இருள் பின்வாங்கி விலகும் தகவல் முதன்முதலில் எட்டியது ஒரு பறவையை. அது தன் கூட்டத்தாரைக் கூவி எழுப்பியது. பறவைக் கூட்டத்தின் ஓசையில் மிருகங்கள் விழிப்புக் கொண்டன. ஒளியை மறைத்திருந்த மாயக் கரம் விலகிக்கொண்டது. வெளிச்சம் சிறுகக் சிறுக வஸ்துக்களாக மாறிக்கொண்டே வருகிறது. கம்பிக் கிராதியாக. ஆல மரமாக ஊருணிக் கரையாக. வாசல் தெளிக்கும் பெண்களாக. பார்வை கொள்ளும் கண்களாக. வெளிச்சம் தன் வல்லிசையைத் தொடங்கி விட்டது. வெளிச்சம் யோசனைகளாக மாறுகிறது. இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில் மீட்டெடுக்கிறது பொழுது.-யுவன் சந்திரசேகர்
No comments:
Post a Comment