#reading_marathon2026
#26RM009
Book No:40/150+
Pages:-272
பூமியெங்கும் புத்தக வாசம்
-மு.முருகேஷ்
"நேர்காணல் என்பது கேள்வி–பதில் நிகழ்வு மட்டுமல்ல; ஒரு மனிதனின் திறமை, ஆளுமை, மனப்பான்மை ஆகியவற்றை அறிய உதவும் கண்ணாடியாகும்."அந்த வகையில் தி இந்து உதவி ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷ் அவர்களின் ஆளுமை நேர்காணல்களும் புத்தகம் குறித்த பிரபலங்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.
சரியான கேள்விகள், சரியான மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன.'வாழ்க்கைங்கிறது எப்பவுமே யதார்த்ததிலிருந்து தானே புனைப்படும். அங்கிருந்து பூக்கும் விஷயம் தான் சரியானது என பூமணி சொல்கிறார்.தனது சேமிப்பிலிருந்த 16 இலட்சத்தில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் அறக்கட்டளையில் 540 ஆவணங்களை தொகுத்த மணவை முஸ்தபாவின் முயற்சி பாராட்டும்படி இருந்தது.
தொழிலதிபர்கள், கைவினை கலைஞர்கள்,தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மாற்றுத் திறனாளிகள், அனைவரின்பேட்டியும் முன் மாதிரியாக இருந்தது.
நீர் நாய் ஆர்வலர்களின் பேட்டி ஆச்சர்யமாய் இருந்தது. பார்வையற்றவர்களின் பாதையில் நம்பிக்கை ஒளி ஏற்றும் பேராசிரியர் ரகுராமன். ஓய்வுபெற்ற போக்குவர்த்து துறை அலுவலர் பழனியப்பன் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அதில் சில விஷயங்களை சொல்கிறார்.ஓட்டுநர்கள் பசியுடன் வாகனம் இயக்க கூடாது, தூக்கமின்மை, மிகுந்த மன அழுத்தத்தில் வாகனம் இயக்காமை என்கிறார்.இரட்டை மலை சீனிவாசனின். வரலாற்றை எழுதிய அவரின் கொள்ளுப்பேத்தி நிர்மலா அருள்பிரகஷின் பேட்டி தாத்தாவின் வரலாற்றை அறிய உதவியது.
நேர்காணலில் முதல் பதில் முக்கியமல்ல; ஒவ்வொரு பதிலிலும் வெளிப்படும் நேர்மையே முக்கியம்.
கரிசல் காட்டு உழைப்பாளிகளின் வாழ்வை அசலாக பதிவு செய்த தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவஞ்சலியில் அவர்குறித்த செய்தியை அறிய முடிந்தது.
நேர்காணல் சிந்தனையையும் செயல்பாட்டையும் மதிப்பிடும்.. அவ்வகையில் பிரபல வாசிக்கும் அரசியல் தலைவர்களின் வாசிப்புபனுவத்தை பகிர வைத்துள்ளார். சீமானின் வாசிப்புக்கு சுப.வீ, மணிவண்ணன் போன்றோர் உந்து சக்தியாக விளங்கியதையும் தன்னை செதுக்கிய தாய், தமிழர் மீதான பண்பாட்டு படையெடுப்புகள், அசுரன், மெளனத்தின் சாட்சிகள் ஆகிய நூல்களை குறிப்பிடுகிறார்.
புத்தக வாசிப்பை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.. மொழிப்பெயர்ப்பு நூல் பிணந்தின்னிகள், நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை, குறிப்பிடுகிறார்.
ஒருநாளில் 3 மணி நேரம் நாளிதழ் படிக்க செலவிடுவதாக கி.வீரமணி குறிப்பிடுகிறார். சிறுவயதில் காண்டேகரின் புத்தகங்கள், பெரியாரின் தத்துவ விளக்கம் நூல்களையும் குறிப்பிடுகிறார்.
கேரளா கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலை பலர் குறிப்பிட்டதுபோல பார்த்திபனும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுஜாதாவின் எழுத்துககள் தன்னை பாதித்ததாக கூறியுள்ளார்.ஜெயந்தனின் பாவப்பட்ட மனிதர்கள் கதையை படமாக எடுக்க முயன்று முடியாமல் போனதையும் சொல்லியுள்ளார்.
வண்ணதாசனின் புத்தகமொன்று எல்லாவீட்டிலும் இருந்துவிட்டால், இந்த உலகின் பிரச்சினை என்பதே இருக்காதே என்கிறார் இயக்குநர் சசி லாசராவின் எழுத்துக்களை உள்வாங்கும் கர்வம் தனக்குள் வந்தத எண்ணி மகிழ்கிறார்.
/ ஒவ்வொரு துளிக்குள்ளும்
உறங்கிக் கிடக்கிறது
ஓராயிரம் துளிகள்/ எனும் கவித
தனக்குள் எண்ணங்களை மூழ்கடிக்க வைத்ததாக தேவதச்சனின் கவிதையை சொல்கிறார்.
வானத்தைப் போலத்தான் புத்தக வாசிப்பும் விசாலமானது.ஒரு மனிதனால் எப்போதும் சிறு வட்டத்திற்குள் வாழமுடியும் ஆனால் புத்தகம் வாசிப்பவனுக்கு எல்லை இல்லை என்கிறார் பாக்யராஜ்.
"நல்ல நேர்காணல், சரியான நபரை மட்டுமல்ல; சரியான வாய்ப்பையும் உருவாக்குகிறது.ஒரு நேர்காணலின் வெற்றி, கேட்கப்படும் கேள்விகளில் அல்ல; பெறப்படும் உண்மையான பதில்களில் உள்ளது. ஒவ்வொரிவரின் பேட்டியிலும் அறிவை மட்டும் அளவிடாமல் அணுகுமுறையும் அளவிடப்படுகிறது
செயற்பாட்டாளர்களின் பேட்டிகள்
தொடர்புத் திறன்,பேசும் விதம், கருத்துகளை வெளிப்படுத்தும் திறன், தன்னம்பிக்கை போன்றவற்றை மதிப்பிட முடிகிறது.வாசிக்கும் நமக்கும் உத்வேகம் கொடுக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment