இடக்கை
-எஸ்.ராமகிருஷ்ணன்
இந்த நாவல், மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் இறுதி நாட்களையும், அதே காலகட்டத்தில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களையும் மையமாகக் கொண்டது. உலகையே தன் கைக்குள் வைத்திருந்த பேரரசர், தன் இறுதிக் காலத்தில் ஒரு எளிய படுக்கையில் தனிமையில் கிடக்கிறார். "இரவின் முன் மன்னரும் எளியவரும் ஒன்றுதானே" என்ற தத்துவம், மரணத்தின் முன்னால் அதிகாரம் எவ்வளவு பலமற்றது என்பதை உணர்த்துகிறது.
மனிதன் இறுதியில் சந்திக்கப்போவது தன் தனிமையையும் கடந்த கால நினைவுகளையும் மட்டுமே. வாழ்க்கை என்பது வெறும் நினைவுகளின் தொகுப்பு என்பதை ஔரங்கசீப்பின் கதாபாத்திரம் நமக்குப் புரியவைக்கிறது.
நாவலின் தலைப்பான 'இடக்கை' என்பது இடது கைப் பழக்கம் கொண்ட 'சாமர்' இன மக்களைக் குறிக்கிறது. தூமகேது என்ற கதாபாத்திரத்தின் வழியாக, இந்த எளிய மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி அநீதியாக நடத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். "இடக்கை என்பது வெறும் கையல்ல; அது இந்த ராஜ்யத்திற்குப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதி" என்ற தாயின் கூற்று சமூகத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது.தூமகேதுவின் மனைவி மலம் அள்ளும் தொழில் செய்பவர்."சொர்க்கத்திற்கு சென்றாலும் அங்கேயும் நம்மை மலம் அள்ளச் சொல்லுவார்கள்.நம்மை இவர்கள் மனிதர்களாக மதிப்பதேயில்லை எனும் வரிகள் வலிமிகுந்தது.
செய்யாத குற்றத்திற்காக தூமகேது கைது செய்யப்பட்டு, பிஷாடன் என்ற சிற்றரசனின் கட்டுப்பாட்டில் உள்ள 'காலா' சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக்ரதார் போன்ற அறிஞர்களைச் சந்திப்பதன் மூலம் நீதியைப் பற்றிய புதிய பார்வையைப் பெறுகிறார். பின்னர் சிறையிலிருந்து தப்பிக்கும் அவர், தனது மனைவி நளா மற்றும் பிள்ளைகளைத் தேடி நாடெங்கும் அலைகிறார்
நாவலில் வரும் சூபி ஞானி இபின் முகைதீன் மற்றும் சிறைச்சாலையில் சந்திக்கும் சக்ரதார் போன்ற கதாபாத்திரங்கள் நீதியைப் பற்றிய நுட்பமான தத்துவங்களைப் பேசுகிறார்கள். "சட்டம் யாவருக்கும் சமம், ஆனால் அந்தச் சட்டத்தை யார் உருவாக்குகிறார்கள் என்பதில் தான் நீதி ஒளிந்துள்ளது" என்பது போன்ற விவாதங்கள் சிந்திக்க வைக்கின்றன.
அதிகாரம் நீதியை வளைக்கலாம், ஆனால் காலம் வழங்கும் நீதியையும் இயற்கையின் விதியையும் யாராலும் மாற்ற முடியாது.
பேரரசரின் அந்தப்புரப் பணியாளரான அஜ்யா என்ற திருநங்கையின் கதாபாத்திரம், ஒளரங்கசீப் இறந்தவுடன் கைது செய்யப்பட்டு, சிறைவாழ்வு விவரிக்கப்படுகிறது. அதிகார மாற்றத்தின் போது நடக்கும் வன்முறைகளையும், ஒரு தனிமனிதனின் விசுவாசத்தையும் காட்டுகிறது. ஔரங்கசீப் தன் கைப்படத் தைத்த ஒரு குல்லாவையும், தங்க நாணயங்களையும் ஒரு எளிய மனிதனிடம் ஒப்படைக்கச் சொல்லி அஜ்யாவிடம் வேண்டுவது, அவரது இறுதிக்கால மனமாற்றத்தைக் காட்டுகிறது.அஜ்வாக்காக உயில் எழுதுகிறார். தான் இறந்த பின் ஒப்படைக்க வேண்டிய பொருட்களை குறித்துக் கொடுக்கிறார்.
இதற்காகப் பயணம் மேற்கொள்ளும் அஜ்யா, ஒற்றர்களால் சந்தேகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இறுதியில், மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்குப் பிறகு அஜ்யா தூக்கிலிடப்படுகிறார்.
'இடக்கை' நாவல் வெறும் வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பல்ல. அது, "அதிகாரம் என்பது ஒரு மரண சிம்மாசனம்" என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் எதைத் தேடி ஓடினாலும், இறுதியில் அவன் எஞ்சுவது அவனது அறம் சார்ந்த செயல்களால் மட்டுமே என்பதை இந்நாவல் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
*நாவல், அரியணையில் உலகையே அசைத்துப் பார்த்த மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தனது 88-வது வயதில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பதில் இருந்து தொடங்குகிறது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் அவர், தனது கடந்த காலச் செயல்களை எண்ணி வருந்துகிறார். குறிப்பாக, தனது இளமைக்காலத்தில் 'அனா' என்ற தாதி கேட்டுக் கொண்டதற்காக, உதிர்ந்த ஒரு பூவை மீண்டும் கிளையில் ஒட்ட வைக்க முயன்று தோற்றுப்போகிறார். அந்தத் தோல்வியைத் தாங்க முடியாமல் அந்தப் பூவைத் தைக்கத் தெரிந்த அந்தத் தாதியை யானை காலில் மிதித்துக் கொல்ல ஆணையிடுகிறார். இந்தச் செயல் அவரது மனச்சாட்சியைத் தனது இறுதிக்காலத்தில் பிசைகிறது.
*சத்கர் தேசத்தை ஆளும் பிஷாடன், அதிகார போதையில் இருக்கும் ஒரு கோரமான ஆட்சியாளராகச் சித்தரிக்கப்படுகிறார். குரங்குடன் சதுரங்கம் ஆடுவது, மக்களுக்கு விசித்திரமான தண்டனைகளை வழங்குவது என இவரது காலம் அநீதியால் நிறைந்துள்ளது. இவரது முட்டாள்தனமான உத்தரவுகளால் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள்.
நாவலின் இறுதியில், ஔரங்கசீப் இறந்துபோகிறார். அவர் அஜ்யாவிடம் கொடுத்து அனுப்பிய குல்லா, பல கைகள் மாறி இறுதியாக அலைந்து திரியும் தூமகேதுவின் கைகளுக்கு வந்து சேர்கிறது. பேரரசர் தன் கையால் தைத்த அந்தக் குல்லாவை, அதன் மதிப்பு அறியாமல் ஒரு பிச்சைக்காரன் தூமகேதுவுக்குத் தானமாகத் தருகிறான்.
*கஷ்டங்கள் தானே வருவதில்லை, நாம் என்றோ விதைத்தவையே இன்று உருமாறித் திரும்பி வருகின்றன."
*குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பு ஒன்றுதான் ஆறுதலானது
*தூமகேதுவின் இறுதி அலைச்சல்: பல ஆண்டுகள் தனது மனைவி நளா மற்றும் பிள்ளைகளைத் தேடி அலைந்த தூமகேது, இறுதியில் உடல் நலிந்து, பேசக்கூடத் தெம்பற்ற நிலையில் ஒரு புளியமரத்தடியில் வந்து அமர்கிறார். தான் ஒரு நடைப்பிணம் என்று உணரும் அவர், இனி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ற விரக்தியில் கண்களை மூடிக்கொள்கிறார்.
அதற்கு மொகலாய் ஆட்சி மாற்றத்தை விவரிக்கிறார்.
அப்போது அந்த வழியாக ஒரு தர்காவிற்கு யாத்திரை செல்லும் ஒரு பெரிய கூட்டம் வருகிறது. அவர்களில் ஒருவர் தூமகேதுவுக்குச் சில நாணயங்களைத் தருகிறார், மற்றொருவர் உணவும் நீரும் தந்து அவரை ஆற்றுப்படுத்துகிறார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரன், தனது தலையில் இருந்த வெண்ணிறக் குல்லாவைக் கழற்றி, "சகோதரா, இதை அணிந்து கொள். வெயிலில் இருந்து உன்னைப் பாதுகாக்கும்" என்று கூறி தூமகேதுவுக்குத் தானமாகத் தருகிறான். அது பேரரசர் ஔரங்கசீப் தனது இறுதிக்காலத்தில் தன் கைப்படத் தைத்து, அஜ்யாவிடம் கொடுத்து அனுப்பிய அதே குல்லா என்பது தூமகேதுவுக்குத் தெரியாது.
யாத்ரீகர்களில் ஒருவன் தனது கையில் இருந்த ஒரு சாமந்தி மாலையை தூமகேதுவை நோக்கி வீசுகிறான். பத்து வயதில் ஒரு திருவிழாவின் போது தான் ஆசைப்பட்ட அந்தச் சாமந்தி மாலை தன் மடியில் வந்து விழுந்ததும், தூமகேதுவின் கண்கள் கலங்குகின்றன.தன்மனைவியை காட்ட தேடுகிறான்.அவள் இல்லாமல் வருந்துகிறான். ஆனாலும் அங்கு கேட்கும் மேளச்சத்தத்தை கேட்டு இடது கை தாளமிடுகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment