#Reading_Marathon2026
#26RM009
Book No:34/150+
Pages:-588
அறிவியல் கதைகள்
-ஆயிஷா இரா நடராசன்
ஆயிஷா இரா. நடராசன் தமிழில் அறிவியல் கதைகளை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிமையாகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்ற முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.அறிவியல் கருத்துக்களை கதை வடிவில் சொல்லும் பாணி தனித்துவமானது.
இலக்கியத்தின் மீதான காதலைப் போல அறிவியல்.மீது ஈர்ப்பு குறைவுதான். ஆனால் நடராசன் அவர்கள் ஆய்வுக்கூடத்தில் கண்டறியும் உண்மை போல் இந்நூலில் 73 ஆய்வக கதைகளை கூறியுள்ளார்.
வாசகனை ரசிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார்.
அறிவியல் கதைகள் என்பது அறிவியல் கோட்பாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி, காலப்பயணம், செயற்கை நுண்ணறிவு, எதிர்கால உலகம் போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு
அறிவியலையும் கற்பனையையும் இணைத்து வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதே இதன் நோக்கம்.
அறிவியல் கதைகள் மொழிபெயர்ப்புகளாக இருந்த காலத்திற்கு பிறகு தமிழிலும் அறிவயல் புனைவுகள் துவங்கியது.
சுஜாதாவை இதற்கு முன்னோடியாக சொல்லலாம்..தற்காலத்தில்.அறிவியல் சிந்தனைகளை நடராசன் அவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்.
அறிவியல் கதைகளின் நோக்கமே அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதுதான். மூடநம்பிக்கை இருளில் அறிவியல் சிந்தனை வெளிச்சத்தை ஏற்படுத்தும். எதிர்கால தொழில்நுட்பத்தை இன்றைய நிலையில் விளக்குதல்.
இப்புத்தகத்தின் கதைகள் குழந்தைகளை மையப்படுத்தியவை. அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்பவை.
ஹோட்டலில் பரிமாறும் ரோபோ கேட்கும் வேதியல் கேள்விக்கு சரியான பதில் சொல்லும் நடேசன் ப்ளாஷ்பேக்கில் நடந்த ரசாயன ஆலை விபத்தை நினைத்துப் பார்க்கிறார். முதல் பரிசு வெல்லும் நடேசன் உட்பட 146 பேரை வேனில் சுற்றுலா அழைத்துச் செல்லும் போது ஒரு ட்விஸ்ட் வருகிறது.
நூறு வருடத்திற்கு பிறகு மனிதர்கள் வாழும் ஜோதி எனும் கோள்களில் நடைபெறும் கதை தான் அருட்பெருஞ்சோதி.பேராசிரியர் மாத் ருபூதத்தின் தாய்மொழி மெல்ட்ரான் இது கணினி மென்பொருள் அல்ல.. இவரின் தாய்மொழி என டிகிரிகாப்பி கதை துவங்குகிறது.காலச் சக்கர ஆம்னியில் நூற்றாண்டு கடந்த பயணம் வருங்காலத்தை கண்முன் காட்டுகிறது என விண்வெளி சார்ந்த கதைகள், வானவியல் அதிசயங்களை முன்வைத்து சில கதைகள் உள்ளன.
ஆன்லைன் ரம்மி மனிதர்களை சூறையாடுகிறது.கதையில் மனிதன் கண்டுபிடித்த அல்கோரிதத்தால் கணினி வழி சூதாட்டம் ஆன்லைன் திவாலான கதை சுவாரஸ்யம். செயற்கை நுண்ணறிவின் உச்சக்கட்டமாக இடியாப்ப சிக்கலான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு சாட் ஜிபிடி உதவியுடன் நான்கு நிமிடத்தின் திரையில் தோன்றியது.
இதனைப் படித்த போது நீதிமன்றத் தீர்ப்புகளில் இதை நடைமுறைப்படுத்தினால் பல கோடி வழக்குகள் சில நாட்களில் தீர்ந்துவிடும் என தெரிந்தது.
நமது உடலின் செல்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணிற்குப் புலப்படாத ஒன்று மிட்டோ கான்ரியா. அதை மைட்டோ கான்ரியா என்றும் அழைப்பார்கள். ஒரு மனிதன் இப்புவியியல் பிறந்தநாள் முதல் வளர்ந்துகொண்டே வயதாகி வயதாகி முதிர்ச்சி அடைவது ஏதோ மீள முடியாத சமன்பாடுபோல இருக்கிறது அல்லவா? அதற்கு காரணம் மிட்டோ கான்ரியா ... 'ஒருவர் இறந்தால் விதி என்று சொல்கிறோமே அது சுத்த அபத்தம் என்றார் அப்பா... 'ஒருத்தர் இருப்பதா, இறப்பதா என்பதை தீர்மானிப்பது மிட்டோ கான்ரியாதான்' என்று அம்மா ஒரு தீர்ப்புபோல அறிவித்தார் என உரையாடலில் அறிவியல் உண்மைகளை கூறுகிறார்.
ஓய்வு பெற்ற ஆரம்பபள்ளி ஆசிரியருக்கு ராணுவத்தில் பணியாற்றும் நண்பர் வேலைக்கார யானைவெடி ரோபோட் ஒன்றை பரிசளிக்கிறார்.அதனிடன் திட்டினாலோ, வாக்குவாதம் செய்தாலோ கோபத்தில் 75 மில்லி ஆம்பியர் மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்றுவிடும்.இந்த நேரத்தில் வைரமாணிக்கம் சித்தப்பா விருந்தளியாக வருகிறார்.
"அகனமர்ந்து செய்யாள் உறையும்-முகமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் எனும் குறள் கூறும் ரோபோட்டால் ஒரு பிரச்சனை வருகிறது. அது என்ன என்பது க்ளைமேக்ஸ் கதை
வெற்றிகரமாக செவ்வாய்க்கு செல்லும் வாசுகியின் கதை, துத்தநாக சல்பேட் மற்றும் பீனால் எனும் வேதியியல் ஆய்வகத்தில் நடந்த காதல் ஆய்வுகள் கதை, ஆயிஷா தான் இக்கதைகளின் தோற்றுவாய் என்கிறார்.
அறவியலில் அன்றாடம் புழங்கும் சொற்கள், விண்வெளி சார்ந்த சொற்கள், நவீன தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் கருத்துக்களை புகுத்தி நவீன சிறுகதைகளை உருவாக்கியுள்ளார்.எதிர்காலத்தில் வசிக்கின்ற ஒருவன் இறந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கதைகளை கருவாக எடுத்துள்ளார்.
இதில் சமூகம் சார்ந்ததாகவும் மானுடம் சார்ந்ததாகவும் கொண்டுவந்துள்ளார்.
அறிவியல் புனைவுகள் வெறுமனே காதில் பூ சுற்றும் வித்தைகளை காட்டாமல் நம்பகத்தன்மையை இதில்.ஏற்படுத்தியுள்ளார்.ஓபரா, சைபர் பங்கு பற்றியும், கார்ப்பரேட்டுகளின் முகத்தையும், ஆயுள் நீட்டிப்பில் மனித குலம் எதிர்கொள்ளும் சவால்களையும், கருவிமயமாக்கப்பட்ட வாழ்வியலை இனி எவ்வாறு வாழப்போகிறோம் எனும் அபாயத்தையும் தன் கதைகளில் அழகுபட சொல்லியுள்ளார்.
அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியாக பட்டினபாலையில் கப்பல் கட்டுமானம் குறித்த புனைவுகள் ஆச்சர்யப்பட வைத்ததாக கூறுகிறார்.
அறிவியல் என்பது ஆய்வகத்தில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் உள்ளது என்பதை அறிவியல் கதைகள் உணர்த்துகின்றன.தமிழில் அறிவியல் கதைகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை அறிவியல் சிந்தனையை வளர்க்கும் இலக்கிய வடிவமாகும். அறிவியலை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகப்படுத்துவதில் தமிழ் அறிவியல் புனைகதைகள் முக்கிய பங்காற்றுகின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment