Wednesday, 2 October 2024

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 11கண்களிலிருந்து துாரம் பரவிக்கொண்டிருக்கிறது.2கண்ணாடி என் குடும்பத்திலொருவர். எண்ணிக்கையை அதிகரிப்பதும் குறைப்பதும் எதிரே போய் நிற்பதைப் பொறுத்தது.3சொற்களுக்கிடையே இருப்பது என்றும் சந்தேகத்திற்கிடமான இடைவெளிதான். அது சொற்களை இணைப்பதுமில்லை. இணைய விடுவதுமில்லை.சொற்களை இழந்தால் அந்த இடைவெளியில் வசிக்கலாம்.4உட்கார வரும் காற்றை அனேக நேரங்களில் மரம் துரத்தியே விடுகிறது.5கோடுகள் உள்ள தாள்களிலே நான் எழுதுவது வழக்கம். இரண்டு கோடுகளுக்கிடையில் சொற்கள் நீந்த வசதியாக இருக்கும். சோர்வடையும் நேரங்களில் மனம்போய் கோடுகளில் குந்தி சொற்களை கொத்தி உண்ணவும் வசதியாக.6தாளின் நடுவே இன்னும் உட்கார்ந்திருக்கிறது அந்தப் புள்ளி.7துாரத்தில் வருவது மழைபோல் தெரிகிறது.வீட்டுக்குள் சென்று ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டேன். மழையை இப்படிப் பார்க்க நெடுநாளாக ஆசை. நெருங்கி வருகிறது.துாரத்தில் நின்றுவிட்டு திரும்பிப் போய்விட்டது.நிலவையாவது பார்க்கலாமென வெளியில் வருகிறேன். விடிய விடிய இரவுதான் வரவேற்றது.8கண்ணாடியினுள் நான் சிக்கிக் கொண்ட நேரம் பார்த்து அதை மகன் உடைத்துவிட்டான். துண்டுகளிலிருந்து வெளியெறி என்னை ஒட்டி முழுமையாக்க வெகு நேரமானது.9முதலாவது நட்சத்திரம் மீண்டும் வானுக்கு திரும்பிவரும். அப்போது அதுமட்டுமே இருக்கும் என்றார் அவர்.10வெங்காயத்தை உரித்தனர். கடைசியில் ஏதுமில்லாது போனதும் விடவில்லை. ஏதாவது இருக்குமென காத்திருந்தனர். காத்திருக்கத் தொடங்கினர். காத்துக்கொண்டே இருக்கின்றனர்.-றியாஸ் குரானா

No comments:

Post a Comment