நீங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கவும் நீச்சலடிக்கவும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒருபோதும் ஒரு மீனைப்போல உங்களால் மூச்சுவிட முடியாது.
நீங்கள் ஆடு மாடுகள்போல சைவ உணவுக்கு மாறலாம்; ஆனால் ஒருபோதும் உங்களால் ஒரு தாவர உண்ணியாக (herbivorous) மாற முடியாது.
உங்கள் உணவுப் பழக்கங்களோ, கலாச்சாரமோ, வேலைகளோ, வாழ்வு முறைகளோ நவீனமாகியிருப்பது உண்மைதான். ஆனால், உங்கள் உடலும், மூளையும் இயல்பூக்கங்களும் இன்னும் குகை மனிதனுடையவையாக இருக்கின்றன. அவற்றால் ஒருபோதும் உங்கள் நவீன உலகுக்குத் தகவமைந்துகொள்ள முடியாது.
கொழுப்பும் கலோரியும் மிகுந்த உணவைக் காணும்போது இன்னும் நீங்கள் ஒரு குகை மனிதன் போலவே நடந்து கொள்கிறீர்கள். இதுதான் உங்கள் இறுதி உணவு என்பதுபோல உண்கிறீர்கள். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது என்பதை உங்கள் பகுத்தறிவு அறிந்திருந்தாலும், பரிதாபகரமாக உங்கள் இயல்பூக்கங்களை மீறுமளவிற்கு அது பலமிக்கது அல்ல.
நீங்கள் சமூக வாழ்வு வாழும் விலங்குகளின் வழித்தோன்றல்கள்; உங்களது உடலும் மனமும் சொகுசான ‘office cabin’களில் பிழைத்திருக்கும்படி பரிணமித்தவை அல்ல; சமூக வலைதளங்கள், உங்களின் ஆதிமனித இயல்பூக்கமான 'சமூக வாழ்வை' ஒருபோதும் பதிலீடு செய்யாது.
நீங்கள் மாட மாளிகைகளில் குடிகொண்டிருந்தாலும் உங்களின் இயல்பூக்கம் ஒரு மரத்தினடியில் இளைப்பாறவே ஏங்கிக்கொண்டிருக்கும். உங்கள் கண்கள் ஒரு நீர்ச்சுனையையோ தெள்ளிய நீரோடையையோ காண ஏங்கிக் கொண்டிருக்கும். இதனை மறைக்க உங்கள் வீட்டின் உள்ளலங்காரங்களிலும் சுவர்களிலும் பசுமையைக் கொண்டுவர நீங்கள் முயல்கிறீர்கள். அது ஒருபோதும் உங்கள் உள்ளார்ந்த தாகத்தைத் தணிக்காது.
Book: Civilized to Death – The Price of Progress (தளுவல்)
No comments:
Post a Comment