மென்மையின் உணர்வு....முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஏசியறை டேபிளின் மேல் மினுமினுக்கும் பொன்னிறத்திலான பெயர்ப் பலகை அழைப்பு மணிக்கு ஓடி வர ஓர் உதவியாள் பணியில் சேர்ந்த முதல்நாள் அலுவலகக் கோப்பொன்றில் கையொப்பமிடுகிறேன் தாத்தாவும் அப்பாவும் அடித்தடித்து ஓய்ந்த பறைக் குச்சிகள் போல் கடினமல்லாது பிடிப்பதற்கு அத்தனை மென்மையாகவே இருக்கிறது அந்தப் புதுப் பேனா.-வெ.தமிழ்க்கனல்
No comments:
Post a Comment