மகாநதி
-பிரபஞ்சன்
மகாநதி என்றால் நீண்டதூரம் செல்லும் ஆறு.கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு தனது தனித்துவம் இழக்காமல் செல்வது. அது போல் இந்நாவலும் கோவிந்தன் எனும் மைய கதாபாத்திரம் இறுதிவரை தன் கொள்கை பிடிப்புடன் செல்வது போல் இருக்கும்
பாண்டிச்சேரியில் தலை தலைமுறை கள்ளுக்கடை நடத்தி வரும் குடும்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.
ஒரு கை சம்பாத்திதால் நான்கு கைகளில் தான் தருமங்கள் செய்பவர்.
தனது வாழ்நாளில் ஒருவருக்கும் தீங்கின்றி வாழ்வை நடத்துபவர்.தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்பவர்.
உத்ரா, வேதம் எனும் சிறுவர்களும் பாம்புக்கு பயந்து கள்ளுக்கடைக்குள் சென்று விடுகின்றனர். அப்போது கோவிந்தன் இவர்களை பாசத்துடன் நடத்துகிறார்.அதன்பின் வேதம் அவர்களின் குடும்பத்தில் ஒருவன் போல இருக்கிறான். அவனது பார்வையில் தான் நாவல் நகர்கிறது.
கோவிந்துவின் மனைவி தையல்நாயகி கொள்கை பிடிப்புடன். இருக்கும் கணவனுக்கு ஏற்ற மனைவி. இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருப்பவர். இவர்களின் ஒரே மகள் கோகிலா. படிப்பு வராததால் வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு வரன் பார்க்கும் நிகழ்வும் நடக்கிறது.
காந்திய கொள்கையில் பிடிப்புள்ளவராக, வள்ளலாரின் கருத்துக்களை மனதில் ஏந்தி வாழும் கோவிந்து ஒரு கட்டத்தில் கள்ளுக்கடையை விற்கிறார். தொழில் நசிவு, வரதுன்னுக்கு ஜாமின் கையெழுத்து போட்டதால் வீடு கைவிட்டுப் போகிதறது.இதன் பின்னும் தன் கொள்கையில் தளர்வு ஏற்பட்டதா? அதன் பின் என்ன ஆனார்? கோவிந்த் என்பதே நாவலின் மீதிப்பயணம்
கோவிந்துவின் குணம் தான் நாவல் முழுக்க சொல்லப்படுகிறது. அவருடைய வீடு பலருக்கு சரணாலயம் போல் இருக்கிறது. ஊரில் பலரும் அவரை மரியாதையுடன் நடத்துகின்றனர். அது முழுக்க முழுக்க அவரின் குணத்திற்காகவே.கணவனின் நிலை அறிந்து அவரின் முடிவை தன் முடிவாகவே எண்ணும் மனைவி தையல் நாயகி இன்னொரு மகாநதி.
மகளின் முடிவால் நிலைகுழையும் அதே வேளையில் அவள்.திரும்பி வந்தவுடன் ஏற்றுக் கொள்கிறார். கடைசி வரை மகளுக்கு உற்ற துணையாக இருந்து வழி நடத்துகிறார்.தன்னை நம்பி வந்த சோமு,பூஞ்சோலை-நடராசன், கட்சிக்காரர்கள் ஆகியோருக்கு மனதார உதவி செய்கிறார்.யாரிடமும் தான் உதவி கேட்டுச்செல்லாத இயல்புடம் இறுதிவரை வாழ்கிறார்.
கதைமாந்தர்களாக
விஸ்வநாதன்-சித்தப்பா-கள்ளுக்கடை எதிர்ப்பு போராளியாக மாமனாருக்கு எதிராகவே போராடுகிறார்.
கொள்ளுத்தாத்தா மூத்தார் பல தர மணம் கட்டி வாழும் அன்றைய சூழலை விவரிக்கிறார்.எப்படி வாழ்நதார்கள் என கேட்டதற்கு பசு மாட்டு கொட்டகையை உதாரணம் சொல்கிறார்.தனது நிலையாமையை டூப்ளக்ஸ் அவர்களின் கதையும், கருணையிடம் வாழ்வதை ஆயி எனும் தேவதாசி கதாபாத்திரம் இறந்த பின்னும் அவர்களின் குளத்து நீர் அவர்களை நினைக்க வைக்கிறது.
"குளம் எதை ஏற்று எதை தள்ளுகிறது. எவரை விரும்புகிறது? எவரை வெறுக்கிறது?பயனாவது அல்லாமல் குளத்தின் ஜனன நியாயம் வேறு என்ன? என்கிறார்
அரசியல் கருத்தில் தலைவனின் நிலையை விளக்குகிறார்..
"மக்கள் தங்கள் தலைவர்களைத் தாங்களே உருவாக்குவார்கள். தலைவர்களுக்கு இல்லாத பொய்ச் சிறப்புகளை இருப்பதாகப் பாவித்து அவர்களின்மேல் ஏற்றுவார்கள். தலைவர்களைத் தங்களினும் மேம்பட்டவர்களாக, மேம்பட்டவராகவே படைக்கப் பட்டவர்களாகத் தாங்களே கருதிக்கொள்வார்கள். தலைவர்களின் | ஒவ்வொரு வார்த்தைக்கும், அங்க அசைவுகளுக்கும் தாங்களே " புதுப்புது அர்த்தம் கற்பித்துக்கொள்வார்கள். தலைவர்களை விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக நினைப்பார்கள். அவர்களை யாரேனும் விமர்சித்தால், விமர்சிப்பவரைத் தங்கள் எதிரிகளாக கற்பிதம் செய்துகொள்வார்கள்.
அதே போல் தொண்டராய் வாழ்தலில் உள்ள குணங்களாக
"தொண்டராய் வாழ்தல்
தலைவரின் கட்டளை ஏற்றல், காதுகலஈ தீட்டி அவன் வசம் ஒப்புவித்தல்,
சொந்த உடம்பை அவம் காரியஙகளுக்கு ஒப்படைத்தல்
கடலில் தன்னை கரைத்துக் கொள்ளுதல், துளியைக் கடலுக்கு இரையாக கொடுத்தல், தனக்கென அளிக்கப்பட்ட ஒரு பிரத் யோக வாழ்க்கையை வீணே விரயம் செய்திடல்"
#ரசித்தவை
*பாம்பு...-இருக்கிற இடத்தை நிதானிக்க அதற்கும் அவகாக்சம் தேவைப்ப்ட்டது
*யாருக்குதான் மனசுக்குள் ஒரு லட்சியம் இல்லை.எப்படி ஆக விருப்பமோ அப்படியான மனுசனை மனதிற்குள் அடைகாக்காத மனுசன் யார்
*மனதின் மகிழ்ச்சி சம்பளத்தின் அடிப்படையிலா அமைகிறது?
சோற்றால் மட்டும் மனிதன் வாழ்கிறான் அல்ல.மன அமைதி மட்டுமே மனிதனை வாழ வைக்கிறது
*ஆரம்பபள்ளி.ஆசிரியனுக்கு ஒரு தாயின் சகிப்புத்தனமையும் எல்லையற்ற அன்பும் இருக்க வேண்டும்
*திருடரகளை காட்டிலும் மோசமான போலிசார் இருந்துவிட்டால்..?
*ரோசமுள்ள ஜாதிக்கு அடிக்கடி சாட்டையை சொடுக்கிறதே தப்பு. அதுவே மெதுவா போகும்
சாட்டை நிழகே போதும்
*என்னை வழிபடு துதி; என் நாற்காலிக்கு கால்கள் கொடுத்து உதவு.உன் மூளையை மூடி அடைத்துவிடு.உன் மனதை இருட்டாக்கிவிடு
*போராட்டமே வாழ்க்கை. போராடி போராடி தா வாழ்க்கை அங்குலம் அங்குல்மா முன்னேறிகிட்டு இருக்கு
*குளக்கரை படிக்கட்டுகள் சந்தோசமான ஆறுதலன சோகத்தை தருபவை
*குடிவிலக்கு முன்பு கெளரவம்.இப்போது அப்படியல்ல.
நிதனக்குடி சில சமயஙகளிளே சந்தோசத்தைக்கூட கொடுக்க முடியும்.
*ஒவ்வொரு ஊரிலும் காலைகளும்.மாலைகளும் ஒவ்வொரி விதத்தில் இருந்தன. காலஙகளுக்கு விசேசமான வித்தியாசமான மணஙகளும் இருந்தன.
*வெளியூரில் புதிய சூழ்நிலையில் வளர வாழ வாய்பப்பேற்படும் போதுதான் நாம் உண்மையில் வளர ஆரம்பிக்கிறோம்
*வேலாயுதத்தின் கதை நினைக்க மனசுக்கு வருத்தம். நம்மைச்சுற்றி மனிதர்கள் எவ்வளவு துன்பஙகளை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்
*தனித்திரு-கூட்டத்துக்குள் கரைத்துக் கொண்டு ஒன்றும் இல்லாமல் ஆகிவிடாதே.
*நான் செண்பகத்தைக் காதலித்தேன். அப்படித்தான் அப் போது நினைத்தேன். அவள் என்னைக் காதலித்தாளா என்பது எனக்குத் தெரியாது. சிரித்தாள். நான் பேசினால் பதில் பேசி னாள். எனவே அது காதலாகத்தானே இருக்க வேண்டும்? அவள் என்னைக் காதலிக்கிறாள் என்று நினைப்பதும் நம்புவதும் ரொம்ப திருப்தியாக இருந்தது.
*பெருமையைத் தூர நின்று தரிசிக்கும்போதுதான் பெருமை, சிறுமை என்கிற பேதமெல்லாம். பெருமைக்கு உள்ளே, பெருமையே நாமாய், நாமே பெருமையாய் பேதமற்றுக் கலந்துவிட்டால்? பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை,
*நஷ்டப்படாதவங்க யார் இருக்காஙக. இழந்ததை அனுபவமா எடுத்துக்கிட்டா நஷ்டம் என்னிக்கும் உறைக்காது
* வரதன் மகள்கள் பற்றி சொல்லும்போது..
காலத்துக்கு பல்லாயிரம் கைகள்.இருந்தன. அது வீடுதோறும் சென்று ஆளாகியிருக்கும் பெண்களுக்கெல்லாம் அவசர வளர்ச்சியை அள்ளிக்கொடுத்தது
*இறந்தகாலம் இறந்ததாகவே இருக்கட்டும். பழசை பாரமா சுமந்திக்கிட்டு நின்னா நல்ல காலத்தை நோக்கி வேகமா நடைபோட முடியாது.
இறுதியாக வேதம் கடிதம் எழுதுதலில் மனிதர்களின் வாழ்வியலை சொல்லியிருப்பார்..
"வாழ்க்கை, அர்த்தமற்ற, தர்க்கபூர்வமான காரணங்கள் இல்லாத நிகழ்ச்சிப் போக்குகளால் ஆனது என்றுதான் நான் நினைத்து வந்திருக்கிறேன். வாழ்க்கையை முடித்துக்கொண்ட மனிதர்களின் கதையை அணுகிப் பார்க்கும்போதோ, எல்லாமே ஒரு ஒழுங்கில், ஒரு சரடில், தீர்க்கமான முடிவை நோக்கித் தண்டவாளத்திலேயே அவர்கள் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். . முடிவைக் குறிவைத்து அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒழுங் காக நடைபெற்று வந்திருக்கின்றன. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தான் அவர்கள் தோண்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment