Sunday, 29 June 2025

120


#கற்கை_நன்றே_120

Experience is not sales.That is available only true experiment

அடிக்கடி சிக்கலுக்குள்ளாவது சொற்களுக்கு இடையேயும் மனிதர்களுக்கு இடையேயும் ஏற்படும் புரிதல்தான்.அந்தந்த சொற்கள் அதனதன் அர்த்தத்தை வெளிப்படுத்திகிறது.நாம்தான் அதன் மீது தவறான புரிதல் எனும் சாயத்தைப் பூசுகிறோம்.

வியாபாரத்தில் கூட்டாளிகளாக உள்ள இருவர் சின்ன படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென கப்பல் நிலைதடுமாறி நீரில் விழுந்தனர். முதலாமவர் நீந்த ஆரம்பித்தார். இரண்டாமவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். முதலாவர் நீயாகத் தாக்குப் பிடிப்பாயா? என்ற பொருளில் Can you float alone?, எனக் கேட்க.. இரண்டாமவர் கோபத்துடன் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் நீ வியாபாரம் பேசுகிறாயா?, என்பார்.

Can you float a loan என்பது வியாபார மொழி.அதில் float எனும் வார்த்தைக்கு என்ன பொருளோ அதை தண்ணீரில் இருப்பவர் அப்படி புரிந்து கொண்டார்.எந்த ஒரு நிலையிலும் எதைச் சொன்னாலும் அவனவன் அவனவனுக்குத் தெரிந்த மொழியில்தான் அதை எடுத்துக் கொள்கிறான். பிறர் என்ன 
சொல்ல வருகிறார்கள் என்பதை நம்மில் பெரும்பாலோர் பெரும்பாலான சமயங்களில் புரிந்து கொள்வதே இல்லை. நம்மால் எப்படிப் புரிந்து கொள்ள முடியுமோ அப்படித்தான் புரிந்து கொள்கிறோம். நாம் பார்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. நாம் பார்க்க முடிந்ததைத்தான் பார்க்கிறோம்.

மனதில் ஏற்கனவே நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கற்பனைக்கு மட்டுமே சிலவற்றை கேட்கிறோம். பலருக்கு கேட்பதற்கு பொறுமையின்றி அவர்களாகவே ஒரு யூகத்திற்கு வந்துவிடுகின்றனர்.
அந்த ஊகம் அவர்மேல் உள்ள நம் பார்வையை மட்டுமே காட்டுகிறது.  மேலும் அவர் கூறியதை செவிமடுப்பதில்லை.

சிலப்பதிகாரத்தில் கொண்டுவா என்று சொன்னது கோவலனை கொன்றுவா எனக்கேட்டதால் காவலனும் அரசனின் ஆணையை நிறைவேற்றினார். வள்ளுரோ கனியிருப்பக் காய் கவ்ர்ந்தற்று என சொல்லை எவ்வாறுபேச வேண்டும் என எடுத்துரைக்கிறார்.ஆகவே புரிதல் தான் தற்போது உள்ளவற்றில் தலையாய பிரச்சனையாய் உள்ளது.

"The Other Pair" எனும் எகிப்திய குறும்படம் இரு சிறுவர்களை பற்றியது. காந்திய கதையை மையப்படுத்தியது.ரயில் நிலையத்தில் பிய்ந்து போன செருப்புடன் நடந்து செல்லும் சிறுவன் வருவோர் போவோரின் காலணிகளை ஏக்கத்துடன் காண்கிறான். அப்போது ரயிலுக்கு காத்திருந்து ஏறும் சிறுவன் ஒரு ஷீ வை விட்டுவிட்டு ரயிலில் ஏறுகிறான். ரயில் புறப்படுகிறது. இப்போது காலணி தேவைப்படும் சிறுவன் அதைப்பார்த்து ஒரு நிமிடம் மகிழ்ந்தாலும்..அதை எடுத்துக் கொண்டு அந்த ரயிலின் பின்னால் ஓடுகிறான். பலமுறை முயன்றும் தோற்றுப் போகிறான். ஆனால் ரயிலில் இருக்கும் சிறுவனோ தனது மற்றொரு காலணியை கழட்டி இவனை நோக்கி வீசுகிறான். அழகான புரிதலை இறுதிக்காட்சி காட்டுகிறது. புரிதல் இயல்பாய் மலர்தலை இக்குறும்படம் காட்டுகிறது.

நாம் புரிதலை செய்ய மெனக்கெடுகிறோம்.புரிந்து கொள்ள நாமே தடையாக இருக்கிறோம்.இன்றும் பலர் எது சொன்னாலும் சரிவர கவனமின்றி கேட்டுவிட்டு.. புரியல என்பது மட்டும் தெளிவாக கேட்கின்றனர். ஒரு விஷயத்தை சொல்வோரும் எளிமையாக கூறாமல் புதிர் போல் சொல்கிறார்கள்.இருவருக்குமிடையே புரிதல் வர மறுக்கிறது

புரிதல் என்பது பிறர் கூறும்வரை நாம் உள் நுழையாமல், நம் கருத்தினை முன் வைக்காமல், பொறுமையாய் செவி மடுத்தாலே பாதி புரிதல் ஏற்பட்டுவிடும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment