Saturday, 24 October 2026

book-82 உங்கள்.குழந்தை யாருடையது


Book-82
உங்கள் குழந்தை யாருடையது?
- ஜெயராணி

உங்கள் குழந்தை யாருடையது?” என்ற தலைப்பே பெற்றோர்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வியாக அமைகிறது. குழந்தைகள் பெற்றோருக்குச் சொந்தமான உடைமைகள் அல்ல; அவர்கள் தனித்த சிந்தனைகளும் உணர்வுகளும் விருப்பங்களும் கொண்ட தனி மனிதர்கள் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எழுத்தாளர் ஜெயராணி, குழந்தை வளர்ப்பு குறித்த நமது வழக்கமான புரிதல்களையும் அணுகுமுறைகளையும் தனது கட்டுரைகள் வழியாக விமர்சனப் பார்வையுடன் அணுகுகிறார். குழந்தைகளின் மீது பெற்றோர் தங்களுடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் திணிப்பது, மதிப்பெண்களையும் மனப்பாடக் கல்வியையும் மட்டுமே முக்கியமாகக் கருதுவது போன்ற நடைமுறைகளை இந்நூல் கேள்விக்குட்படுத்துகிறது

கோழி வளர்ப்பு மீன் வளர்ப்பு போலவே குழந்தைகள் வளர்ப்பும் தற்போது அவசியமாகிவிட்டது. கண்டிப்பான பெற்றோர், செல்லம் கொடுக்கும் பெற்றோர் என இருவகைகளாக உள்ளனர். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாக நினைத்து பிடி கோழிகளாக இன்று பெற்றோர்கள் வளர்க்கின்றனர்.தன் குழந்தை எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைத்து தீராத சோகத்தை அவர்களின் பின் வாழ்க்கையில் ஏறபடுத்துகின்றனர். வீடு, பள்ளி, சமுகம் இன்றைய குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.ஆனந்த விகடனில் வெளிவந்த அடல்ட்ஸ் ஒன்லி தொடரின் விரிவாக்கப்பட்ட வடிவமே இப்புத்தகம்

13 தலைப்புகளில் இன்றைய குழந்தைகளின் தேவை மற்றும் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.
குழந்தைகளை கண்டிப்பது, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது, என வாழ்க்கையை துரத்திப் பிடிக்க கற்றுக் கொடுக்கின்றனர்.
உணவு குறித்த விழிப்புணர்வு குறைவு, துரித உணவு, ஆரோக்கியமான உணவு குறித்த அ செய்திகளை பகிர்வதுடன் பசி என்ற உணர்வே இல்லாமல் வளரும் குழந்தைகள் எவ்வாறு ஆரோக்கியத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் பேசுகிறது.

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நேரம் செலவழிப்பது குறைவதால் உண்டாகும் பாதிப்புகளை கூறுவதோடு அயல் நாடுகளில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை ஒப்பிடுகிறார். சக மாணவர் மீதான வன்முறை, பாலியல் குறித்த புரிதல்கள்,அவர்களுடன் பேசுவதே காலப் போக்கில் குறைந்துவிட்டதாக கூறுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் பெட்டிச் செய்திகள் கவனிக்க வைக்கின்றன.எண்களுக்கும் எண்ணங்களுக்கும் உண்டான வேறுபாட்டைக் கூறுகிறார். 1330 குறள்கள் ஒப்புவிப்பது அறிவா அல்லது தகவல் சேகரிப்பா  எனக் கூறி அதில் அறிவுக்கு உண்டான வரையறையைக் கூறுகிறார்.பள்ளி மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமல்ல, நற்பண்புகளை வளர்க்கவும், சமூக உறவை  மேம்படுத்தவும் எனக்கூறி குழந்தைகளின் உலகை பெற்றோர் புரிந்து கொளவ்து பற்றி.. குட்டி இளவரசன் மூலம் மேற்கோள் சொல்கிறார்..

"எனக்கு ஆறு வயதான போது ஓர் அற்புதமான படத்தைக் கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்தப் படத்தைக் கண்டதும் அதை வரையலாமே என்று நானும் ஓர் ஓவியம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காண்பித்த போது அது ஒருவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போது ஓயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்கு சலிப்புத் தருவதாக இருக்கிறது."

குழந்தை வளர்ந்ததும் தற் சார்பு உடையவராக, சுயசிந்தனை உள்ளவராக வளர இயற்கை அனுமதிக்கிறது. அந்த வளர்ச்சியை பெற்றோரே அங்கீகரிப்பதில்லை எனக்கூறி பதின்பரும வயதில் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாம் நம் குழந்தைக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தை கற்பிக்கவே இல்லை.அது பிழைக்கத் தெரியாத வழி என ஒதுக்குகிறோம்.இந்திய பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு சொத்து சேர்த்து சம்பாதிப்பதுதான். அதனால் குழந்தைகள் பொறுப்புணர்வு, அருமை ஆகியவை தவறவிடுகின்றனர்.இதற்கு ஜாக்கிசான் செய்த செயலை மேற்கோளை படித்தபோது நெகிழ்ச்சி ஏற்படுகிறது.தேவைக்கு மிஞ்சிய அனைத்தும் ஆசைகள் தான்.எனவே குழந்தைகளின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகளுக்கு பெற்றோர்கள் செலவிட வலியிறுத்துகிறார் ஆசிரியர்.

குழந்தைகளைத் தனித்த ஆளுமை கொண்ட மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பையும் அணுகுமுறையையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
கல்வி என்பது மனப்பாடத்தையும் மதிப்பெண்களையும் தாண்டியது என்பதை உணர்த்துகிறது.
பாலினச் சமத்துவம், சாதிய எதிர்ப்பு, சமூகப் பொறுப்பு போன்ற கருத்துகளை குழந்தை வளர்ப்புடன் இணைத்துப் பேசுகிறது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துகளை முன்வைக்கிறது. 

செல்லங்கொடுத்தல் எனும் உணர்வு வெற்றி தோல்வியை தாங்க தேவையான பக்குவத்தை வளர்க்க தவறுகிறது.நீ திறமைசாலி என சொல்லாமல் நீ மட்டும்தான் திறமைசாலி என சொல்லி வளர்ப்பது அவர்ளுக்கு உண்டான பக்குவத்தை தடுக்கிறது.

இரண்டு வித சவால்கள் பெற்றோர் முன் உள்ளது.ஒன்று குற்றங்களுக்கு பலியாகாமல் குழந்தைகளைப் பாதுகாப்பது, அடுத்தது குற்றங்கள் புரிந்துவிடாமல் தடுப்பது
மேலும், குழந்தைகளின் வளர்ச்சியில் சாதியச் சிந்தனைகள், பாலினச் சமத்துவமின்மை, சமூகப் பாகுபாடுகள் போன்றவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நூல் பேசுகிறது. குழந்தைகளுக்குச் சுதந்திரமான சிந்தனை, சமூகப் புரிதல், சமத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைக் காட்டிலும், அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக வளர உதவுகிறோம் என்பதே முக்கியம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதோடு நின்றுவிடாமல், அவர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு, கேள்வி கேட்கும் திறனையும் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்ப்பதே உண்மையான குழந்தை வளர்ப்பு என்பதை ஜெயராணியின் எழுத்துகள் சிந்திக்க வைக்கின்றன.

“குழந்தைகள் நம்முடையவர்கள் என்பதற்காக நமது விருப்பப்படி வாழ வேண்டியவர்கள் அல்ல; அவர்களுக்கான தனித்த வாழ்க்கையை உருவாக்க நாம் துணை நிற்க வேண்டியவர்கள்” என்ற புரிதலை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்லும் சிந்தனையூட்டும் நூல் இது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் வாசித்துச் சிந்திக்க வேண்டிய படைப்பு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment