லாம் தூர வைத்துக் கொண்டிருந்த அவள் தற்போது இறந்த பின்பு அனைவரும் வருகின்றனர். சொந்தக்காரர்களின் யோசனையை கேட்டு ஜாதி முறைப்படி பிணத்தை அடக்கம் செய்வதா? அல்லது கட்சிக்காரர்களின் வழக்கப்படி அடக்கம் செய்வதா?என்பது குறித்த மனப்போராட்டம் நடக்கிறது இறுதியில் எது வென்றது என்பதே கட்சிக்கார பிணம் கதை
மின் மயானங்கள் வந்த பின்பு சுடுகாடுகள் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது .அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த சூழலில் ஒரு பெண்ணாக மயானத்தில் பணியாற்றும் கீதாவின் கதையை அங்கு சமாதி கட்ட சித்தாளாக வரும் ஒரு பெண்மணியிடம் உரையாடல் மூலம் அவர்கள் கதை விரிய தொடங்கிறது. தாத்தா பாட்டியை கவனித்துக் கொண்டு பிணக்குழி வெட்டும் பெண்ணாக தனக்கு நேர்ந்த அனுபவத்தையும், தான் கடந்து வந்த பாதைகளையும் சித்தாளான பெண்ணிடம் கூறிக் கொண்டே வருகிறார்.
அவரின் வாழ்க்கை முறை என்ன ஆனது அவரின் குடும்ப கதை என்ன என்பதுதான் மயானத்தில் பயம் இல்லை கதை.
பொதுவாக இக்கதைகள் ஒரே நேரத்தில் படித்துவிட்டு மூடிவிடக் கூடியது இல்லை. ஒவ்வொரு கதைகளையும் அசைபோட்டு பார்க்கும் போது நாம் சந்தித்திராத மனிதர்கள் ,நாம் கேள்விப்பட்டிராத வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இமையம். கதைகளில் உள்ள வரிகள் யாவும் மேற்கோள்களோ அல்லது இலக்கியத்தின் ஆழத் தோண்டி முத்து எடுப்பது இல்லை. வழக்கமாக நம் அருகில் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நாம் அமர்ந்து ஒட்டு கேட்டால் எப்படி இருக்குமோ அதே போல் தான்.
ஆனால் இக் கதைகள் யாவுமே பெண்ணினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சித்திரங்கள் தான். பெண்ணின் அக உணர்வுகளை சொல்லி எத்தனை கதைகள் நாவல்கள் வந்தாலும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது என்றும் நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை பெண்களிடமும் அவர்கள் வாழ்வில் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இழந்தவைகள் என்னென்ன என்பதை பற்றி நம் மனதிற்குள்ளேயே பேசு பொருளாக உள்ளது.
அவற்றை நாம் எண்ணங்களின் மூலம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம் அல்லது நமக்கு நாமே பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம் தொடர்ந்து.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் வட அமெரிக்கப் பெண்மணியான ஷேரன் உட், தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறினார்: “அது உடல் வலிமையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாக மன வலிமையைப் பற்றியது என்பதை நான் கண்டறிந்தேன். உண்மையான போராட்டம் என்னுடைய மனத்தில்தான் நிகழ்ந்தது. நானே சுயமாக உருவாக்கிக் கொண்ட தடைகளைக் கடந்து, ஆற்றல் எனும் பொக்கிஷத்தை நான் சென்றடைய வேண்டியிருந்தது. அந்த ஆற்றலின் 90 சதவீதத்தை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்.” பயன்படுத்தப்படாத அந்த 90 சதவீத ஆற்றலை நீங்கள் வசப்படுத்த விரும்பினால், “அதை நான் எப்படிச் செய்வது?” என்று கேளுங்கள். அப்போது நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைப்பீர்கள்-இனிய காலை
Saturday 19 October 2024
Friday 18 October 2024
Bruce lee
புரூஸ் லீ
ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீஐ வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார்.
வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் .
மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ.
"எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு" என சொல்லும் சமயம் நிஜமாக உங்களுக்கு களைப்பு இல்லை. டிஹைட்ரேட் ஆகி இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவை ஓய்வு அல்ல, உப்புஉடலில் நீர் அளவுகள் குறைவாக இருக்கும் போது, இது நரம்பு மண்டலம் உள்ளிட்ட அமைப்புகளை பாதிக்கிறது, மேலும் களைப்பு, குழப்பம், மயக்கம் மற்றும் சக்தியின்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இன்றும் சிறிய அளவிலான டிஹைட்ரேஷனே கூட ஒருவரின் கவனக்குறைவை மற்றும் உடல் செயல்திறனை குறைக்க முடியும்.வியர்வை காரணமாக உடலில் நீரின் மற்றும் முக்கியமாக சோடியம் போன்ற எலெக்ட்ரோலைட்டின் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தசைகள், நரம்புகள் மற்றும் திரவ சமநிலை பாதிக்கப்படும், இது களைப்பைத் தோற்றுவிக்கலாம். வெறும் நீர் குடிப்பதால் இது போகாது.பெரிய டம்ளரில் நீர், அத்துடன் கொஞ்சம் உப்பு, லெமென்...பிழிந்து குடிக்கவும். உப்பு வியர்வையில் வெளியேறுவதால் தான் டிஹைட்ரேஷன் உன்டாகிறது,. உடல் மேலும் வியர்வை வராமல் இருக்க, உங்களை ஓய்வெடுக்க தூண்டுகிறதுதமிழக கிராமங்களில் வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் உப்பு போட்ட மோர் தான் கொடுப்பாகள்.
Thursday 17 October 2024
வாடிக்கையாளர்தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான முதலாளி. அந்த முதலாளி, உங்களை நேருக்கு நேராகக் கண்டிக்க மாட்டார். உங்களது பொருள் தரமற்றது என்று நேரடியாக உங்கள் சம்பளத்தைக் குறைக்கமாட்டார். உங்களது வருகைப் பதிவேட்டில் உங்கள் நேரந்தவறிய காலத்தைச் சுட்டிக் கேள்வி கேட்கமாட்டார்.ஆனால் அந்த முதலாளி, தன் விருப்பத்தை, தன் விற்பனையை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்றுவதன் மூலம் உங்களைத் தண்டிக்கமுடியும்.-பி.கே.பழனிக்குமார்
Wednesday 16 October 2024
ரெளத்திரம் பழகு
"ரெளத்திரம் பழகு" என்றார் பாரதியார்.
அதற்கு "எல்லார் மேலும் கோபப்படு" என பொருள் அல்ல, கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக்கொள்வது என்றே பொருள்.
பழகு என்பது "கராத்தே பழகு, சிலம்பம் பழகு" என்பதுபோல் தான். பழகுதல் என்பது வீரத்தை முறைப்படுத்தி, விதிகளை உருவாக்கி, தேவைப்படும்போது, தேவையான அளவில், தற்காப்புக்கும், உலகநலனுக்கும் பயன்படுத்துவதையே குறிக்கும்.
"ஒரு உண்மையான வீரன் கோபப்படுவது இல்லை" என்றார் லா சூ. கோபம் வீரனை மதியிழக்க வைக்கும். போரில் தோற்கவைக்கும்.
கிரிக்கட்டில் பவுலர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதன் நோக்கமே பேட்ஸ்மனை கோப்பட வைத்து, தவறான ஷாட் ஆடி அவுட் ஆக்க வைப்பதுதான்.
அதற்காக கோபபடவேண்டிய விசயத்துக்கு கோபபடாமல் இருக்க முடியாது. நம்மை ஒருவர் அவமதிக்கையில், அநியாயம் ஒன்று நடக்கையில் கோபபட்டே ஆகவேண்டும்.
ஆனால் நம் கோபத்தை உடனே வெளிக்காட்ட வேண்டும், அதே இடத்தில் வெளிப்படுத்த வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என யோசித்து, சரியான தீர்வை அமைதியான மனநிலையில் சாதிப்பதே சிறந்தது.
-படித்தது
Monday 14 October 2024
உலகை பொறுத்தவரை நாம் எதையாவது சாதிக்கவில்லை என்றால் நம் தவறுகளையும், குறைபாடுகளையும் வைத்துத்தான் நம்மை நினைவு வைத்து இருப்பார்கள்.ஜேசன் ஸ்டாதம் இத்தனை பெரிய சாதனை படைக்கவில்லை என்றால் "சொட்டைத்தலை அங்கிள்" ஆக தான் நினைவு கூறபட்டு இருப்பார். இப்போது சூப்பர்ஸ்டார் என்கிறார்கள்உலகம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறது என்பது நம் கையில் தான் இருக்கு.நாம் ஜெயித்தால் நல் பலவீனங்கள் எல்லாமே அடிபட்டுபோவது மட்டுமின்றி அதை யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். நாமே பிற்காலத்தில் அதை சொல்லி ஜோக் கூட அடிக்கலாம். இல்லையென்றால் அவற்றை வைத்தே நம்மை அடையாளப்படுத்துவார்கள்.-படித்தது
தவளைப்பாடல்
தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன் -ஞானக்கூத்தனின் கவிதை
அப்படி கம்பன் ஏன் சொன்னான்?
அதைப் பற்றி கம்பராமாயணத்தில் ஊறிய பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். அவர் சொன்னார். “அப்டி ஒரு உவமை உண்டு. ஆனா அதை வேதபாடசாலைன்னு சொல்றதுதான் வழக்கம். அங்கதான் அப்டி சேந்து பாடுவாங்க…என்றார்
கல்விசிறந்த ஆசிரியர்கள் ஓங்கும் ஓசையுடன் பயிற்றுவிக்க பலவகையான சிறுவர்கள் சேர்ந்து ஓதுவதுபோல ஏராளமான தவளைகள் தங்கள் சொல் செல்லுபடியாகும் இடத்தில் அல்லாது வேறெங்கும் ஒரு சொல்லும் உரைக்காமல் இருக்கும் அறிஞர்கள்போல அடக்கம் கொண்ட நாவுகள் கொண்டவை ஆயின
எங்கு மதிப்பிருக்குமோ அங்கு மட்டுமே பேசுபவர்கள் அறிஞர்கள். தவளைகளும் அந்த அறிஞர்களுக்கு நிகரானவை என்கிறான்.
ஜெமோ
கொசுறு: நுணலும் தன் வாயால்கெடும் எனும் வரி ஏன் வந்ததுனு சந்தேகம் இருக்கு.ஒரு வேளை இது இணைய அழைக்க ஒரு மொழி, மழையை அழைக்க ஒரு மொழியோ என்னவோ
நியாண்டார்
ரஷ்யர்களின் தேசிய உணவு என்றால் இறைச்சியை தாண்டி பீட்ரூட் என்பார்கள்.
எத்தனையோ உணவுபற்றாகுறையில், உலகபோர் சமயங்களில் எல்லாம் மக்கள் பட்டினி கிடக்கையில் பீட்ரூட்டை பயன்படுத்தி செய்யும் போருஷ்ட் சூப் (Boruscht) தான் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் உயிரை காப்பாற்றி உள்ளது. இதற்கு பீட்ரூட் தான் பிரதானம். அத்துடன் கிடைக்கும் இறைச்சி துண்டுகளை போடுவார்கள். சூப்பின் வெப்பமும், பீட்ரூட்டின் கலோரிகளும் தான் அவர்களை பட்டினியிலும், குளிரிலும் இருந்து காப்பாற்றின.
பீட்ரூட்டில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இது பொட்டாசியம், மாங்கனீஸ், ஃபோலேட் (விட்டமின் B9), இரும்புச்சத்து, மற்றும் விட்டமின் C போன்றவற்றில் மிகுந்தது. இதோடு நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ளதால் ஜீரண செயல்பாட்டுக்கு உதவுகிறது. பீட்ரூட்டில் காணப்படும் நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
ரஷ்யாவின் குளிரை தாக்குபிடித்து விளையகூடிய காய்கறிகளில் பீட்ரூட் ஒன்று. ரஷ்யாவின் கோடைக்கால குறுகியது. கோடை அறுவடை முடிந்தபின்னர் வயல்கள் ஆறுமாதம் சும்மா தான் கிடக்கும். அப்போது இலையுதிர்காலம் துவங்கி, குளிர் அடிக்க அரம்பிக்கையில் பீட்ரூட் நட்டுவிடுவார்கள்.
பீட்ரூட்டுக்கு பிடித்த தட்பவெப்பம் 10 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பம். ஆக குளிர்நாட்டு பயிர். வளர 50 முதல் 70 நாள் ஆகும். ஒப்பிட்டளவில் குறுகிய கால அறுவடை
இலையுதிர் காலம் துவங்கி, ரஷ்யாவில் பகல் பொழுதுகள் குறைந்துகொண்டே வரும். பீட்ரூட்டுகளுக்கு ஆறுமணி நேர வெயில் போதும். மேலே இலைகளுக்கு சூரிய வெளிச்சமும், நீரும் கிடைக்க, கிடைக்க கீழே வேருக்கு அடியில் பீட்ரூட் வளர்ந்துகொண்டே வரும். 40- 50 நாளில் அறுவடைக்கு தயாரகிவிடும். அப்போது நவம்பர் அல்லது டிசம்பர் கடும்குளிராக இருக்கும்
மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை தாக்குபிடிக்கும். ஆனால் அப்போது நிலத்தின் மேல் இலைகள், வைக்கோல், மல்ச் (மரதுணுக்குகளை) போட்டு மூடினால்,மண் உறையாமல் தடுக்கப்பட்டு, மண்ணுக்கு அடியே இன்னும் வேர்கள் உயிருடன் இருக்கும். குளிர் அடிப்பதால் இலைகள் உதிர்வதால், வேருக்கு அடியே இருக்கும் கிழங்கு ளர்வதை நிறுத்திவிடும். டிசம்பர் வரை நிலத்தை தோண்டி அறுவடை செய்து பிரஷ்ஷாக பீட்ரூட் உண்ணமுடியும்
ஆனால் அதன்பின்னர் அடுத்த மூன்று மாதங்க:ள் கொடூரமான குளிராக இருக்கும் என்பதால் அறுவடை செய்து பீட்ரூட்டை வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். பீப்பாயில் மண்ணை போட்டு, அதன்மேல் பீட்ரூட்டை போட்டு, அதன்மேல் மண்ணை போட்டு லேயர் லேயராக அடுக்கிக்கொண்டு வருவார்கள்
இப்படி செய்து சூரிய ஒளிபடாமல் வீட்டு பேஸ்மெண்டில் வைத்துவிட்டால், அடுத்த 3 - 4 மாதங்கள் கூட தாங்கும். அதற்குள் கோடை வந்துவிடும்.
ஆக புவியியலின் சவாலை இப்படி சமாளிக்க பீட்ரூட் உதவியதால் தான் #geography_is_destiny
~ நியாண்டர் செல்வன்
Saturday 12 October 2024
Friday 11 October 2024
'கண்ணீரும் கம்பலையுமாக நின்றான்' என்பதில் வரும் கம்பலை என்பதன் பொருள் என்ன?கம்பலை என்பதற்கு நடுக்கம் என்பது ஒரு பொருள். ஓசை என்னும் ஒரு பொருள் உண்டு. அழுகையும் கூச்சலுமாக நிற்றலைக் குறிப்பதனால் கம்பலை என்பதற்கு ஓசை என்று பொருள் கொள்வது சிறப்பு; 'வம்ப மாக்கள் கம்பலை மூதூர்' என்று மணிமேகலை அடியில் அப் பொருளில் வருவது காண்க.
Thursday 10 October 2024
நானொரு நத்தை தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள், அதோ அந்த செர்ரி மரங்களை நோக்கி நான் மெல்ல நகர்கிறேன்; நான் சென்றடையவேண்டிய இடம் ஒன்றுமில்லை, செய்தே தீரவேண்டிய வேலைகளும் கிடையாது இந்த வேகமே எனக்கு உவப்பு: நான் மெதுவாகப் போகவே விரும்புகிறேன்; இது எனக்கு நான் கடந்து செல்லும் பூக்கள் அனைத்தையும், புல்லின் இதழ்கள் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்கு, வேண்டிய நேரத்தைத் தருகிறது. நான் ஒரு நத்தை; இது என் பாதை. தயவு காட்டுங்கள் என்னை அவசரப்படுத்தாதீர்கள், எனக்கு இந்நாள் முழுவதும் இன்னும் மீதமிருக்கிறது.'பார்பரா வான்ஸ் (அமெரிக்கப் பெண் கவிஞர்)மொழிபெயர்ப்பு: க.மோகனரங்கன்
Tuesday 8 October 2024
Monday 7 October 2024
பிக் பாஸ் வரை போயி ஒருத்தர் கொங்கன்ஸ் புகழை மணத்திட்டு வந்திருக்காரு. உண்மையில் நம்மைவிட சமூக அந்தஸ்த்தில் உயரத்தில் இருப்பவர்களிடமும் நம்மைவிட குறைவாக இருப்பவர்களிடமும் முதல் உரையாடலை எப்படித் தொடங்க வேண்டும் என்று தெரியாத அறியாமை இது.ஒருமுறை ராக்பெல்லர் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போனாராம். விருந்து முடிந்து சப்ளையரிடம் டிப்ஸ் எவ்ளோ வேண்டும் என்றாராம். அவன் "ஒரு டாலர் கொடுங்க" என்றானாம். அதற்கு அவர் தம்பி "நான் ராக்பெல்லர்பா. அதைத் தெரிஞ்சு கேளு" என்றாராம். அதுக்கு அவன் "சரி பத்து மில்லியன் டாலர் கொடுங்க " என்றானாம். "தம்பி நீ ஒரு சப்ளையர். அதைத் தெரிந்து கேளு" என்றாராம்.
அம்பேத்கர்
புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும்.
இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது: ஆய்வு இல்லையென்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத் தான் அறிவு கிட்டுகிறது.
ஆனால் தாங்கள் ஏற்கெனவே முழுமையாகத் திருப்தி யடைந்திருக்கும் விஷயங்களுக்காக மனிதர்கள் அத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் மேற்கொள்வார்கள் என்று எண்ணுவது தவறாகும். இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்யமாட்டோம்; ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம்.
ஐயம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே ஐயப்படும் செயல் தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்.”
-அம்பேத்கர்
Sunday 6 October 2024
இருள் பின்வாங்கி விலகும் தகவல் முதன்முதலில் எட்டியது ஒரு பறவையை. அது தன் கூட்டத்தாரைக் கூவி எழுப்பியது. பறவைக் கூட்டத்தின் ஓசையில் மிருகங்கள் விழிப்புக் கொண்டன. ஒளியை மறைத்திருந்த மாயக் கரம் விலகிக்கொண்டது. வெளிச்சம் சிறுகக் சிறுக வஸ்துக்களாக மாறிக்கொண்டே வருகிறது. கம்பிக் கிராதியாக. ஆல மரமாக ஊருணிக் கரையாக. வாசல் தெளிக்கும் பெண்களாக. பார்வை கொள்ளும் கண்களாக. வெளிச்சம் தன் வல்லிசையைத் தொடங்கி விட்டது. வெளிச்சம் யோசனைகளாக மாறுகிறது. இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில் மீட்டெடுக்கிறது பொழுது.-யுவன் சந்திரசேகர்
Saturday 5 October 2024
நத்தை ஒரு மணிநேரத்தில் 0.108 கிமி தொலைவை கடக்கும்.அதாவது நூறுமீட்டர்சராசரி மனிதன் ஜாலியாக நடந்து போவதை பார்க்கும் நத்தைக்கு எப்படி இருக்கும்?சராசரி மனிதனின் வேகம் மணிக்கு 5 கிமி. அதாவது நத்தையை விட 46 மடங்கு வேகம்புல்லட் டிரெய்ன் வேகம் மணிக்கு 230 கிமி. அதாவது மனிதனின் நடை வேகத்தை விட 46 மடங்கு அதிகம்சாலையோரம் நடக்கும் மனிதன் தன்னை ஒரு புல்லட் ரயில் கடக்கையில் எப்படி உணர்வானோ, அதையே தான் ஒரு நத்தை நாம் அதை நடந்து கடக்கையிலும் உணரும்
Friday 4 October 2024
நியாண்டர்
மத்திய ஆப்பிரிக்க மிக ஏழ்மையான நாடு
அங்கே ஒரு ஏழைப்பிள்ளை பிறக்கிறான். கஷ்டபட்டு உழைத்து முன்னேறி கோடீஸ்வரன் ஆகிறான்
அதே இன்னொரு முன்னேறிய நாட்டில் பெரும் செல்வந்தன் ஒருவனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். பிறந்த மறுவினாடி பூர்விக சொத்தில் இருந்து சில பல கோடிகள் கிடைத்து அவனும் செல்வந்தன் ஆகிறான்
இந்த இருவரில் உலகம் பாராட்டுவது யாரை?
ஆப்பிரிக்க ஏழையை தான்
அவன் கடந்து வந்த பாதை கடினமானது. அதற்கு தான் அவனுக்கு அந்த மதிப்பு.
அடைந்த இலக்கை பொறுத்து சிறப்புகள் கிடைப்பதில்லை. நாம் கடந்த பாதைகளே ஹீரோ யார் என்பதை தீர்மானிக்கின்றன
-படித்தது
-இனிய காலை
Thursday 3 October 2024
இரண்டாம் உலகபோர் முடிந்தபோது ஒட்டுமொத்த ஐரோப்பிய கார் நிறுவனங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் அழிந்துபோயிருந்தனப்ரிட்டிஷ் கார் கம்பனிகளுக்கு எந்த அழிவும் இல்லை. ஏனெனில் லண்டன் கைப்பற்றபடவில்லை. அதன் கார் கம்பனிகள் மேல் குண்டுவிழவில்லை. ஆனால் ஜெர்மனி, இத்தாலி, பிரெஞ்சு கார் கம்பனிகள் சுத்தமாக அழிக்கப்பட்டு, அந்த நாடுகளே குண்டுவீச்சில் சின்னாபின்னம் ஆகியிருந்தனப்ரிட்டிஷ் கார் கம்பனிகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையையும் கைப்பற்றும் என நம்பிய சூழலில் ஜெர்மானிய, இத்தாலிய கார் கம்பனிகள் மீண்டும் உருவாக்கப்பட்டன,. பென்ஸ், ஆடி, வோல்க்ஸ்வேகன் என அவை உலகை வென்றன. ப்ரிட்டிஷ் தொழில்துறை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதுஎந்த அழிவும் இல்லை என்பதால் பழைய மாடலில், பழைய இயந்திரங்களை வைத்து, அப்படியே ப்ரிட்டிஷ் கார் துறை இயங்கியது. ஜெர்மானிய, ஜப்பானிய கார் கம்பனிகள் புத்தம் புதியதாக மீளுருவாக்கம் செய்யபட்டன. அதனால் தான் அவற்றால் உலகை வெல்ல முடிந்தது என்கிறார்கள்பேரழிவும் புதிய துவக்கமாக இருக்கலாம்-மினிமலிசம்
Wednesday 2 October 2024
மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 11கண்களிலிருந்து துாரம் பரவிக்கொண்டிருக்கிறது.2கண்ணாடி என் குடும்பத்திலொருவர். எண்ணிக்கையை அதிகரிப்பதும் குறைப்பதும் எதிரே போய் நிற்பதைப் பொறுத்தது.3சொற்களுக்கிடையே இருப்பது என்றும் சந்தேகத்திற்கிடமான இடைவெளிதான். அது சொற்களை இணைப்பதுமில்லை. இணைய விடுவதுமில்லை.சொற்களை இழந்தால் அந்த இடைவெளியில் வசிக்கலாம்.4உட்கார வரும் காற்றை அனேக நேரங்களில் மரம் துரத்தியே விடுகிறது.5கோடுகள் உள்ள தாள்களிலே நான் எழுதுவது வழக்கம். இரண்டு கோடுகளுக்கிடையில் சொற்கள் நீந்த வசதியாக இருக்கும். சோர்வடையும் நேரங்களில் மனம்போய் கோடுகளில் குந்தி சொற்களை கொத்தி உண்ணவும் வசதியாக.6தாளின் நடுவே இன்னும் உட்கார்ந்திருக்கிறது அந்தப் புள்ளி.7துாரத்தில் வருவது மழைபோல் தெரிகிறது.வீட்டுக்குள் சென்று ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டேன். மழையை இப்படிப் பார்க்க நெடுநாளாக ஆசை. நெருங்கி வருகிறது.துாரத்தில் நின்றுவிட்டு திரும்பிப் போய்விட்டது.நிலவையாவது பார்க்கலாமென வெளியில் வருகிறேன். விடிய விடிய இரவுதான் வரவேற்றது.8கண்ணாடியினுள் நான் சிக்கிக் கொண்ட நேரம் பார்த்து அதை மகன் உடைத்துவிட்டான். துண்டுகளிலிருந்து வெளியெறி என்னை ஒட்டி முழுமையாக்க வெகு நேரமானது.9முதலாவது நட்சத்திரம் மீண்டும் வானுக்கு திரும்பிவரும். அப்போது அதுமட்டுமே இருக்கும் என்றார் அவர்.10வெங்காயத்தை உரித்தனர். கடைசியில் ஏதுமில்லாது போனதும் விடவில்லை. ஏதாவது இருக்குமென காத்திருந்தனர். காத்திருக்கத் தொடங்கினர். காத்துக்கொண்டே இருக்கின்றனர்.-றியாஸ் குரானா
Being diplomatic ன்னு ஆங்கிலத்துல சொல்வாங்க..,அதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலை வர்றப்போ.,தனக்கு எந்த ஒரு தனிப்பட்ட இழப்பும் நேராம..,சொந்த விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் தூக்கி ஓரமா வச்சிட்டு.,ரொம்ப சாதுர்யமா பணிவா..,அந்த பிரச்சனைல மட்டும் கவனத்த செலுத்தி அதுக்கு ஒரு சுமுகமான நல்முடிவ தேடுறது..!! So being diplomatic is ராஜதந்திரம்..!-படித்தது
நியாண்டர்
ஈகோ தேவையா என்பது கேள்வி அல்ல. எப்போது தேவை என்பதுதான் கேள்வி
ஒரு விசயத்தை கற்றுக்கொள்கையில் தேவைப்படுவது பணிவு
ஒரு காரியத்தை செய்கையில் தேவைப்படுவது ஈகோ
"உலகிலேயே மிகப்பெரும் சிற்பி நான் தான்" என்ற ஈகோவுடன் செதுக்கினால் தான் மிகப்பெரும் படைப்புகளை படைக்கமுடியும். அந்த ஈகோவை அடைய நீங்கள் உலகின் மிகப்பெரும் சிற்பியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அந்த பெருமிதத்துடன் செதுக்கவேண்டும்
படைப்பை செதுக்கியபின் அதன் குறைகள் சுட்டிகாட்டப்படுகையில், ஒரு மாணவனின் பணிவுடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஈகோ படைக்க, பணிவு கற்றுக்கொள்ள
-படித்தது
ரூபாய் நோட்டில் காந்தி
ரூபாய் நோட்டில் காந்தி
-ஜெ முருகன்
நன்றி ஆனந்த விகடன்
இந்தியாவில் 1882-ல் தான் முதல் முறையாக, காகித ரூபாய் நோட்டுகளை புழக்கத்துக்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷார். அப்போது தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், அந்த ரூபாய் நோட்டுகளில் பிரிட்டிஷின் ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆல்பர்ட் ஃபிரெட்ரிக் ஆர்தரின் படம்தான் இடம்பெற்றது.
அதன்பிறகு 1949-ல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் இறங்கிய இந்திய அரசு, அந்த ஆண்டு வெளியிட்ட ஒரு ரூபாய் நோட்டில், சாரநாத்தில் இருக்கும் அசோகர் தூணின் படத்தை முதல் முதலில் வைத்தது. 1950-ல் சுதந்திர இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 போன்ற மதிப்பீட்டில் வெளியிட்டது இந்திய அரசு.
அதையடுத்து 1954-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயிலையும், 5,000 ரூபாய் நோட்டில் டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் (Gateway of India) படத்தையும், 10,000 ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கத்தூணும் இடம்பெற்றன. அதற்கடுத்து ஆரியப்பட்டா செயற்கைக்கோள், டிராக்டர், ஹிராகுட் அணை, தேயிலை பறிப்பது, கோனார்க் சூரிய கோயில் சக்கரம், புலி, மயில் போன்ற பல விஷயங்கள், இந்திய அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றன
மகாத்மா காந்தியின் நூற்றாண்டையொட்டி (1869-1969) 1969-ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில்தான், காந்தியின் படம் முதல் முதலில் இடம்பெற்றது. அதில் சேவாகிராம் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மை மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான படங்கள் இடம்பெற்றன. அதன் பிறகு 1987-ல் வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில்தான், தற்போது இருக்கும் காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் படமும், அவரின் தண்டி யாத்திரையும் முதன் முதலாக இடம்பெற்றது.
அதன் பிறகு வெளியான ரூபாய் நோட்டுகளில், இந்தியாவின் பல்வேறு முக்கிய அம்சங்களின் படங்கள் இடம்பெற்றன. 1996-ல் ஆண்டு முதல் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும், சிரித்துக் கொண்டிருக்கும் காந்தியின் படம் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டது.
காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் படம், 1946-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதிகளில் ஒருவரான ப்ரெடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் பிரபுவின் அருகில் நின்று கொண்டு, காந்தி வேறு யாரிடமோ பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காந்திதான் தற்போது வரை ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார். 1954-ம் ஆண்டு ரூ.1,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது இருப்பதைப் போலவே அப்போதும் வரி ஏய்ப்புகளும், பணப் பதுக்கல்களும் ஏற்பட்டது. அதனால் 1976-ம் ஆண்டு அவற்றை புழக்கத்தில் இருந்து நீக்கியது இந்திய அரசு
Tuesday 1 October 2024
கவுன்ட் - டவுன் முறை எப்படி, யாரால் தொடங்கப்பட்டது? உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியத் திரைப்பட இயக்குநர் ஃப்ரிட்ஸ் லேங் (Fritz Lang) 1929-ல் ‘சந்திரனில் ஒரு பெண்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் ராக்கெட் கிளம்புகிற காட்சியில், ‘10, 9, 8, ... 3, 2, 1, 0’ என்று எண்ணிய பிறகு, அது மேலே கிளம்பும். சினிமா இயக்குநரின் அந்தக் கற்பனைதான் இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன் ‘ரெடி... ஸ்டெடி... கோ!’தான்.-மதன்
சந்தோஷமாக இருக்க பல வழிகளில் ஒரு வித்தியாசமான வழி சொல்கிறேன். சந்தோஷமாக இருப்பதுபோல அரை மணி நேரம் நடியுங்கள். உங்களுக்கேத் தெரியாமல் சந்தோஷமாகி விடுவீர்கள். Fake it till you Make it!நாம் கற்றவை எல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு அல்ல; பிறரைப் பார்த்து. இதை ‘Vicarious Learning’ என்பார்கள். அப்பா சவரம் செய்யும் பாவனை, ஆசிரியரின் அதே வார்த்தைகள், பாஸின் உடல்மொழி என எல்லாவற்றையும் பார்த்து காப்பி அடித்துதான் உலகத்தைக் கற்கிறோம்.பிறர் உணர்வை தன் உணர்வாகக் கருதுவதை Empathy என்பார்கள். இதுதான் உறவுகளை இணைக்கும் பசை. அடுத்தவர் நிலையை உணர்தல். இது வயது வித்தியாசமின்றிக் குறைந்து வரக் காரணம் இயந்திரங்கள் மீது நமக்கு அதிகரித்துவரும் ஈர்ப்பு. எதைத் தொடர்ந்து பார்க்கிறோமோ அதில்தான் ஈர்ப்பு வரும்.நவீன தொழில் நுட்பங்களில் அடிமையாவது இது போல் தான்-படித்தது
Subscribe to:
Posts (Atom)