#கற்கை_நன்றே_121
"பத்து நாள் யுத்தம் புரிவதைவிட பத்து வருஷம் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது"
-குரேஷிய பிரதமர்
சமீபத்தில் போர் செய்திகளே நம்மை அதிகம் கவலை கொள்ள வைக்கின்றன.உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-பாலஸ்தீனம், இஸ்ரேல் ஈரான என போர் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் எழுதிய கட்டுரை ஒன்று போர் குறித்த செய்திகளை கூறுகிறது.
இரண்டு புகைப்படங்கள்
இரஷ்ய உக்ரைன் போரில் சேதமடைந்த கிரிமியா பாலத்தின் புகைப்படமும், இறந்துபோன ஒரு திமிங்கலத்தின் உடல் மீது நின்ற வண்ணம் ஒரு பனிக்கரடி அதன் மீதங்களைத் தின்னும் மற்றொரு புகைப்படமும்.
முதல் நவீன போராகக் குறிப்பிடப்படுவது அமெரிக்க உள்நாட்டுப் போர் புகைப்படக் கருவியால், போர்க்களக் காட்சிகள் ஆவணப்படுத்தப்பட்ட முதல் போர் அதுவே. அலெக்ஸாண்டர் கார்ட்னர் (Alexander Gardner) எனும் புகைப்படக் கலைஞரின் புகைப்படங்களில் போரின் அவலத்தை மிக நெருக்கமாகக் காட்டக்கூடிய புகைப்படமாக நான் கருதுவது..
The Home of The Rebel Sharpshooter கற்களின் மீது சார்த்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய ரைபிள் எத்தனை தனிமையான. வீணான ஒரு மரணத்தின் முன் விழிப்போடு. ஒரு வளர்ப்பு நாயைப் போலக் காத்திருப்பதைக் காணலாம். அடுத்த மனிதன் அந்த ரைபிளை சுமப்பான். சுடுவாள். ஆனால், அதைப் போன்ற முடிவை எட்டாமல் பிழைத்திருந்தால் அவனது வாழ்நாளில் அத்துப்பாக்கி ஒரு வெற்றிச் சின்னமாக மாறும். போர் வெற்றிக்குக் காரணமானதாக அல்ல. அவனது உயிரைக் காத்த துணைவனாக. ஒரு போரின் முடிவில் ஆயுதங்களுக்கும், அதில் ஈடுபட்ட மனிதர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியில் ஆயுதங்கள் ஓய்வெடுக்க மனிதர்கள் போரின் சுமையைத் தொடர்ந்து சுமப்பார்கள்.
பாதிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் அதனை ஒரு போரின் வழியாகச் செய்ய முடியுமா?என முடித்திருப்பார்
நிரந்தர அமைதிக்கு என்ன வழி?' என்று கேட்டபோது,'எந்த நேரமும் போருக்குத் தயாராக இருப்பதுதான் ஒரே வழி' என்றார் சர்ச்சில். சமாதானத்துக்கு வழி கேட்டால், இவர் சண்டைக்கு வழிசொல்கிறாரே என்று நினைத்தார்கள். எண்ணிப்பார்த்தால், சர்ச்சிலின் விடைக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் உள்ளது. திருப்பி அடிப்போம் என்று எதிரி நம்பினால்தான், நம்மை அடிப்பதற்கு அவன் முன்வரமாட்டான். பணிந்து போகிற வனையும், குனிந்து கொடுக்கிறவனையும் தொடர்ந்து தாக்குகிற ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
போர் முடிவின் வலி குறித்து
கவிஞர் மஹ்மூத் தர்விஷின் வரிகள்
The leaders will shake hands.
The old woman will keep waiting for her martyred son.
That girl will wait for her beloved husband.
And those children will wait for their heroic father.
I don’t know who sold our homeland
But I saw who paid the price.”
போரின் முடிவில்
இரு நாட்டின் தலைவர்கள் கைகளை குலுக்கிக் கொள்வார்கள்.
வயதான ஒரு அன்னை வீரமரணம் அடைந்த தன் மகனை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.
ஒரு பெண், தன் காதலனான கணவனை எதிர்பார்த்திருப்பாள்.
பிள்ளைகள், தங்கள் வீரத் தந்தையை எதிர்நோக்கி இருப்பார்கள்.
என் நாட்டை யார் விற்றார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை —
ஆனால் அதற்கான விலையைக் கொடுத்தவர்களை நான் கண்டேன்."
என்று முடித்திருப்பார்
அமைதியே விரும்புவோம்
வரலாற்றில் இடம்பிடிப்போம்
எண்ணங்களால்..
உயிரிழந்தோரின் எண்ணிக்கைகளாக அல்ல
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment