Wednesday, 23 October 2024

ஜீயோ டாமின்

மனிதர்கள் பொருட்களை அல்ல மாறாக பிராண்டுகளையே வாங்குகிறார்கள். ஆகவேதான் விளம்பரங்கள் குறிப்பிட்டப் பொருட்களின் சிறப்புகளைச் சொல்வதற்குப் பதிலாக பிராண்டுகளை நம் உணர்வுகளோடு ஒட்டவைக்க முயல்கின்றன.

ஒரு பிராண்டுக்கு அடிமையாபவர் (Brand Loyalty) அந்த பிராண்டோடு தன்னை அடையாளம் காண்கின்றார். அந்த பிராண்டைப் போலவே கெத்தான மனிதராகத் தன்னை உணர்கிறார். அதனால்தான் உள்ளாடையே ஆனாலும்கூட (அதன் பிராண்டை) வெளிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பிட்டப் பொருள் (product) கொடுக்கும் சவுகரியத்தைவிட அதன் பிராண்ட் அடையாளம் வெளித்தெரிவதே முக்கியமானதாக இருக்கிறது. இந்த வெளிக்காட்டப்படும் உள்ளாடையில் அதன் பிராண்ட் தெரியவில்லையென்றால் அதற்கு உண்மையில் எந்த சமூக மதிப்பும் இல்லை. அதற்கேற்றார்போல்தான் அந்த கால்சட்டைகளும் திட்டமிட்டே low hip ஆக வடிவமைக்கப்படுகின்றன.

இந்த Brand Loyalty, குழந்தைப் பருவத்திலிருந்தே விளம்பரங்கள் மூலமும் சந்தைப் பொருளாதாரம் கற்பிக்கும் மதிப்பீடுகள்மூலமும் நம் ஒவ்வொருவரிடமும் நச்சாக ஊட்டப்பட்டிருக்கிறது. பத்து வெவ்வேறு பிராண்ட் பொருட்கள் இருக்கும் இடத்தில், எதிர்பார்க்கும் சில ஆப்ஷன்கள் இல்லையென்றாலும் தனது பட்ஜெட்டைவிட விலைசற்று அதிகமாகவே இருந்தாலும்கூட தான் விசுவாசமாக இருக்கும் பிராண்டை கண்ணை மூடிக்கொண்டு ஒருவரை தேர்ந்தெடுக்கச் செய்வது (loyalty beyond reason) இந்த பிராண்ட் அடிமைத்தனம்தான்.

இதையே, 'ஹெட் அண்ட் ஷோல்டர்' ஷாம்பூ பிராண்டுக்கு அடிமையான ஒருவர் தன் தலை முழுமையாய் வழுக்கையானா பின்பும்கூட (நான் இல்ல 😝) அந்த பிராண்டைத் தொடந்து பயன்படுத்தும் அடிமையாய் இருக்கிறார் என்கிறார் பார்ப்பர்.

-ஜியோ டாமின்

No comments:

Post a Comment