சமகாலத் தமிழ் சிறுகதைகள்
-பாரதிபாலன்
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் (2000–2020) என்பது எழுத்தாளர் பாரதிபாலன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. இருபது ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறுகதைகளை ஒரே நூலில் தொகுத்து வழங்கும் முயற்சியாக இது உருவாகியுள்ளது.
உலகமயமாக்கல், நகரமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, குடும்ப உறவுகளின் மாற்றம், பெண்களின் வாழ்வியல், விளிம்புநிலை மக்களின் குரல், சாதி, பாலினம், சுற்றுச்சூழல், இடம்பெயர்வு போன்ற பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் இக்கதைகளின் வழியாக வெளிப்படுகின்றன. இதில் இமையத்தின் வீடியோ மாரியம்மன், ஜெயமோகனின் அறம் உள்ளிட்ட கதைகள் அதிகம் கவனம் ஈர்த்ததால் புதிய எழுத்தாளர்களின் சில கதைகளை பகிர்கிறேன்.
அரசயல் புலனாய்வு பத்திரிக்கை துறையில் வேலை செய்யும் நிருபரின் அனுவபவங்கள், நிர்வாகத்தினரிடம் சந்திக்கும் பிரச்ச்னைகளே ஞாபக குறிப்பு கதை.
கதை எழுத நினைக்கும் குடும்ப தலைவி கதையின் கருவாக என்ன எழுதலாம் என யோசிக்கும் கதையில் அடுத்தடுத்து நடைபெறும் அன்றாட அவஸ்தைகளே அவளுக்கு கருவாக கிடைப்பதுதான் கரு வின் கதை. வார்த்தைக் கோர்வையில் சம்பவங்களை அடுக்கிச்செல்லும் உமா மகேஸ்வரியின் ஆற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
அழுக்கான ஆடை உடுத்தும் தந்தையால் மன உளைச்சலுக்கு உண்டாகும் மகன் அதன் காரணத்தை அறியும் போதுதான் உண்மை புலனாகிறது என்பது புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள் கதை. அழகிய தலைப்பாக கதைக்கு பொருத்தமானது.அப்பாக்கள் மீதான மகன்களின் உளவியல் பார்வையை முன்வைக்கிறது.
ஒரு தோப்பு வாங்க நினைக்கும் இடைநிலை ஆசிரியருக்கு அந்த தோப்பு வாங்க வேண்டிய அவசியத்தை அழகியப்பெரியவனின் தோப்பு கதை உணர்வு பூர்வமாக சொல்கிறது.இக்கதையை பவா செல்லத்துரையின் கதையாடலில் கேட்டிரிந்தாலும் படிக்கும்போது இன்னும் வீரியமிக்கதாய் உள்ளது
டொமினிக் எனும் அயல் நாட்டுக்காரன் திருவண்ணாமலை ஆசிரமத்தில் நீண்டகாலம் வசிப்பவன். கணவனை பிரிந்த ராணியையும் குழந்தையும் பாதுகாப்பவன். ஒரு நாள் அவளின் கணவன் சக்திவேலுடன் கைகலப்பு ஆகிறது. அதன் பின் டொமினிக் எடுக்கும் முடிவு தான் பவா செல்லத்துரையின் டொமினிக் கதை.
"இரு நண்பர்கள் கைகுழுக்கி தழுவும் போது உடல் சூடு இடம் மாறுகிறது" என்கிறார்.
"கடந்த கால இழிவுகள், பெருமிதங்கள் ஒரு போதும் நிகழ்காலப் பசியைப் போக்கி விடுபவையலல",
"வாழ்வின் ரகசிய முடிச்சுகள் ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது"" அவன் நடையில் ஒரு தீர்மானமிருந்தது" ;போன்ற வரிகள் ரசிக்க வைத்தன.
ஐந்து பெண்களை மணந்த பாஞ்சாலியின் உணர்வுகளை தர்மத்தின் ஆகுதியில் வெண்ணிலா விவரித்துள்ளார்.
மணவிலக்கு கோரிய மனைவியை பத்து மாதங்களுக்கு பிறகு சமாதானம் பேச கேரளாவில் சந்திக்கும் கணவன் எதிர்கொள்ளும் மன உளைச்சல் தான் சாம்ராஜின் அனந்தசயனபுரி கதை.
' ஏறக்குறைய தெருவில் யாரும் இல்லை.ஒரு நீள் மெளனம் போல் தெரு கிடந்ததாக சொல்லும்போது நாமும் உறைந்து நிற்கிறோம்.மரம் மழையை ஞாபகம் வைத்துச் சொட்டிக் கொண்டிந்தது அழகிய காட்சி.
பிள்ளையில்லாத இசக்கிமுத்து குலதெய்வமான கருப்பசாமியை கும்பிட்டு வரும்போது எதிர்படும் ஆட்டை.. பிள்ளை போல் வீட்டில் வளர்கிறான். பிள்ளை பிறந்தபின் நேர்த்திக்கடன் செலுத்துவதில் பாசம் தடுக்கிறது. அந்த உணர்வு போராட்டம்தான் குலசாமியை கொன்றவன் கதை.கிராமத்து எளிய மனிதர்களின் மனசாட்சியை அழகாக கதையாக்கியுள்ளனர்
பிரசவ அறையில் இருக்கும் பெண்ணின் மன உணர்வு.. ஆர்வமும் எதிர்பார்ப்பும் உடைய குரல்கள் கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பதை பெண்ணின் மனம் எவ்வாறெல்லாம் சந்தோசத்தை பயத்தினூடே கடத்தும் நிகழ்வுகளே பிரசவ வெளி கதை.
வெற்றிகள் இல்லாத காலங்களில் ஒரு குதிரை ஜாக்கிக்குள் இருக்கும் வெறுமை கொடூரமானது.குதிரை ரேஸில் உயிர் தப்பிய அசோக் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் ப்ளூவின் பாசப்பிணைப்பு ஆழமானது. தற்போதைய ப்ளூவின் நிலையை எண்ணி வெதும்பி வெளியேறும் அசோக்கை போலவே நம்மை நெகிழ வைக்கிறது.
சித்த வைத்தியரான தாத்தாவிற்கும் மருத்துவரான பேரன் சுதர்சனுக்கும் இடையில் நடக்கும் பாசமும் தொழில் அர்ப்பணிப்பும் அம்பு படுக்கை கதை.
தூர் கவிதை போல அப்பாவின் மனதை தூர்வாராமல் இருந்து உண்மைய தெரியவரும்போது அப்பா தொலைந்திருப்பார்.. இறுதியாக மகன் உணர்ந்தது தான் மனக்கிணறு கதை.தாழம்பூ டீச்சரின் காதல் வாழ்க்கை தோல்வியடைய மண வாழ்க்கையும் தோல்வியடைய அவரின் ஈரமணமும் ஈகை குணமும்.ல் என்றும் தோல்வியடையாது என்பதை தாழ்ம்பூ டீச்சரின் கதை உணர்த்துகிறது.
அன்றாடம் கழிவு நீர்க்குழாயில் விஷவாயு தாக்கி தொழிலாளி மரணம் எனும் செய்தியை நாம் பார்த்து கடந்திருப்போம். அதன் வலியை சவக்குழி கதையில் காட்டியிருப்பார்கள்.இறுதியில் அது வழக்கமான பிணநாற்றம் அல்ல என்ச் சமுதாயத்தின் முகத்தை அதிகாரத்தின் தப்பித்தலை தோலுருத்து காட்டியிருப்பார்.
ஆணவ படுகொலையையும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பையும் நாயம்மை கதையில் சுகுணாதிவாகர் காட்சிபடுத்தியிருப்பார்."அது என்னவோ மகள்கள் அம்மாவாகப் போகிறார்கள் என்று தெரிந்தால் அம்மாக்கள் குழந்தையாகிவிடுகிறார்கள் என எதார்த்தத்தை சொல்லியிருப்பார்.
செய்தி சேனலில் வேலை பார்க்கும் நர்மதாவுக்கு நிறைய எதிரிகள். காரணம் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை எடுத்து விவாதிப்பதால்.அப்போது ஒரு நாள் முகம் தெரியாத ஒருவன் கறுப்பு மை அடித்து விட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் என்ன ஆனது என்பதே எஸ்.ரா எழுதிய கருப்பு ரத்தம் கதை
சிறுகதைகள் மனித உறவுகள், வாழ்க்கையின் உண்மைகள் குறித்து புதிய பார்வையை உருவாக்குகின்றன.சாதி, பாலின சமத்துவம், வறுமை, சுற்றுச்சூழல், கல்வி போன்ற பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வு உருவாக்குகின்றன.பல எழுத்தாளர்களின் கதைகள் உள்ளதால் புதிய சொற்கள், நடைகள், உவமைகள் ஆகியவற்றை அறிய பல்வேறு கதைகள் உதவுகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment