Saturday, 11 July 2026

39



#Reading_Marathon2026
#26RM009

Book No:39/150+
Pages:-256



 அவன் பெயர் சொல்
-ரமேஷ் பிரேதன்

 
தமிழ் நவீன இலக்கியத்தில் தனித்துவமான குரலாக அறியப்படும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன், மனித மனத்தின் சிக்கல்கள், சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள், அதிகார அமைப்புகளின் வன்முறை ஆகியவற்றை தனது படைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்கிறார். அவரது அவன் பெயர் சொல் 

கதைக்களம் பாண்டிச்சேரி.
நான் லீனியர் முறையில் கதை துவங்குகிறது. வாழ்க்கையில் மிகப் பெரிய வலி எது தெரியுமா? வாழ் நாள் எல்லாம் தனக்கு விதிக்கப்பட்ட மதத்தைச் சுமந்து திரிவது, சாதியை சுமப்பது, அதிலும் தீண்டத்தகாதவனாக இருந்தால் அதன் அடையாளத்தை சேர்ந்து சுமப்பது என மகள் சூன் யதாவுக்கு கடிதம் போல் மின்னஞ்சல் எழுதுகிறார். தையல்கார தந்தையால்
நோன்புக் கஞ்சிக்கு ஆசைப்பட்டு பத்தாம் வயதில் ராமசாமி எனும் நான் மதம் மாற்றம் செய்யப்பட்ட ரஹ்மான் ஆகிறார்.

பாய் வியாபாரம் செய்து முதலாளியாக உயர்ந்த ரஹ்மான் தன் மனைவி பெர்னதேத்தை மணந்த அனுபவத்தை ப்ளாஷ்பேக்கில் சொல்கிறார் .பிரெஞ்சு தேசத்தை  சேர்ந்தவள்.தமிழ் பண்பாட்டுடன் ஒட்ட முடியாமல் உன்னை தூக்கிக் கொண்டு பிரிகிறாள்.மகள்.பிறந்த மூன்று மாதத்தில் இறந்துவிடுகிறாள்.
 இருப்பையே மறுப்பதற்கு ஒப்பானது என்பதை நாவல் பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது.

சாராயக்கடை பற்றிய ஆவணப் படம் எடுப்பதிலும்,தீவிர எழுத்து வேட்கையிலும் இருக்கும் ரஹ்மான் உரையாடல், உள்ளுணர்வுகளை, ஒட்டகம் போன்ற குறியீடுகள் மூலமாக கதையை நகர்த்துகிறார்.
மனைவி அருகில்.இருப்பதைப்போல்
பல.இடங்கள் வருகிறது. இறந்து போன மனைவியுடன் பேசுவது போல் பித்தி நிலைக்கு உள்ளான தந்தையாக கடிதம் எழுதுகிறார். மகளின் ஓரிரி மின்னஞ்சலை பற்றி சொன்னாலும், படிக்கிற நமக்கே இப்பிடி இருக்கே பாவம் பொன்னுனு பரிதாபப்பட வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு கடிதமும் ஏதோ சொல்றார்னு போகுது.

தான் எழுதும் நாவலை பகிர்கிறார். முக்கிய காட்சிகளை உரையாடுகிறார்.மழை குறித்த  செய்திகளை, சக நண்பனை இறப்பு குறித்து ஒவ்வொன்றையும் பகிர்கிறார்.

இறுதயாக மகள் எழுதும் ஒரே மின்னஞ்சல் இப்புத்தகத்தின் இறுதியில் வருகிறது. ஆரம்பத்தில் இருந்து தொடங்கிய கேள்விகள் அனைத்திற்கும் விடையாக அமைகிறது.

ஆண்குறி, புணர்வு, பெண் குறித்த வர்ணனைகள ஓவர் டோஸாக உள்ளது.

*மழை மனதில் பல திறப்புகளை உண்டாக்குகிறது

*பைத்தியங்கள் பிறப்பதும் தெரிவதுமில்லை, இறப்பதும் திறப்பதுமில்லை

*வார்த்தைகள் அவளை எனக்கு வெளிப்படுத்திவிட ஒன்றையொன்று முட்டிக்கொண்டு மூச்சு திணறுகின்றன
 
பெயர்" என்பது ஒரு குறியீடாக முன்வைக்கப்படுகிறது.
நினைவுகளின் பயணம்
கதாபாத்திரங்களின் கடந்தகால அனுபவங்கள், மறக்கப்பட்ட சம்பவங்கள், மன உளைச்சல்கள் ஆகியவை நினைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன.அடையாளத்தை இழந்த மனிதனின் உளவியல் போராட்டமாக நாவல் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment