Book-81
மலர்மஞ்சம்
-தி.ஜானகிராமன்
மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளையும், உறவுகளுக்குள் தோன்றும் விருப்பு வெறுப்புகளையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் அழகிய மொழிநடையில் வெளிப்படுத்தியவர். அவரது படைப்புகளில் உளவியல் நுட்பமும், கலைநயமிக்க வருணனைகளும், இயல்பான உரையாடல்களும் சிறப்பிடம் பெறுகின்றன.
மலர் மஞ்சம் என்ற தலைப்பே மலரின் மென்மையையும், வாழ்வின் அழகையும் நினைவூட்டுகிறது. தி. ஜானகிராமனின் படைப்புலகைப் புரிந்துகொள்ளும்போது, மனித உறவுகளின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி அவற்றின் உள்ளார்ந்த உணர்வுகளை ஆராயும் அவரது தனித்துவமான அணுகுமுறை சித்தரிக்கப்பட்டுள்ளன
மலர் மஞ்சம்’ நாவலின் மையக்கதை, தந்தை-மகள் இடையிலான ஆழமான பாசம், மரபு சார்ந்த வாக்குறுதி மற்றும் பெண்ணின் சுயசார்பு/சுதந்திரத்திற்கு இடையிலான மனப்போராட்டங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது:
ராமையா நாவலின் மையக் கதாபாத்திரம். காமாட்சி(25)பிரசவத்தின் போது இறந்துவிட்டார்., கங்கா சில காலத்தில் இறந்துவிட்டார்., பங்கஜம்,காய்ச்சல் இறப்பு
அகிலாண்டம் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டார்கள். ஆகிய நான்கு மனைவிகளையும் இழந்தவர். தனது நான்காவது மனைவி அகிலாண்டத்திற்குப் பிறந்த ஒரே பெண் குழந்தையான பாலியை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்குவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர்.தன் சகோதரி வடிவுக்கு பிள்ளை இல்லாததால் அங்கேயே இருந்து வளர்க்கும் பொறுப்பு கிடைத்துவிட்டது.
ராமையா நன்றாகப் பாடுவார். வைத்தீஸ்வரன் கோவில்க்கு அடிக்கடி செல்பவர்.பூர்வீகமாய் இருக்கும் மீனாட்சி கொல்லையை செப்பனிட்டு பராமரித்து வந்தார்.பாலம்மாள் என்கிற தனது மகள் பாலி அறிவுக்கூர்மையுடன் வளர்கிறாள்.
அகிலாண்டத்தின் மரணத் தருவாயில் அவளுக்குக் கொடுத்த வாக்கின்படி, பாலியைத் தங்கராஜனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறக்கும் தருவாயில் ராமையாவிடம் சொல்ல.. குழந்தை வளர வளர அது பற்றி பேச தயங்குகிறார்.
தனபாக்கியம்- வையன்னா, பிரச்சனையில் ராமையாவின் தோட்டம் பாதிக்கப்படுகிறது. கிராமத்து மனிதர்களின் பேச்சுகளாலும் சலசலப்புகளாலும் ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்க்க, தன் நண்பர் கோணவாய் கிருஷ்ண நாயக்கரின் உதவியுடன் தஞ்சாவூருக்கு மகளுடன் குடிபெயர்கிறார்.அங்கு புதிதாய் சேர்ந்த பள்ளியில் நடைபற்ற நடன நாடக நிகழ்ச்சி பார்ப்பவர் அனைவரையும் கவர்ந்து விட்டது. வக்கீல் நாகேஷ்வரய்யர் சிலாகிக்க அவரின் வீட்டில் உள்ள ராஜாவின் நட்பு பாலிக்கு கிடைக்கிறது.
பாலி பரதநாட்டியக் கலையில் சிறந்து விளங்குபவள். கல்லூரியில் உயர் கல்வி கற்பதற்காக மெட்ராஸ் (சென்னை) செல்லும் சுதேசி சிந்தனையும் சுதந்திர மனப்பான்மையும் கொண்ட இளம்பெண்.சென்னையில் செல்லம் நட்பு கிடைக்கிறது. தனக்கான மணமகன் தங்கராஜ் காத்திருக்கிறான்.
பாலியிடம் அன்பு காட்டும் தங்கராஜன் மற்றும் வக்கீலின் பேரன் ராஜா ஆகிய இரு இளைஞர்களின் வெவ்வேறு இயல்புகளும், அவர்களுக்கு இடையே பாலியின் மனம் சந்திக்கும் உணர்வுப் போராட்டங்களும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.எதிர்பாராத விதமாக ராஜனுக்கு பாலி உதவ வேண்டிய சூழலும் அதற்கு ராமையா என்ன செய்தார் என்பதும் அழகாக கொடுக்கப்பட்டுள்ளன.
#ரசித்தவை
நாவலின் தலைப்புக்கு ஏற்ப, ராமையா அமைத்த ‘மீனாட்சி கொல்லை’ என்னும் பூந்தோட்டம் அழகியலின் மையமாகத் திகழ்கிறது. நந்தியாவட்டை, மல்லிகை, ரோஜா, காசித் தும்பை, பவழமல்லி, கொன்றை, செங்கொழுந்து மாங்கன்றுகள் பூத்துக் குலுங்கும் தோட்டம் ராமையாவின் மனத் துறவுக்குப் புகலிடமாகிறது
*: ரெட்டிப்பாளையம் ரோஜாப் பூக்களின் தனித்துவமான மணம், கூடையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒண்டிப் படுத்திருப்பது போல் குவிந்து கிடக்கும் பூக்களின் அழகு, மாலை கட்டுபவர்களின் கை லாகவம் ஆகியவை மலர் அழகியலை வெளிப்படுத்துகின்றன
*விடுதலைக்கு எத்தனை வல்லமை! மரணம்கூட அழகாகத்தான் இருக்கின்றன"
*உலகத்தில் அறிவு பிறந்த அன்றே இந்த நிம்மதியும் அமைதியும் போய்விட்டன
*துன்பத்திலிருந்து தப்பிக்க வழி என்ன? இன்பத்தையே நினைப்பதுதான். வேறு ஒன்றையும் நினைக்காமல் தள்ளிவிடுவதுதான்
*எந்தவொரு கலைக்கும் பூரணத்துவத்திற்கும் முடிவே இல்லை, தொடர்ச்சியான உழைப்பில் அழகு சேர்ந்துகொண்டே இருக்கும்
*தியாகம் எவ்வளவு ஆழ்ந்த போதை! பிறருக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டால், தன் உடல், தன் மனம், தன் நினைவு எல்லாம் எப்படிச் செத்துவிடுகின்றன
*விடுதலைக்கு எத்தனை வல்லமை! மரணம்கூட அழகாகத்தான் இருக்கின்றன. மரணம்தான் அழகு என்று அறிவை மயக்கி விடுவதுபோல்கூடத் தோன்றிற்று
*நமக்கு நாமே தான் தேத்திக்க முடியும். உசத்திக்க முடியும். நமக்கு நாமதான் காவல், பலம் எல்லாம்
*அவதியில் சிரிக்கிற சிரிப்புத்தான் சிரிப்பு. சிரித்துக்கொண்டே சிரிக்கிறது சிரிப்பு இல்லை
ராமையாவின் மனைவிகள் அனைவரும் மலர்களைப் போலக் குறுகிய காலமே அவரது வாழ்வில் பூத்து, பிரசவத்திலோ நோயினாலோ வாடி உதிர்ந்து விடுகிறார்கள்
வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும் துயரங்களும் முட்களாக உருவெடுத்தாலும், கலையினாலும், அன்பினாலும், ஆன்மீகப் பற்றினாலும் மனிதன் தன் அக மனதை ஒரு ‘மலர் மஞ்சமாக’ (அமைதியான சோலையாக) மாற்றிக் கொள்ள முடியும் என்ற ஆழமான வாழ்வியல் மெய்யியலை இத்தலைப்பு உணர்த்துகிறது
தி ஜாவின் மிகப்பெரிய வெற்றியே நாவலில் நம்மையும் ஒரு கதாப்பாத்திரமாக்கி..அந்த சூழலில் நம்மையும் வாழவைத்து விடுவார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment