Thursday, 1 January 2026

மனசு-2


#மனசுக்கு_ஒரு_தேநீர்_2

“நிகழ்வுகள் நம்மை பாதிப்பதில்லை;
அவற்றைப் பற்றிய நம் எண்ணங்கள்தான் பாதிக்கின்றன.

Accept what is out of our control

எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் ஒரு வசனம் சொல்லுவார்.. பால் கொட்டிடுச்சேனு கவலைப்படாத, அதிலயும் பாதி தண்ணிதான கலந்திருக்குனு ஈசியா ஏத்துக்க என்பார். அதுதான் ஸ்டோயிசம்.
கிரேக்க சிந்தனைக்கு பிறகு வந்தது.
பொறுமை, புத்திசாலித்தனம் ஆகியவற்றுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது

ஒரு ஞானியிடம் ஒரு அழகான கண்ணாடிக் கிண்ணம் இருந்தது.
அவர் தினமும் அதை பயன்படுத்தும்போது,
“நீ உடையக்கூடியவள்” என்று மனதிற்குள் சொல்வார்.
ஒருநாள் அது உடைந்தது.
அவர் வருந்தவில்லை.
“நான் தயாராக இருந்தேன்” என்றார்.
ஸ்டோயிக்கின் கருத்து 
எல்லாமே நிலையற்றது என்பதை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டால், துக்கம் குறையும்.ஏனெனில் நாம் பிரச்சினைக்கான தீர்வு பற்றி சிந்திப்பதை விட,பிரச்சினைகளை
பற்றி மட்டும் அதிகம் சிந்திக்கிறோம்.

எண்ணங்கள் நிகழ்காலத்தை  சிந்திக்க விடாமல் எதிர்காலத்தை மட்டும் அதிகம் சிந்திக்க வைக்கும்.
அதனால் தான் அதற்கு வருந்துகிறோம்.துக்கத்தை கூடுதலாக கற்பனை செய்து கொள்வதில் மனிதனுக்கு அலாதி பிரியம் என்கிறார் சுந்தர ராமசாமி.

எந்த ஒரு எதிர்மறை நிகழ்வு நடந்தாலும் நம்மை அது பாதிக்காத வகையில் எடுத்துக் கொள்வது மனதிற்கு நல்லது என்கிறார்.
நிகழ்வுகளை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் அதுவே மனதிற்கு நல்லது.

Live, live the wonderful life that is in you. Let nothing be lost upon you. Be always searching for new sensations. Be afraid of nothing,' 

உன்னுள் இருக்கும் அற்புதமான வாழ்க்கையை வாழ்; வாழ்.
உன்னைச் சுற்றி நிகழும் எதையும் தவறவிடாதே.
புதிய உணர்வுகளை எப்போதும் தேடி கொண்டே இரு.
எதற்கும் பயப்படாதே.”
என்கிறார் ஆஸ்கர் ஒயில்டு

புத்தம் புது காலையுடன்
மணிகண்டபிரபு

No comments:

Post a Comment