Monday 30 September 2024
Sunday 29 September 2024
ஜூலியஸ் சீசருக்குப் பின்பு மன்னர்கள் தம்மை அகஸ்டஸ் சீசர் என்ற பெயரில் அழைத்துக்கொண்டனர், இதனால் "சீசர்" என்ற வார்த்தை "ராஜா" என பரவலாகப் பொருள்படத் தொடங்கியது. இந்தச் செல்லும் மரபு தொடர்ந்து, "சீசர்" என்றால் மன்னர் அல்லது பேரரசர் என்ற அங்கீகாரம் பல இடங்களில் நிலைத்தது. "சீசர்" என்ற பெயர், காசர் (Kaiser) மற்றும் சார் (Tsar) போன்ற வார்த்தைகளாகவும் வடிவெடுத்தது."சீசருக்கு கொடுக்கவேண்டிய காசை சீசருக்கு கொடு" என்பது பைபிள் வசனம். இங்கே "சீசர்" என்பது ரோமின் மன்னரை குறிக்கிறது. இதுவே சீசர் என்ற பெயரை அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் ஆக்கியது.ஜூலியஸ் சீசர் கடைசி வரை மன்னர் ஆகவில்லை. "சீசர்" என்றால் லத்தீனில் "வெட்டு" எனும் பொருள் கொண்டது. சிலர் "சீசர்" என்றால் அறுவை சிகிச்சையால் பிறந்த குழந்தை என பொருள்படும் என்று நம்புகின்றனர்.அதே காரணத்தால் இன்றும் அறுவை சிகிச்சையின் பெயர் "சிசேரியன்" என அழைக்கப்படுகிறது.-நியாண்டர் செல்வன்
Saturday 28 September 2024
Friday 27 September 2024
நியாண்டர்
*மெதனாஜின் முப்பாட்டன்*
பூமியில் ஆக்ஸிஜன் இல்லாத துவக்ககாலக்ட்டத்தில் (400 கோடி ஆண்டுகள்) முன்பு கார்பன் டை ஆக்ஸைடை மூச்சுவிட்டு, ஹைட்ரஜனை உணவாக உட்கொள்ளும் வகை அனேரொபிக் மெதனாஜின்கள் (Anaerobic methanogen) தோன்றின. இவற்றின் கழிவுகள் தான் மீதேன் வாயு. பயோகேஸில் இருக்கும் அதே வாயுதான்
ஆக ஹைட்ரஜனும், கார்பன் டைஆக்சைடும் இருக்கும் பகுதிகளில் இம்மாதிரி மெதனாஜின் உயிரிகள் பிழைக்க வாய்ப்புகள் உள்ளன
ஆனால் தட்பவெப்பம் சரியாக இருக்கவேண்டும். வீனஸில் 95% வளிமண்டலம் கார்பன்டைஆக்சைடுதான். ஆனால் வீனஸில் 465 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம். இந்த சூட்டில் எந்த உயிரினாமவது வாழ முடியுமா? வாய்ப்பே இல்லை
செவ்வாயிலும் 95% CO2 தான். ஆனால் வெப்பநிலை மிக குறைவு. ஆனால் செவ்வாயின் மேற்புறத்தில் சூரியனின் கதிர்கள் சும்மா வறுத்தெடுத்து ரோஸ்ட் ஆக்கிவிடும். அதற்கு காந்தபுலன் இல்லாததால் பூமி மாதிரி ரேடியேஷனில் இருந்து பாதுகாப்பு இல்லை.
செவ்வாயின் பூமிக்கு அடியில், சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு கொடுத்தால் மெத்னாஜின் உயிரினங்கள் செழித்து வளர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சொல்லபோனால் செவ்வாயின் சுரங்கங்களில், மலைக்குகைகளில் மெதனாஜின் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியகூற்றை விஞ்ஞானிகள் மறுக்கவில்லை. செவ்வாயில் எங்கே மீதேன் லீக் ஆகிறதோ, அங்கே மெதனாஜின் இருக்கலாம்
செவ்வாயில் கேல் கிரேட்டர் மாதிரியான சில இடங்களில் மீதேன் சுரப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. அங்கே இருப்பது என்ன? மெதனாஜின் உயிரினங்களின் பயாலஜி மூலம் உருவான மீதேனா இல்லை இயற்கையாக நிலவியல் (Geology) மூலம் உருவான மீதேனா?
விடையை என்றாவது ரோவர்கள் கண்டுபிடிக்கும்
-நியாண்டர் செல்வன்
Thursday 26 September 2024
Wednesday 25 September 2024
கொகுல் பிரசாத்
‘1983’ என்றொரு மலையாளப் படம். ரமேஷனாக நிவின் பாலி நடித்தது. ரமேஷனுக்குப் பயங்கர கிரிக்கெட் பைத்தியம். உள்ளூர் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக ஆடிக்கொண்டிருக்கிறான். அதே பள்ளியில் படிக்கும் மஞ்சுளா மீது காதல் இருக்கிறது. அதீத கிரிக்கெட் மோகத்தால் படிப்பில் கோட்டைவிடுகிறான். அதனால் காதலியும் வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இவனைக் கைவிடுகிறாள்.
சரியான வேலை, வருமானமில்லாமல் சச்சின் என்றால் யாரென்றே தெரியாத ஒரு தற்குறியை வேறுவழியின்றி மணம் செய்துகொள்கிறான். வாழ்க்கை அவனைப் பந்தாடத் தொடங்குகிறது. தந்தையின் எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்துகொண்டே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் கிரிக்கெட ஆடுவதற்கு அவன் தவறுவதில்லை. மனம் முழுக்க விளையாட்டு ஆக்கிரமித்திருக்க, பிழைப்புக்காக விருப்பமில்லாத வேலையைச் செய்யவேண்டிய திரிசங்கு நிலை.
1983ஆம் ஆண்டு கபில்தேவ் அணி உலகக்கோப்பையை வென்றபோது இந்தியாவெங்கும் கிரிக்கெட் மைதானங்கள் உருவாகின. பொடியன்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த வெற்றி தந்த உற்சாகமும் விதைத்த கனவுகளும் அளப்பரியது. பதினொரு பேர் ஆடும் குழுவில் சேர்வதற்கு லட்சக்கணக்கான மனங்கள் அடித்துக்கொண்டன. அதில் ஒருவன்தான் ரமேஷன். ஒருகட்டத்தில், தனது லட்சியம் நிறைவேறாது என்பதை அவன் உள்ளூர அறிந்தே இருப்பான். ஆனாலும், விளையாட்டின் மாயக்கரம் அவனை இழுத்துப் பிடித்திருக்கும். வீட்டின் வசவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், ஊரின் கேலிகள் என எதுவும் அவனைத் ‘திருத்தாது’.
அவன் எதற்காக விளையாடுகிறான்? விளையாட்டுக்காக மட்டும்தான். பணம், புகழ் போன்ற கற்பனைகள் வடிந்த பின்னும் வாழ்க்கை புரட்டிப்போட்ட பிறகும் ஆட்டத்தின் பிடி இளகாது அவனைப் பற்றியிருக்கும். தனது அடையாளம், ஆளுமை ஆகியவற்றை ஆட்டத்தைச் சுற்றியே அவன் கட்டமைத்திருப்பான். எல்லாவற்றுக்கும் மேலாக, எதோவொரு பொற்கணத்தில் ஆட்டமும் அவனும் ஒன்றாகும் தருணத்துக்காக அவன் விளையாடுகிறான். அவமானங்கள், தோல்விகள், ஏக்கங்கள் யாவும் அந்தப் பொற்கணத்தில் இல்லாமலாகின்றன. அவனும் ஆட்டமும் மட்டும் அந்தரங்க வெளியில் தனித்திருக்கும் சிலிர்ப்புக்காக அவன் ஆடுகிறான்.
அவனுக்கு வயதாகிறது. நாற்பதுகளின் மத்தியில் இருக்கிறான். ஆனாலும் அவனது ஆட்டத் திறமையினால் தங்களது அணியில் இளவல்கள் அவனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். வேறு எதோ ஊருக்காக ஆடச்செல்கிறான். ஒலிபெருக்கியில் அவனது பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு கூட்டத்தில் இன்னொரு ஆள் எட்டிப்பார்க்கிறான். எப்போதோ பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடியவர்கள். அந்த ஆட்டத்தில் அரைச் சதத்தைக் கடந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக ரமேஷன் வெளுத்து வாங்குவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். ‘இன்னமும் பழைய தீ குறையல இல்ல?’ என்று அசந்துபோகிறான்.
ஆட்டத்தின் முடிவில் ரமேஷன் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறான். ஆட்டத்துக்குத் தலைமையேற்று விருது வழங்க வந்தவர், ‘இந்த மேட்ச்லகூட ஒரு நடுத்தர வயது ஆள் நல்லா ஆடினார். இப்படி எத்தனையோ திறமைசாலிகள் உரிய அங்கீகாரம் இல்லாம, வாய்ப்புகள் கிடைக்காம காணாம போயிட்டாங்க’ என்று விசனப்படுகிறார். கூச்சத்துடனும் மெல்லிய புன்சிரிப்புடனும் ரமேஷன் புளகாங்கிதம் அடைகிறான். இந்தக் காட்சியை நினைக்கும்போதெல்லாம் புல்லரிப்புடன் அச்சமும் சேர்ந்தே பரவுகிறது.
எத்தனை எத்தனை பேர் கிரிக்கெட்டுக்காகத் தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்? எது அந்த குன்றாத ஈடுபாட்டைத் தக்க வைக்கிறது? ஒருகாலத்தில் தீவிர வேட்கையாக, வாழ்க்கை நோக்கமாக, ஊனும் உயிரும் கனவுமாக இருந்த விளையாட்டு மெல்ல மெல்ல இளைப்பாறலாகவும் ஆசுவாசமாகவும் மாறத் தொடங்குகிறது. மைதானத்தையே தாங்கள் வென்றெடுக்கும் வாழ்க்கைக் களமாகக் கருத ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிக்ஸ் அடிக்கும்போது வானத்தை எட்டிப் பிடித்துவிட்ட தாளாத உற்சாகம். லௌகீக வாழ்வில் கிட்டாத வெற்றிக் களிப்பு.
விளையாட்டும் கலையும் அப்படித்தான். ஒருமுறை அந்தப் போதை ஏறிவிட்டால் சாகும்வரை கைவிடாது.
Tuesday 24 September 2024
உண்மையை தேர்ந்தெடுப்பவர்களைச் சுற்றி மெல்ல மெல்ல ஒரு தனிமை வந்துவிடுகிறது.தேவையற்ற சப்தங்கள் இல்லாத,சகிக்கமுடியாத சிரிப்புகள் இல்லாத ஒரு தனிமை.எல்லா தனிமைகளும் சோர்வளிப்பவை அல்ல.உண்மையின் பாற்பட்ட தனிமைக்கு மெல்லிய இசைமையும்,மெலிதான ஒளியும் உண்டு.மலைப்பாதையின் அதிகாலையில்அப்போதுதான் சூரியவெளிச்சம் படும்சிறிய நீரோடையின் அழகைப்போன்ற,தனித்த , ஒளிபொருந்தியஒரு வாழ்வும் அதற்கு உண்டு.-திருச்செந்தாழை
தம்ஸ் அப்
‘சக்ஸஸ்’ என்பதற்குப் பெருவிரலை உயர்த்திக் காண்பிக்கிறோமே, ஏன்?
கட்டை விரல் வாளின் குறியீடு! போரில் வெற்றி பெற்ற வீரர்கள் தலைக்கு மேலே வாளை உயர்த்திக் காட்டுகிறார்கள் இல்லையா, அதே அர்த்தம்தான்! பண்டைய ரோம் நாட்டில், ஸ்டேடியத்தில் இரு வீரர்கள் மோதுவார்கள். ஒருவர் தோற்று வீழ்ந்தவுடன், மக்கள் ‘கொல்லு, கொல்லு’ என்று ஆர்ப்பரிக்க, மன்னர் தன் கட்டை விரலைத் திருப்பிக் கீழே காட்டுவார். ‘அவனைக் கொன்று விடு!’ என்று அர்த்தம்.
‘அவனை உயிரோடு விட்டு விடு!’ என்பதற்கு, மன்னர் கட்டை விரலை மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொண்டு, முஷ்டியை உயர்த்திக் காட்டுவார். இப்போதும், இத்தாலியில் மட்டும் ‘சக்ஸஸ்’ என்பதற்கு அப்படித்தான் காட்டுகிறார்கள். ‘தம்ஸ் அப்’ பழக்கம், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பாடு அதை அமெரிக்கர்கள் பிரபலப்படுத்தினார்கள். நாமும் அதைக் காப்பி அடிக்கிறோம்!
-மதன்
Monday 23 September 2024
பார்வையற்ற கோழி ஒன்று இருந்தது. பாவம், ஓயாமல் மண்ணை கிளறிக்கொண்டே இருக்கும். புழுவோ, பூச்சியோ, தானியமோ அதன் பார்வையற்ற கண்ணுக்கு படவே படாது. இன்னொரு கோழி மகா கூர்மையான கண். அது கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாது. அக் கோழி கிளறிய இடங்களில் அதன் கண்ணுக்குப் படாத தானியங்களைத் தின்றுவிட்டு ஆனந்தமாகத் திரியும்.இந்த இரண்டாவது கோழியைப் பின்பற்றுங்கள். எல்லாவற்றையும் நாமேதான் செய்யவேண்டும் என்று தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டால் முன்னேறமாட்டீர்கள். உங்களிடம் எந்தத் திறமை இல்லையோ,அதைபிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். திறமையுள்ளவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்."நான் மகத்தான அறிவாளிகளின் மீது நின்றுதான் என் அறிவைப் பெற்றேன்" என்றார் நியூட்டன்.
Sunday 22 September 2024
லப்பர் பந்து
லப்பர் பந்து விமர்சனம்
*மணி
விளையாட்டை மையப்படுத்திய கதையில் அரசியல்,பேண்டசி, பெண்களும் விளையாடனும் என கமர்சியல் படங்கள் அதிகம் வந்துள்ளன.இப்படம் அதிலிருந்து சற்று விலகி குடும்ப பின்னணியுடன் சாதிய சமத்துவத்தை பேசும் படமாய் வந்துள்ளது.
#கதை
2011ல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விஜயகாந்த் ரசிகரான கெத்து தினேஷ் அந்த ஏரியாவின் மாஸ் பேட்ஸ் மேன்.லப்பர் பந்து மேட்ச்சில் இறங்கினாலே சிக்ஸர்தான். அந்த மேட்ச்சை பார்க்க வரும் பவுலரான பள்ளி மாணவன் ஹரீஸ் கல்யாண் ஜாலி ப்ரண்ட்ஸ் டீமில் சேர்ந்து தானும் விளையாட ஆசைப்படுகிறார். ஆனால் ஜாதி காரணத்தால் அவமானப்படுகிறார்.
சிறு இடைவேளைக்கு பின் அனைத்து டீமீலும் கெஸ்ட் ப்ளேயர் போல ஹரீஸ் கல்யாண் விளையாடிக்கொண்டு தன் தொழிலையும் கவனித்து வருகிறார்.
கெத்து தினேஷ் வயதான பின்னும் தன் அதிரடியால் பேட்டிங்கில் சாதனை படைக்கிறார். ஆனால் அவரின் பலவீனங்களை விமர்சிப்பதால் ஹரீஸ் கல்யாண்க்கும் தினேஷ்க்கும் ஈகோ மோதல்.
தான் காதலிக்கும் பெண்ணின் தந்தைதான் தினேஷ் என தெரியவரும் ஹரீஷ்க்கு க்ளீன் போல்டான சோகம்.தன் மகளின் காதலன் ஹரீஸ் என தெரியவரும் தினேஷ்க்கு டக் அவுட்டான ஃபீல்
இவர்களின் ஈகோ யுத்தம் என்ன ஆனது, கிரிக்கெட் விளையாட்டை வெறுக்கும் மனைவி மருமகன் கிரிக்கெட் ப்ளேயர் என தெரிந்ததும்
அவர்களின் காதல் கைகூடியதா, குடும்ப சம்மதத்திற்கு காத்திருக்கும் நாயகியின் நிலை இந்த கதைதான் டி20 போல் இறுதி வரை பரபரப்பாய் ஆடியிருக்கிறது
#ப்ளஸ்
*தினேஷ் மற்றும் கல்யாண் இருவரின் நடிப்பும், ஆக்ரோசமும் யதார்த்தமாய் வெளிப்பட்டுள்ளது.
*விளையாட்டுடன் குடும்பம் காதல், ஈகோ என தொய்வின்றி பயணிக்கும் திரைக்கதை ப்ளஸ்
*சாதித் திமிரா ஆம்பள திமிரா? எனக்கும் எஸ் சி நண்பன் இருக்கான்னு சொல்லும் நீங்க இன்னும் வெசக்கூட்டம், அவன் உங்க தம்பி நாங்க உங்களுக்கு தம்பி மாதிரி என சொல்லும் வசனங்கள் நச்
*காளி வெங்கட்டும் அவரின் மகளும் மேட்ச் ஆடும் இடம்
*திறமைதான் முக்கியம் என்பதை படத்தின் ஆரம்பக்காட்சியில் பேருந்தில் பாடல் ஒலிக்கும் போது ராஜா ராஜாதான்னு சொல்லுவார். பசங்க இது தேவான்னு சொல்லும் இடம் நாயகன் மற்றும் அன்புக்கு குறியீடாக உள்ளது
*தினேசின் மனைவியாய் வரும் சுவாசிகா தன் வாழ்க்கையை போல மகளுக்கும் அமைந்துவிடக் கூடாது என மெனக்கெடுவதும், குடும்பத்தின் மீதான பாசமும் நன்று.
*வெட்டவெளி மைதானத்தின் அழகும் நுட்பத்தையும் ஒளிப்பதிவாளரும், மாண்டேஜ் பாடல்களில் இசையும்,
பொட்டு வச்ச தங்கக்குடம் பாட்டும் விஜயகாந்த் ரெஃரன்சும் ப்ளஸ்
*க்ளைமேக்சில் வரும் சாதிய சமத்துவ மெசேஜ். திறமைக்கு வாய்ப்பு கொடுக்க வைத்திருக்கிறது ஒரு வெற்றி
#மைனஸ்
*லப்பர் பந்து ஆடுபவர் கார்க் பந்தில் முதல் ஆட்டத்தில் தடுமாறும் நாயகன், எந்த வித பயிற்சியும் இல்லாமல் அடுத்த ஆட்டத்தில் 96 ரன் அடிப்பாரா?
*ஈகோ மோதலுக்கு இன்னும் வலுவான காரணம் வைத்திருக்கலாம்.
குறைகளை விட நிறைகள் அதிகம் இருப்பதால் லப்பர் பந்து சிக்ஸ் பறக்கிறது
-மணிகண்டபிரபு
Saturday 21 September 2024
Friday 20 September 2024
‘ஆறு செகண்டுகள்’ என்கிற ஒரு கட்டுரையை பாலா ஸ்டீட் என்பவர் எழுதியிருக்கிறார். 1982-ல் பான் அமெரிக்கன் விமானம் ஒன்று நியூஆர்லினன்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனே மரத்தின் மேல் மோதி, ஆறு செகண்டுகள் பைலட் அதைச் சமாளிக்கத் தடுமாறிய பின், தரையில் விழுந்து மோதித் தீப்பற்றிக்கொண்டு 152 பேர் இறந்துபோனார்களாம். அதில் பயணம் செய்த இரு பயணிகளின் ஆறு செகண்டு மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக, அவர்களின் பிள்ளைகளுக்குத் தலா இரண்டு லட்சம் டாலர் நஷ்ட ஈடு கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாம்.இதைத் தொடர்ந்து கட்டுரையாளர், சாவின் கடைசி தினங்களை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றிச் சிந்திக்கிறார். முன்பெல்லாம் சாவின் நிழலில், மனிதன் மன்னிக்கும் மனநிலையிலோ அல்லது மன்னிப்புக் கேட்கும் நிலையிலோ இருப்பான். சினிமா கடைசி காட்சியில், வில்லன் சாகும் தறுவாயில், ‘செண்பகம், என்னை மன்னிச்சிடு!’ என்றோ, ‘தங்கப்பனைக் கொன்னது நான்தான்’ என்றோ சொல்வது ஒரு கிளிஷே காட்சி என்றாலும், பொதுவாகப் பலருக்கு அந்தக் கணத்தில் ‘படைத்தவனைச் சந்திக்கப்போகிறோம்’ என்ற பயம் வருவதாலோ என்னவோ, பாவ மன்னிப்பும் குற்ற ஒப்புதலும் கேட்கும் மனநிலை ஏற்படுவது சகஜம் என்கிறார் பாலா ஸ்டீட். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ‘சாப்பிட்டுவிட்டு மத்தியானத் தூக்கத்தில் இருக்கும் உன் தகப்பனை ஏன்டா கொன்றாய்?’ என்று தன் நண்பனுடன் கோபித்துக்கொள்ளும்போது, ‘சாவு நெருங்குவதை மனிதன் உணரவேண்டும்’ என்பதே கருத்து.-சுஜாதா
Thursday 19 September 2024
கதை
ஓர் ஊரில் ஒரு வண்டு இருந்தது. அரண்மனைத் தோட்டத்தில் சும்மா பறந்துகொண்டிருந்த அதற்கு ஒரு நாள் ஒரு ஆசை ஏற்பட்டது. நம்மை யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறார்களே, இப்படி அனாமதேயமாக வாழ்க்கை வாழ்கிறோமே என்று எண்ணி, ஏதாவது செய்ய திட்டமிட்டது.
ஒருநாள் ராஜகுமாரன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனைக் கொட்டியது. அவன் அலறினான். ராஜாவும் ராணியும் ஓடி வந்தார்கள். அவர்களையும் ஒரு கொட்டு கொட்டிவிட்டு பறந்தது. 'ஐயோ' என்று அலறினார் ராஜா. உடனே சேவகர்கள் ஓடிவந்தார்கள். அவர்களையும் கொட்டியது. அவர்களுடைய அலறல்களைக் கேட்டு மந்திரிகள் ஓடிவந்தார்கள். அவர்களையும் கொட்டியது.
தளபதிகள் வந்தார்கள். அவர்களுக்கும் அதேகதிதான். ராஜா, வலி தாங்காமல் குதிக்க, குதிக்க.. அவரை தோளில், மார்பில், மூக்கில், காதில், காலில், கையில் என்று கொட்டிக்கொண்டேயிருந்தது. ராணியும் ராஜாவும் அலற... வண்டைப் பிடிக்க முயன்ற ஒவ்வொருவரும் அதனிடம் கொட்டுப்பட்டார்கள்.
அரண்மனை மொத்தமும் அல்லோலகல்லோலப்பட்டது. ஊரெங்கும் செய்தி பரவ கூட்டம் கூட்டமாக மக்கள் அரண்மனைக்கு ஓடிவந்தார்கள். ஊரே ஸ்தம்பித்தது. நிர்வாக வேலைகள் நின்றன. குழப்பம் கூத்தாடியது.
கடைசியில் ஒருவழியாய் அந்த வண்டைப் பிடித்து, அடித்துக் கொன்றார்கள். சாகுமுன் அது தனக்குத்தானே சொல்லி க்கொண்டது. பிறவி என்றால் இப்படி ஏதேனும் செய்துவிட்டு சாகவேண்டும். எல்லோரும் என்னைப் பற்றி பேசும்படி பண்ணிவிட்டேன் உயிர் போனால் போகட்டும்.
Wednesday 18 September 2024
மக்களிடம் செல்லுங்கள் அவர்களுடன் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.அவர்களை நேசியுங்கள். அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து துவங்குங்கள். அவர்களிடம் இருப்பவற்றைக் கொண்டு உருவாக்குங்கள். அவர்களது காரியம் நிறைவேற்றப்பட்டப் பிறகு, அவர்கள் வேலை முடிந்த பிறகு, தங்கள் சிறந்த தலைவர்களைப் பற்றி, அவர்கள் இப்படிக் குறிப்பிடுவார்கள்: "நாங்களாகவே எல்லாவற்றையும் செய்து முடித்தோம்."-லாவோட்சூ(அண்ணா அவர்கள் தன் மேசையில் வைத்துக் கொண்ட முதல்6 வரிகள்.இன்றுதான் முழு கவிதையும் படித்தேன்)
Tuesday 17 September 2024
1975ல் தன் 20வது வயதில் மைக்ரோசாப்ட் கம்பனியை துவக்கினார் பில்கேட்ஸ்.அதன்பின் தன் 20களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. தன் 31வது வயதில் 1986ம் ஆண்டு தான் முதல் விடுமுறை எடுக்கிறார்.ஸ்டீவ் ஜாப்ஸும் அதைதான் சொல்கிறார். "சுடுகாட்டுக்கு போனபின் பில்லியனர் ஆகி என்ன பயன்?" என. இளம்வயதில் சாதித்தால் தான் அதை நீண்டநாள் அனுபவிக்க முடியும்.20களில் வாழ்க்கையை அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது? 60 வயதிலா?இல்லை என்கிறார் பில்..20களில் தேவை ஒர்க்- லைப் பேலன்ஸ் மட்டும் தானே ஒழிய ஜாலி அல்ல. 20களில் எதையும் மிஸ் செய்யும் அவசியம் இல்லை.ஒர்க்-லைப் பேலன்ஸ் அதை அளிக்கும்..ஆனால் 20களில் நம் கெரியரில் நாம் முன்னேற்றம் அடையாத, முன்னேற்றம் அடைய முயற்சிகளை எடுக்காத ஒவ்வொரு நாளும் வீண்நாளே. அந்த நாட்களில் நாம் ஆபிஸில் நாள் முழுக்க உட்கார்ந்திருந்து பைல்களை உருட்டிகொண்டிருந்தாலும் சரி..அது விடுமுறை நாள் தான்.20களில் பழகும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களே ஆயுள் முழுக்க நம்மை தொடர்ந்து வரும்.-மினிமலிசம்
Monday 16 September 2024
history
அமெரிக்காவில் உள்ள தபால் நிலையங்கள் அஞ்சல் மூலம் பெரிய பார்சல்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய ஆரம்பத்தில் தபால் மூலம் எதை அனுப்பலாம், எதை அனுப்ப முடியாது என்பதற்கான விதிமுறைகள் எல்லாம் அப்போது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே மக்களும் எப்போதும் போல இந்தச் சலுகையை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள்.
ஓஹியோவில் வாசித்த ஒரு தம்பதியினர் அவர்களின் 10 வயது மகனை 15 சென்ட் முத்திரைக் கட்டணம் செலுத்தி, ஒரு மைல் தொலைவில் உள்ள பாட்டியின் வீட்டில் டெலிவரி செய்யும் படி சிறுவனை தபால்காரரிடம் ஒப்படைத்தனர். அவரும் அவனின் இம்சைகளை பொறுத்துக் கொண்டே பாட்டியின் வீட்டில் கொண்டு போய் இறக்கிவிட்டார். இன்னொரு தம்பதியினர் தம் 8 மாத குழந்தையை தாத்தா வீட்டுக்கு பார்சலில் அனுப்பினார்கள்.
குறிப்பாக 1910 - 1920 ஆம் ஆண்டுகளில், ஏராளமானோர் பார்சல் தபால் மூலம் குழந்தைகளை அஞ்சல் அனுப்பினர்.
ஆடைகளில் பேட்ஜ்ஜு போல ஒட்டப்பட்ட முத்திரைகளுடன், குழந்தைகள் அவர்கள் தாத்தா பாட்டி வீடுகளுக்கு நீண்டதூரம் கூட ரயில்களில் பயணம் செய்தனர்.
பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை நாடு முழுவதும் உள்ள உறவினர் வீடுகளுக்கு “அஞ்சல்” அனுப்ப போஸ்டல் சர்வீசை பயன்படுத்த தொடங்கினார்கள். ரயில் டிக்கெட்டை வாங்குவதை விட, ரயில்வே மெயில் மூலம் குழந்தையை அனுப்ப முத்திரைக் கட்டணம் மிக மலிவாக இருந்தது. விடுமுறை விட்டாலே போதும், பிள்ளைகளை பேக் செய்து, போஸ்ட்டில் போட ரெடியாகி விடுவார்கள். இதனால் பாடசாலை விடுமுறைகளில் அமெரிக்காவில் பெண்கள் கர்ப்பமாகும் சதவிகிதமும் அதிகரித்தது.
இப்படியே போனால் நிலைமை விபரீதமாகி விடும் என்று விழித்துக்கொண்ட அமெரிக்கா, சிறுவர்களை தபாலில் அனுப்புவது சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி, விண்ணப்பங்களை நிராகரிக்கத் தொடங்கியது.
நல்ல வேளை இன்று இப்படி ஒரு சிஸ்டம் இல்லை. இல்லையென்றால் குழந்தைகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்த்து அப்பாக்களும் தபால் பைக்குள் அமுக்கப்பட்டிருப்பார்கள்.
#HistoryறிVisited
Sunday 15 September 2024
நிலவு தன்னை தானே சுழல பூமியின் நாட்கணக்கில் 29.5 நாட்கள் எடுப்பதால் நிலவில் இரவு 14 நாட்கள், பகல் 14 நாட்கள்பகலில் கொடூர வெப்பம் என்றால் இரவில் கொடூரமான குளிர். நிலவில் இரவு நேரம் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை குளிர் போகும். பகலில் 117 டிகிரி செல்சியஸ் வெப்பம். இது கிட்டத்தட்ட ஒரு ஓவனின் வெப்பநிலைக்கு சமம். நிலவின் பாறை மேல் ஒரு ஸ்டேக் துண்டை வைத்தால், அதன் வெப்பத்திலேயே சில மணிநேரத்தில் ஸ்டேக் தயாராகிவிடும்நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரினின் உடைகள் வெப்பத்தை தாங்கும் பொருட்டு தயாரிக்கபட்டன. உடைகளில் நிறைய டியூப்புகள் ஓடின. அதில் ஏசி மாதிரி தண்ணீர் ஓடி அவர்களை குளிர்வித்தது. பேட்டரி ஒன்று தொடர்ந்து தண்ணீரை பைப்புகளில் இயக்கியதுஅடுத்ததாக ஆண்களை அனுப்புவதா, பெண்களை அனுப்புவதா? ஏழு ஆண்களுக்கும், 13 பெண்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. மெர்க்குரி 13 என்ற டீம் பெயரில் 13 பெண்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு விண்வெளி உடைகளை தைப்பதில் சிக்கல்கள் தோன்றின. நிலவில் யூரின் போக பேண்டை கழட்ட முடியாது. ஆண்களுக்கு யூரின் கலெக்டர் குழாய் மூலம் யூரினை சேகரிக்க முடியும். பெண்களுக்கு என்ன செய்வது?விண்வெளியில் மாதவிலக்கை எப்படி கையாள்வது என்பதிலும் குழப்பங்கள் இருந்தன. பேட் எல்லாம் எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். எடை கூடும் சில விஞ்ஞானிகள் "புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் மாதவிலக்கு ரத்தம் மீண்டும் திரும்ப உள்ளேயே போய்விடும். உயிருக்கு ஆபத்து" என்றார்கள். அது தவறான அறிவியல் என்பது பின்னாளில் தெரிந்தது.இன்றும் விண்வெளியில் மாதவிலக்கு பிரச்சனைக்கு சரியாக தீர்வுகள் இல்லை. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வர அமெரிக்கர்களுக்கு 1983 ஆண்டு ஆனது. அன்றுதான் முதல் முதலாக ஒரு அமெரிக்க பெண் விண்வெளிக்கு சென்றார். அவர் மாதவிலக்கு வராமல் தடுக்க மருந்துகள் எடுத்துக்கொண்டார்.இன்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆஸ்ட்ரநாட்டுகளின் யூரின், வியர்வை எல்லாம் சேகரிக்கட்டு, சுத்திகரிக்கபட்டு மறுசுழ்ற்சி செய்யபடுகிறது. அதையே தான் அவர்கள் குடித்தாக வேண்டும். அங்கே செல்லும் பெண் அஸ்ட்ரநட்டுகள் எல்லாம் மாதவிலக்கை தடுக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். டேம்பான் பயன்படுத்துவதில்லைஅதற்கு முன் ஒரு சோவியத் பெண் வாலண்டினா டெரெஷ்கோவா 1963ல் விண்வெளிக்கு சென்றிருந்தார். அவருக்கும் சரியாக உடைகள் இல்லை. ஆனால் விண்வெளிக்கு ஒரு பெண்ணை அனுப்பியே ஆகவேண்டும் என சொல்லி சோவியத் யூனியன் முடிவெடுத்து அனுப்பியது. அமெரிக்கர்க்ளுக்கு பெண்களுக்கான உடைகளை வடிவமைப்பது பெரிய பிரச்சனை இல்லை. சற்று காலதாமதம் ஆகும், அவ்வளவுதான். ஆனால் ரொம்ப குழப்பிக்கொள்ள வேண்டாம் என சொல்லி முழுக்க, முழுக்க ஆண்களையே அனுப்பிவிடலாம் என முடிவெடுத்தார்கள். நிலவில் இதுவரை இறங்கிய 12 பேரும் அதனால் ஆண்கள் தான்தொழில்நுட்ப சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து, இரண்டாவது பெண்ணை விண்வெளிக்கு அனுப்ப மேலும் 20 ஆண்டுகள் ஆனது. இரண்டாவது ரஷ்ய பெண் 1982ம் ஆன்டு விண்வெளிக்கு பறந்தார். அடுத்த ஆண்டு ஒரு அமெரிக்க பெண் முதல் முதலாக விண்வெளிக்கு சென்றார். இப்போது நிலவுக்கு பெண்கள் செல்ல சிக்கல் எதுவும் இல்லை. #பூமியும்_வானமும்~ நியாண்டர் செல்வன்
Saturday 14 September 2024
உண்மையைப் புதிர்களின் வழியாகத்தான் முன்வைக்க வேண்டும். ஏனென்றால் உண்மையானது ஒரு காளையைப் போல மக்களைத் தாக்குகிறது. ஆதலால் அவர்களால் நேரடியாக உண்மையை எதிர் கொள்ள முடியாது. காளை எப்போதும் எதிர்த்துக் கொல்லப்படும். நீங்கள் ஒரு புதிரில் மறைத்து வைத்து உண்மையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்கள் அதைத் தேடிச் சென்று துண்டு துண்டாகக் கண்டுபிடிப்பார்கள்; அதன் மூலம் அவர்கள் அதனுடன் இயைந்து வாழக் கற்றுக்கொள்ளுவார்கள்.சைம் போட்டக்
Thursday 12 September 2024
Tuesday 10 September 2024
Monday 9 September 2024
ஹென்றி மில்லர்
க. மோகனரங்கன் அற்புத பதிவு
எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது.
ஒருவன் அந்த கணத்தில் எதன் மீது உன்னிப்பாக கவனம் செலுத்துகிறானோ, அது ஒரு புல்லின் இதழாகக் கூட இருக்கலாம், அது ஒரு மர்மமான, அற்புதமான, விவரிக்க முடியாத பிரகாசமுடைய உலகமாக மாறிவிடும் . நான் இந்தப் பரிசோதனையை ஆயிரம் முறை முயற்சி செய்திருக்கிறேன், ஒருபோதும் நான் ஏமாற்றமடைந்ததில்லை.
நான் ஒரு விஷயத்தை எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அதில் காண்கிறேன், மேலும் நான் அதை அதிகமாகப் பார்க்கும்தோறும், நான் அதிகமாகக் காண்பதற்கு விரும்புகிறேன். இது ஒரு வெங்காயத்தை தோல் உரிப்பது போன்றது. எப்போதும் மற்றொரு அடுக்கு உள்ளது, அடுத்து மற்றொன்று,பிறகு மற்றொன்று. மேலும் ஒவ்வொரு அடுக்கும் கடந்த ஒன்றை விடவும் அழகாக இருக்கிறது. இந்த உலகத்தை நான் பார்க்கும் விதம் இதுதான். நான் இதை பொருட்களின் தொகுப்பாக பார்க்கவில்லை, ஆனால் விரிந்து பரந்தவொரு மர்மமான
உயிரினமாக காண்கிறேன். நான் சிறிய விஷயங்களில் அழகைப் பார்க்கிறேன், மிகவும் சாதாரண நிகழ்வுகளில் நான் ஆச்சரியப்படுகிறேன். எப்பொழுதும் நான் மறைவான அர்த்தத்தை, ரகசிய செய்தியை தேடுகிறேன். நான் எப்போதும் வாழ்க்கையின் மர்மத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
என்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளமுடியாது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது என்னை முயற்சி செய்வதினின்றும் தடுக்காது. அறியாதவற்றால் சூழப்பட்ட மர்மத்தினூடாக வாழ்வதில் நான் திருப்தியுறுகிறேன். தேடுபவனாக, யாத்ரீகனாக, எங்கும் இல்லாத பாதையில் பயணிப்பவனாக இருப்பதில் நிறைவடைகிறேன்.
~ ஹென்றி மில்லர்
Sunday 8 September 2024
motivation
ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் ஓடிக் கடக்க வரலாறு முழுவதும் பலர் முயன்றுள்ளனர். பண்டைய கிரேக்கர்கள் காலந்தொட்டு, மக்கள் அதை அடைய முயன்று கொண்டிருந்தார்கள். உண்மையில், சிங்கங்களைக் கொண்டு துரத்தினால் மக்கள் இன்னும் வேகமாக ஓடுவார்கள் என்று நினைத்து, கிரேக்கர்கள் ஓடுபவர்களுக்குப் பின்னால் சிங்களை ஓடவிட்டுத் துரத்தியதாக ஒரு தகவல் கூறப்படுகிறது.
அவர்கள் புலிப் பாலையும் குடித்துப் பார்த்தனர். அவர்கள் முயற்சித்த எதுவும் வேலை செய்யவில்லை. எனவே, ஒரு மனிதனால் நான்கு நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரம் ஓட முடியாது என்று அவர்கள் தீர்மானித்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் அதை நம்பினர்.நமது எலும்பு அமைப்பில் கோளாறு உள்ளது; காற்றின் எதிர்ப்பு மிகவும் அதிகம்; நம்மிடம் போதுமான நுரையீரல் சக்தியில்லை; இப்படி அதற்கு இலட்சக்கணக்கான காரணங்கள் காட்டப்பட்டன.
பிறகு ஒரே ஒரு மனிதர் ஓடி முயற்சித்துத் தோல்விகண்ட பல இலட்சம் வீரர்கள் அனைவரது கருத்தும் தவறு என்று நிரூபித்துக் காட்டினார்.
அதிசயத்திற்கு மேல் அதிசயமாக, ரோஜர் பேனிஸ்டர், அந்த நான்கு நிமிட மைல் ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டியதற்கு அடுத்த ஆண்டு, முப்பத்தேழு தடகள வீரர்கள் அந்த சாதனையை முறியடித்தனர். அதற்கு அடுத்த ஆண்டு முன்னூறு வீரர்கள் அதை முறியடித்தனர். ஒரு சில வருடங்களுக்குமுன், நியூ யார்க்கில் நடந்த ஓர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட பதிமூன்று வீரர்களும் அந்த நான்கு நிமிட மைல் சாதனையை முறியடித்தனர்.
முயற்சித்ததால் இந்த இலக்கை அடைய முடிந்தது.நம்ம ஊர் காது கேட்காத தவளைக் கதையும் உண்டு.
இனிய காலை
Friday 6 September 2024
Thursday 5 September 2024
சீன - ஜப்பானிய மொழியில் ஆசிரியரை சென்சே (Sen-Sei) எனக்குறிப்பிடுவார்கள். சென்சே என்றால், தமக்கு முன் பிறந்தவர் என்று அர்த்தம். இது வெறும் வயதை மட்டும் குறிப்பதில்லை. ஜென் மார்கத்தில், தனக்கு முன் ஞானமடைந்தவர், உலகை உணர்ந்தவர் என்று அர்த்தம்.சீடர்கள், ஏற்கனவே ஞானமடைந்தவரை அணுகி, தானும் ஞானம் பெற வேண்டும் என அவரிடமிருந்து கற்றுத் தேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. மாணவன் குருவைத் தேடி அடைவது டிமாண்ட் ட்ரைவன் ப்ராசஸ். இப்ப இருக்கும் நடைமுறைப் போல ஆசிரியரகள் நமக்கு பள்ளி/கல்லூரி அமைப்பின் மூலம் அறிமுகமாவது போல இல்லாமல், கற்பவர், தமக்கான ஆசிரியரை ஒரு தேனீயைப் போல தேடிக் கண்டடைய வேண்டும்.இந்த சென்'சே என்பதை ஜப்பானிய சித்திர எழுத்து வடிவத்தில் இரண்டு கேரக்டரை கொண்டு 先 生 இப்படி எழுதுவார்கள்.
Tuesday 3 September 2024
Monday 2 September 2024
Boomer uncle1955லிருந்து 1964 வரை பிறந்த வர்களை boomers என்று அழைப்ப துண்டு. இது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலம். போரில் பலர் இறந்துவிட்டதால் அதை ஈடு செய்வதுபோல அப்போது நிறைய குழந்தைகள் பிறந்தன. Boom வளர்ச்சி. என்றால் வேகமான'பெரிசு' என்பதைப் போன்றது தான் boomer. அதாவது இந்த தலைமுறையோடு ஒத்துப்போகாத வர்கள்.தோராயமாக சொல்வதென்றால் Gen Z என்பவர்கள் இப்போது 12-ல் இருந்து 27 வயது வரை இருப்ப வர்கள். Millenialsஎன்பவர்கள் 28-ல் இருந்து 43 வயது வரை கொண்ட வர்கள். Gen X என்பவர்கள் 44ல் இருந்து 59 வயது வரை ஆன வர்கள். Boomers அதற்கும்மேல்-ஜி.எஸ் எஸ்
Sunday 1 September 2024
“நேற்றைய நாள் நேற்றைய இரவோடு முடித்துவிட்டது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய பலகையை நான் பல ஆண்டுகளாக என்னுடைய மேசைமீது வைத்திருந்தேன். நிகழ்காலத்தின்மீது கவனம் செலுத்தவும் இன்று நான் செய்யக்கூடியவற்றை மேம்படுத்துவதை நோக்கிச் செயல்படவும் அது எனக்கு உதவியது. “நீங்கள் வளர விரும்பினால், உங்களுடைய நிகழ்காலமும் எதிர்காலமும் உங்களுடைய கடந்தகாலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வரலாறு உங்களுடைய தலையெழுத்து அல்ல,”- ஆலன் கோஹென்
Subscribe to:
Posts (Atom)