Tuesday, 23 June 2026

35


#Reading_Marathon2026
#26RM009

Book No:35/150+
Pages:-561

பாட்டு புஸ்தகம்-2
யுகபாரதி

திரைப்பட பாடல்கள் தான்  அன்றைய மக்களுக்கு வாழ்வியல் அறத்தை கற்றுக் கொடுத்தது. களைப்பு நீங்க பாடி, தத்துவ கருத்துக்களை உள்வாஙகி, சிந்தித்து, லயித்து பாடி புளகாங்கிதம் அடைந்தனர். மக்கள் பேசும் மொழியில் காதலை, இன்பத்தை, வாழ்க்கையை, துள்ளலை பாடும் மனநிலைக்கேற்ப தங்களுக்கேற்ற வரிகளை தெரிவு செய்து கொள்கின்றனர். முன்பு முத்திலிங்கம், வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களை புத்தகமாக் படித்துள்ளேன். அந்த வகையில் நவீன கவிதையில் நல்ல கருத்துக்களை எழுதும் யுகபாரதியின் இரண்டாம் பாகமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

மன்மதராசாவும் எழுதுவார், எள்ளுவய பூக்களியே யும் எழுதும் அற்புத கவிஞன். முற்போக்கு எண்ணங்களும் பொதுவுடைமை கருத்துக்களும் கவிஞனுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜோக்கர் படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம் பாடலைச் சொல்லலாம்./ ஆண்ட பரம்பரை கைநாட்டு, ஆட்டிப் படைக்குது கார்ப்பரெட்டு, நாட்ட விக்கிற மந்திரிமார்க்கு நல்லா வையி சல்யூட்டு/ என்றும் / இயற்கை என்ன மறுக்குதா, எதையும் உள்ள பதுக்குதா, எல்லாத்தையும் சூறையாட,சர்க்கார் கூட்டிக் குடுக்குதா/ எனும் வரிகள் நியாயத்துக்கு போராடும் நாயகனுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

பணம் பத்தும் செய்யும் ஆனால் அது அன்பை ஒன்றும் செய்வதில்லை என உணர்த்தும் வகையில் இவ்ரின் வரிகள் பாடலில் மிளிரும்.

/நெருப்புல விழுந்திடும் பருத்தியைப் போல நெனப்பையும் கொளுத்துது நேசம்/ எனும் வரி நன்று.இசையோடு கேட்கும் போது ட்யூன் தான் மனதில் முதலில் பதியும். இதுபோன்ற பாடல்களை மட்டும் வாசிக்கும்போது பாடலின் அர்த்தமும் தத்ததுவங்களும் இன்னும் ஆழமாக புரிகிறது.ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடல் சார்ந்த முன்னுரையை சுருக்கமாக கூறுவது அருமை. காதல் என்றால் என்ன என்று புரியாத வயதில் கற்பிதங்கள் கற்பனைகளாக உருக்கொள்கின்றன பக்குமடையும் போது இவையாவும் உதிர்ந்துவிடும் எனும் யதார்த்த வரிகளை பதிகிறார்.

கைக்கிளை பெருந்திணை என் இலக்கியத்தில் சொல்லப்பட்ட பொருந்தா காதலை எதார்த வரிகளில் கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடல் சொல்கிறது.

கொடுக்கப்பட்ட இசைக்கு வார்த்தைகளை இட்டு நிரப்புவது மட்டும்.கவிஞனின் வேலை இல்லை. அந்த காட்சி வார்த்தைகளின் வழியே பார்ப்பவருக்கு கடத்தப்பட வேண்டும் பொருத்த்தமான வார்த்தைகளை கண்டறிந்து பொருத்தும் மகத்தான பணியாக கவிஞர் குறிப்பிடுகிறார்.

/நீ ஒரு தேசம் நான் ஒரு தேசம் எல்லை கடந்தால் சந்தோசம்/ எனும் வரி யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

சில பாடல்கள் பிரபலமாக தெரியும் சில பாடல்க்ள் நாம் கேட்டறியாதது. ஆனால் அதில் உள்ள வரிகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது. எந்த பாடலாக இருந்தாலும் கவிஞரின் அழகியலும் மெனக்கெடலும் ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது.

வித்யாசாகர் பற்றி சொல்லும்போது செய்தித்தாளைக்.கொடுத்தால் கூட இசையமைத்துவிடும் ஆற்றல் உள்ளது. இமான் குறித்து சிலாகிக்கும் யுகபாரதி இளையராஜா பற்றிச் சொல்லும்போது ஆயிரமாயிரம் இரவுகளுக்கு அவரே இசை வெளிச்சம் என்கிறார். அத்தனை உணர்வுகளுக்கும் ஆரத்தி எடுப்பவர் என அழகர்சாமியின் குதிரை பாடலை மேற்கோள் சொல்கிறார்.சப்பாத்திக் கள்ளி சம்பங்கி ஆவதும் கோரைப்புல் வானவில்லாவதும் எனும் வரிகள் அடிக்கடி நான் பயன்படுத்துவது எனக் கூறுகிறார்.

பெரும்பாலான பாடல்களில் காதல் பற்றியதாக இருந்தாலும் ஒவ்வொரு பாடல்களையும் தன் தனித்துவ வார்த்தைகளில் வேறுபடுத்திக் காட்டுகிறார்./ நில்லாமல் காலம் செல்லுதே, அதைப் போல நாமும் செல்ல செல்ல சந்தோசம்/ என காலத்தைக் கடந்து நிற்க ஓடச் சொல்கிறார்.கண்டதும்.காதல் என்றாலே உ.ண்மைமைக்கு புறம்பான பொய்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆலமர காக்கை அய்யனார் சாமி அவளுக்காக காத்திருப்பதாய் எழுத வேண்டுமென எள்ளலை வெளிப்படுத்துகிறார்.

ஓசை நயமுடைய சொற்கள் பாடலுக்கு மிகவும் வலுசேர்ப்பதாகும் 

/அழகைப் பார்த்து தொடங்கும் காதல் அவதியாகுமே,அறிவைப் பார்த்து தொடங்கம் காதல் சிலுவையாகுமே/

/அவளது ஆணியடிக்கும் கண்களால்
அகல முடியாமல் அவிழ்கிறான்/

மெய்யெழுத்துகளே இல்லாமல் எழுதிய சாரலே சாரலே பாடலை புதிய முயற்சி எனலாம்.அய்யோ, பிசாசே போன்ற வார்த்தைகள் காதலில் இதமான மெல்லிசைக்கு இடறாத சொற்களாக பொருத்தியது,

பாடலின் முதல் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருப்பார். அவரின் பலபாடல்களில் முதல் வரி அருமையாய் இருக்கும்./உன்னைப் போல ஒருத்தரநான் பார்த்ததேயில்லை, உன் உசரம் பார்த்து வானம் கூடகுனியுமே மெல்ல/

/சும்மா இருக்கிறது ஈசி இல்ல- நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல/

ப்ரேக்கிங் நியூஸ் வந்த சமயத்தில் சற்றுமுன் கிடைத்த தகவல் என  சொன்னால் பரபரப்பாகிவிடுவோம். அதையே முதல் வரியாய் வைத்து 

/சற்றுமுன் கிடைத்த தகவல் படி தொலைந்துபோனது என் இதயமடி/ என் எழுதியிருப்பார்.அதே போல் /பார்வை நரைகாது.அப்படியே நரைத்தாலும் அது கொண்டிருந்த காதலின் அழகைக் குறைக்காது/ எனும் வரி எளிமை

ஒவ்வொரு பாட்டுக்கும் அவர்தரும் முன்னுரையையே புத்தகமாய் போடலாம்.புரட்சிக்கு மக்களைத் தூண்ட வேண்டியதில்லை. நடப்புகளை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும் என்கிறார்.

/ஏழைவாழவே எழுவோம் நொடியிலே, யாரும் ஒன்றுதான் உணர்வோம்.முடிவிலே/

பிரபலமான பாடல்கள மட்டும் நல்ல வரிகள் இல்லாமல் பிரபலமே ஆகாத பாடல்களில் கூட அழகிய வரிகள், ஆழமான கருத்துகள் எழுதியுள்ளது தெரிகிறது. ரிப்பீட் மோட் இல்லாமல் புதிது புதிதாக கற்று அதனை பாடல் வரிகளில் வெளிப்ப்படுத்தியுள்ளார். பத்து சிச்சுவேசன்கள் திரும்ப திரும்ப வந்தாலும் ஒவ்வொன்றிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பது அவர் தொழில் பக்தியை காட்டியிருக்கிறது. கவித்துவம், கானா, ஓபனிங் சாங் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடியுள்ளார்.

இவரன்  பாடல்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கான வரிகளை தந்துள்ளார்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment