Tuesday, 5 May 2026

நியஅஸ்


நாம் அனைவருக்கும் cognitive bias இருக்கும் — இது மனித இயல்பு.
தரவுகள் (Data) நமக்கு பெரும்பாலும் தெளிவான கதையை சொல்லும். ஆனால் நாம் கேட்பதில்லை.

மாறாக நாம் என்ன செய்கிறோம் என்றால்? முன்பே நம்பியதை இறுகப் பற்றிக்கொள்கிறோம். உண்மைகளை நம் வசதிக்கேற்ப திரித்து புரிந்துகொள்கிறோம். நம் விருப்பத்திற்கு எதிராக இருக்கும்  தகவல்களை புறகணிக்கிறோம்

தரவை நேர்மையாக ஏற்றுக்கொண்டால்,  தீர்வுகள் எளிமையானதாக  இருக்கும். ஆனால் நாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. முன் முடிவுகளோடு அணுகுகிறோம்.

நம் அனுமானங்களால் முடிவு எடுக்காமல், உணர்ச்சிவயப்பட்டு  முடிவு எடுக்காமல், தரவுகள் பக்கம் நின்று ஒரு முடிவு எடுத்தால் தீர்வுகள் சுலபமாக கிடைக்கும்.

இதைதான் Darius Foroux எழுதிய Think Straight வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment