#Reading_Marathon2025
#25RM055
Book No:83/100+
Pages:-280
வாழ்வே ஒரு மந்திரம்
-தமிழருவி மணியன்
எல்லாம் மதங்களும் நம்பிக்கையின் மேல் தான் எழுப்பப்பட்டுள்ளன -ரஸ்ஸல்
நீங்கள் கடவுளை நம்பவர்களா அல்லது கடவுளின் கொள்கைகளை கடவுள் சொன்ன கோட்பாடுகளை மதிப்பவரா? ஒவ்வொரு மதமும் எவ்வாறு மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை ,அந்த மதங்களின் தத்துவங்கள் என்ன? அவை மக்களுக்கு கூறியவை என்ன? என்பதுதான் இந்த புத்தகத்தின் ஏழு இயல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.
எந்த மதங்களையும் உயர்த்தி பிடிக்காது.. ஒவ்வொரு மதங்களின் சமய தத்துவங்களை அவ்வளவு எளிதாக மக்களுக்கு புரியும்படி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். எந்த ஒரு கொள்கைகளைப் பற்றி பேசும் போதும், மனித மனங்களை பற்றி பேசும்போதும், அனைத்து மதங்களின் சாரங்களையும் ஒருங்கே தொகுத்து கொடுத்திருக்கிறார். அதோடு சமயப் பெரியவர்கள் கூறிய சொற்பொழிவுகளையும், உபநிஷங்களையும் ஜென் கதைகளையும், புத்த சமண கோட்பாடுகளையும் ,பைபிள் வசனங்களையும், குர்ஆனில் முகமது நபி சொல்லிய கருத்துக்களையும், இந்து மத கொள்கைகளையும் ஒருங்கிணைத்து மதங்கள் அனைத்தும் மனித மேம்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டவை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
இஸ்லாம் என்னும் அரபுச் சொல்லுக்கு அடைக்கலமாதல், சரணடைதல், தன்னை முழுமையாய் இறைவனிடம் ஒப்படைத்தல் என்று பொருள். அதனால்தான் ஒவ்வொரு முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உங்களுக்கு அமைதி கிட்டுவதாக (அஸ்ஸலாமு அலேகும்) என்று கூறுகின்றனர். ஐந்து அடிப்படை கடமைகளை கூறும் இஸ்லாம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஐந்தாவது கடமை என்று கூறுகிறது.
பீஷ்மர் தருமனுக்கு இல்லற தர்மத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறார் அனுப்புறாவும் பெண் புறாவும் கூடி வாழும் காட்டில் பெண் புறா வேடன் கூண்டில் சிக்கியது. அதனை அறிந்த ஆண் புறா வருந்தியது. என்னை கூண்டில் வைத்து அடைத்திருக்கும் வேடன் குளிராலும் பசியாலும் வாடி இருக்கிறான். நாம் வாழும் இடத்தில் அவன் பசியோடு இருப்பது தவறு அதனை போக்குவது தர்மம். ஆகவே வேடன் கேட்டுக் கொண்டதற்காக காய்ந்த சருகுகளை பொறுக்கிக் கொண்டு வந்து தானே உணவாகவும் நெருப்பில் விழுந்தது. ஆண் புறாவின் தியாகம் அறிந்து வேடன் கூண்டில் இருந்த பெண் புறாவை விடுவித்ததால் கணவனை விட உயர்ந்த செல்வம் இல்லை என்று கூறி பெண் புறாவும் அந்த நெருப்பில் விழுந்தது.
ஒருவருக்கு உதவ வேண்டும் என எண்ணினால் தன்னிடம் இல்ல தகுதியுள்ள பொருட்களை மட்டும் தந்து வேண்டும் என்பது தர்மத்தின் விதி என்று கூறுகிறார்.
இறைவனும் மனிதர்களும் உரையாடும் போது தங்கள் படைப்பில் வலிமை கொண்டது பாறை தானே என்று கேட்டார். இல்லை. அந்தப் பாறையை உடைத்து எறியும் இரும்பை நானே படைத்திருக்கிறேன் என்றான் இறைவன். அப்படியானால் இரும்பு தான் வலிமையுள்ளதா? இல்லை. இரும்பயே இளகச் செய்யும் நெருப்பை தந்தவன் நான்தான். அப்போது நெருப்பு தான் வலிமை மிக்கதா ?இல்லை .நெருப்பை அணைக்கும் தண்ணீரையும் நான்தான் பயன்படுத்தினேன். அப்போது தண்ணீர் தான் வலிமையுள்ளதா? இல்லை தண்ணீரை தத்தளிக்க செய்யும் காற்றை நான் தான் கொடுத்துள்ளேன். அப்படியானால் உன் படைப்புகளில் மிகவும் வலியது எது? என்பதற்கு துயரற்றவனை கண்டதும் அவன் தேவையறிந்து இடக்கைக்குத் தெரியாமல் வலக்கையால் வழங்கும் இதயம் உள்ளவனே என் படைப்பில் வலிமையுள்ளவன் என்கிறான் இறைவன்.
பெறுவதிலோ வைத்திருப்பதிலோ இல்லை தருவதில் தான் சந்தோசம் இருக்கிறது என்கிறார் ஹென்றி டிரமன்ட் .பணத்திற்கு மூன்று விதமான நிலைகள். ஒன்று அடுத்தவருக்கு தானம் செய்வது உத்தமம். தானே அனுபவிப்பது மத்திமம் .எவருக்கும் தராமல் அழிந்து போவது அதமம் என்கிறது நீதி சதகம்.மற்றவர்களுக்கு நன்மை செய்வது கடமையன்று அது ஒரு சந்தோசம்.அது உங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறது.
பண்பிற் சிறந்த பெருமக்கள் ஆணையிட்டுக் கூறிய வாய்மொழிகள் அனைத்தும் மந்திரங்களே என்கிறது தொல்காப்பியம். இந்த மொழியில் இருந்தால்தான் மந்திரங்கள் என்று எந்த வரையறையும் இல்லை ஒரு எண்ணத்தை வலுவாக்குவதற்கு அவ்வண்ணத்தோடு நெருங்கிய தொடர்பு உடைய சொல்லை அடுத்தடுத்து கூறியதையே மந்திரம் என்கிறார் மறைமலை அடிகள். வாழ்வை நெறிப்படுத்துவதற்கு முறைப்படுத்துவதற்கும் சரி செய்யப்படுவது போல் மனிதனுக்கு தேவையான அற்புதமான சிந்தனைகளை இந்த நூல் முழுவதிலும் மேற்கோளாகவும் உவமைகளாகவும் தங்களுடைய கருத்துக்கு வலுப்படுத்தும் விதமாகவும் தமிழருவி மணியன் அவர்கள் கூறியுள்ளார்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment