"The Sheep Detectives" திரைப்படத்தில்,
George Hardy தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில்,
கடைசியா எழுதின லெட்டர்ல உனக்கு எந்த Sheep Special nu கேட்டிருந்த..எனக்கு எல்லா
Sheep um Special தான்!
அதனாலதான் ஒவ்வொருத்தருக்கும் நான் ஒரு பேர் வச்சிருக்கேன்!"
என்று ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அதன் குணத்தையும் சொல்லிக் கொண்டே வரும்பொழுது,
ஆனா, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் Extra Special என்று சொல்வார்!
Sebestian - என் சிங்கக்குட்டி!
என்ன மாதிரியே தனிமையை தேடுவான்.. அவனுக்கு எப்ப அந்த மலைக்கு போகணும் தோணுதோ அப்ப போயிடுவான்..எப்ப திரும்பி வரணும் தோணுதோ அப்பதான் வருவான்!
அப்புறம் என் செல்ல குட்டி - Lilly!
இங்க இருக்கிறதிலேயே ரொம்ப அறிவாளி! என் மனசுல எப்போ என்ன ஓடிட்டு இருக்குன்னு பாத்த உடனேயே கண்டுபிடிச்சுடுவா..
எல்லாரையும் விட இவளை பார்க்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாரு..அது ஒரு Shepherd க்கு தான் புரியும்!"
என்று அந்த கடிதத்தை முடிப்பார் Geogre!
Lilly - George காதலித்த ஒரே ஒரு பெண் அவனின் மனைவி! அவள் பெயரைத்தான் அந்த ஆட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பான் George!
உண்மையில்,
நமக்கும் எவ்வளவு பேரை பிடித்திருந்தாலும் நம்மை பிரதிபலிக்கும் ஒருவரை
நம் மௌனங்களை புரிந்து கொள்ளும் ஒருவரை
அழுகை முட்டிக் கொண்டு வரும் பொழுது சொல்லாமலேயே நம் கைகளை பிடித்துக் கொள்ளும் ஒருவரை நாம் சோகமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு நம்மை புன்னகைக்க வைக்க மெனக்கெடும் ஒருவரை கொஞ்சம் அதிகம் பிடித்துப் போகிறது! அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறோம்!
இந்த உலகில் நாம் எல்லோரிடத்திலும் தேடுவது நம்மைத்தான்!
நமக்கு பிடித்த பாடல்களை பிடிக்கும் என்று சொல்பவர்கள் அடுத்த நொடியே நமக்கும் பிடித்தவர்களாகி விடுகிறார்கள்!
அந்தி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போது கீழ்வானில் பரவும் மஞ்சளும் ஆரஞ்சும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் அழகாக தெரிகிறார்கள்!
கடல் பிடிக்கும் என்று சொல்பவர்களையும் காலாற நடை பிடிக்கும் என்று சொல்பவர்களை பெயரைக் கூட கேட்காமல் பிடித்துப் போகிறது!
ஏனென்றால் அவர்களில் நாம்
நம் சாயலை உணர்கிறோம்!
ஒருவரை எந்த மதிப்பீடும் செய்யாமல் அவர்களின் இயல்பில் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தான் உண்மையில் அழகு!
ஆனால்,அதில் நம்மின் ஒரு சிறு துளியை கண்டடையும்போது பேரழகாகிறார்கள்!
No comments:
Post a Comment