Monday, 11 May 2026

book-28


#Reading_Marathon2026
#26RM009

Book No:28/150+
Pages:-287

மன வளர்ச்சி குறைபாடுகள்
-டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா

பத்தாண்டுக்கு முன் ஆட்டிசம் என்பது புத்தகத்தில் மட்டும் படிக்கக்கூடியதாக எங்கோ ஒன்று இருப்பதாக கேள்விப்படுவோம்.

குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைபாடுகள் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. முன்பு அவர்களை.ஒதுக்கி வைப்போம் தற்போதைய சூழலில் ஆட்டிசம் குறித்த விழிப்பிணர்வு அதிகரித்துள்ளது.கற்றவர்கள் மத்தியில் கூட தெளிவின்மை நிலவுகிறது.மற்றொருபுறம் கல்வி என்பது அடைவுகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது.

உலகெங்கும் 12 முதல் 14 மாதத்தில் மற்றவர் உதவியின்றி நடக்கும் ஆற்றலை பெறுகின்றன. இது 18மாதத்துக்கு மேல் தாமதமானால் அறிவுத் திறன் குறைபாட்டின் முதல் அறிகுறி ஆகும்.

பேசுதல், தகவல் பரிமாற்ற இடர், மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யும் மனப்பாங்கு இம்மூன்றும் ஆட்டிசத்தை அடையாளப்படுத்து கின்றன.நூறில்ஒரு  குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது.ஆட்டிசம் ஒன்று அல்ல, கடுமையான, மிதமான, லேசான என வகைப்படுத்தலாம். ஆட்டிசம் கண்டுபிடித்த வரலாறு,அது நரம்பியல்சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு என்பது உள்ளிட்ட அதன் அறிகுறிகளை சொல்கிறது. முதலாவதாக மொழித்திறன் குறைபாடே குறைவாக பேசுதல், பேச்சுமொழியை புரிந்து கொள்வதில் சிக்கல்,பயன்பாட்டு மொழிச்சிக்கல் போன்றவை பேசுவதில் இடர் ஏற்படுத்துகின்றன.

ஒரே செயலை தொடர்ந்து செய்தல், சில விஷயங்களில் அபார ஈடுபாடு இருக்கும்.மரபியல் சார்ந்த காரணமோ, மூளைச்சேதமோ, நரம்புக் கோளாறு, ஆனால் அறியப்பட்ட காரணங்களில் மிக சொற்பமே ஆட்டிசம் தோன்ற காரணமாக அமைகிறது.நூறில் ஒருவருக்கு ஆட்டிசம் தற்காலத்தில் வருகிறது.அதிலும் ஆண்களுக்கு அதிகம்.3வயதுக்கு முன்பே தெரிய வருகிறது.சுமாரான ஆட்டிசம் உள்ளவர்களுக்கு பதின்ம வயதுவரை கூட அடையாளம் காணப்படுவது இல்லை.இவை எந்த வித எக்ஸ் ரேவிலும் தெரியாது. வளர்ச்சி மற்றும் செயல்களின் மூலமே கண்டறிய முடியும். இந்நூலில் தரப்பட்டுள்ள அறிகுறிகள்,கேள்விப்பட்டியல் பகுதி இதனை விளக்குகிறது.

புதிய திறன்களை கற்பிப்பது, பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி, தொடர் செயல்களையும் மிதமிஞ்சிய ஈடுபாட்டைக் குறைப்பது, சமூக திறன் மேம்படுத்துதல்,புலன்களை ஒருமைப்படுத்துதல் தான் சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது. இதில் பெற்றோர் ஆசிரியர்களின் பங்கே பிரதானம்.வயது வந்தவர்களின் ஆட்டிசம் குறித்த தரவுகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

#அறிவுத்திறன் குறைபாடு

வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி இல்லாததும், அன்றாட செயல்களில் பின் தங்கி இருப்பதும் ஆகும். இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் தடையினால் உண்டாகும் ஒரு பற்றாக்குறை ஆகும்.அறிவுத் திறனில் எல்லாத்திறன்களும் சராசரிக்கு குறைவாக இருக்கும். டிஸ்லெக்சியாவில் வாசிப்புமட்டும் குறைவாய் இருக்கும்.அறிவு திறன் குறைபாட்டினால் தாமதமாக கற்பது, சிந்தனை திறன் குறைவு, கற்பதில் இடர்கள் ஏற்படும்.கற்றலில் பின் தங்கி இருப்பார்கள்.இதிலம் சுமார், மிதமான,கடுமையான, மிககடுமையான, என நான்கு நிலைகள் இருக்கிறது. சுமாரான அறிவுத்திறன் குறைபாடு உடையவர்கள் 5&6 ம் வயதில் தெரியவரும்.தன் ஒத்த வயதினரைவிட இரண்டு ஆண்டுகள் பின் தங்கி இருப்பர் . இதனை ஆசிரியரும் பெற்றோரும் சோம்பேறித்தனம்,அக்கறையின்மை என நினைத்துவிடுகின்றனர்.

சரி படிக்கவில்லை எனில்  எல்லாரும் அறிவு சார் குறைபாடா என்றால் இல்லை.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்,வாய்ப்பு குறைந்த குழந்தைகள் ஆவர். கற்றலில் மட்டும் பின் தங்கி வேறு செயலாக்கத்தில் திறன் வாய்ந்தவராக இருந்தால் அவர்கள் மெதுவாய் கற்போர் இல்லை.தேவையான பயிற்சிகள் கொடுத்தால் முன்னேறுவர்

ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள் பற்றிய செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அவர்களின் குணாதிசயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.நடத்தை சார்ந்த பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் பற்றிய குறிப்பும் விரிவாக உள்ளது 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் குறைபாடுகளை உணர்ந்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.மற்ற குழந்தைகளடன் ஒப்பிடுதல் கூடாது. அவர்களின் முன்னேற்றம் குறைவாகத்தான் இருக்கும் என எண்ண வேண்டும்.அவர்கள்.கற்ற விஷயங்களை மறந்துவிடுவர் எனவே பொறுமையை கையாள வேண்டும்.அக்கறையுடன் செயல்பட வேண்டும்.ஆசிரியர்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்.

#கற்றல் குறைபாடு

கற்கும் வாய்ப்பு இருந்தும் பின்தங்கி இருப்பர்.வாசிப்புத்திறன் குறைபாடு, மிகை எழுத்துப் பிழைகள், முக்கிய அடையாளங்கள். மூளை வளர்ச்சியின் போதுவாசிப்புக்குத் தேவையான நரம்பு வலை பின்னல்கள் சரிவர செயல்படாததால் இக்குறைபாடு ஏற்படுகிறது.ஒரு மனிதனின் வாசிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை சார்ந்த கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா.ஜெர்மன் கண் மருத்துவர் ருடால்டாஃப் பெர்லின் எனும் கண் மருத்துவர் 1887ல் டிஸ்லெக்சியா என்ற சொல்லை உருவாக்கினார்.பின் 1896

பிரிங்கிள் மோர்கன் எனும் பொது மருத்துவர் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் விவரித்து எழுதினார். இது பாதிக்கப்பட்டவர் 50-70% பேருக்கு கணக்கு கையெழுத்து திறன்களில் குறைபாடு இருக்கும். இதனால் பலர் தவறாக புரிந்துகொண்டு பள்ளியை விட்டு நிறுத்திவிடுகின்றனர். வாசிப்பு, எண் கணிதம், கையெழுத்து மூன்றும் ஒரே குழந்தையிடன் காணப்பட்டால் கற்றல் குறைபாடு எனலாம்.டிஸ்லெக்சியாவை மூளையை ஸ்கேன் செய்தால் கூட தெரியாது.சோதனைகள் மூலமே அறிய முடியும்.தனிச்சொல் வாசிப்பு சோதனை, போலிச் சொற்கள் எழுத்து கொண்ட வாசிப்பு சோதனகளை கொடுத்து பயிற்சி செய்யலாம்.

பேசுதல், நடத்தல் போல வாசிப்பு இயல்பாய் வருவதில்லை. அது பயிற்சியின் மூலமே மட்டுமே வருகிறது.ஜப்பானிய் மொழியில் ர எனும் எழுத்து இல்லை.அவர்கள் ர என்பதை ல என்று உச்சரிக்கிறார்கள். ராதா என்பதை லாதா என்றே சொல்கிறார்கள். இப்படிதான் பலரின் உச்சரிப்பும் அவர்கள் வளர்ந்த சூழல் பொறுத்து மாறுபடுகிறது.வாசிப்பும் வாசிப்பதை புரிந்து கொள்வதும் வெவ்வேறான செயல்பாடுகள். புரிந்து கொள்வதிலும் குறைபாடுகள் வருகிறது.மொழியின் உச்சரிப்பு தமிழும் ஆங்கிலமும் வேறுபடுவதை அறியலாம். அதனை உச்சரிக்கும் விதத்தில் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

வீட்டில் குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.ஒலிப்பு முறைகளை கற்றுக் கொடுக்கலாம். அடிப்படை கணிதத்திறன் மேம்படுத்தலாம் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கான அறிவுரைப்பகுதியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment