Sunday, 15 September 2024
நிலவு தன்னை தானே சுழல பூமியின் நாட்கணக்கில் 29.5 நாட்கள் எடுப்பதால் நிலவில் இரவு 14 நாட்கள், பகல் 14 நாட்கள்பகலில் கொடூர வெப்பம் என்றால் இரவில் கொடூரமான குளிர். நிலவில் இரவு நேரம் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை குளிர் போகும். பகலில் 117 டிகிரி செல்சியஸ் வெப்பம். இது கிட்டத்தட்ட ஒரு ஓவனின் வெப்பநிலைக்கு சமம். நிலவின் பாறை மேல் ஒரு ஸ்டேக் துண்டை வைத்தால், அதன் வெப்பத்திலேயே சில மணிநேரத்தில் ஸ்டேக் தயாராகிவிடும்நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரினின் உடைகள் வெப்பத்தை தாங்கும் பொருட்டு தயாரிக்கபட்டன. உடைகளில் நிறைய டியூப்புகள் ஓடின. அதில் ஏசி மாதிரி தண்ணீர் ஓடி அவர்களை குளிர்வித்தது. பேட்டரி ஒன்று தொடர்ந்து தண்ணீரை பைப்புகளில் இயக்கியதுஅடுத்ததாக ஆண்களை அனுப்புவதா, பெண்களை அனுப்புவதா? ஏழு ஆண்களுக்கும், 13 பெண்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. மெர்க்குரி 13 என்ற டீம் பெயரில் 13 பெண்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு விண்வெளி உடைகளை தைப்பதில் சிக்கல்கள் தோன்றின. நிலவில் யூரின் போக பேண்டை கழட்ட முடியாது. ஆண்களுக்கு யூரின் கலெக்டர் குழாய் மூலம் யூரினை சேகரிக்க முடியும். பெண்களுக்கு என்ன செய்வது?விண்வெளியில் மாதவிலக்கை எப்படி கையாள்வது என்பதிலும் குழப்பங்கள் இருந்தன. பேட் எல்லாம் எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். எடை கூடும் சில விஞ்ஞானிகள் "புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் மாதவிலக்கு ரத்தம் மீண்டும் திரும்ப உள்ளேயே போய்விடும். உயிருக்கு ஆபத்து" என்றார்கள். அது தவறான அறிவியல் என்பது பின்னாளில் தெரிந்தது.இன்றும் விண்வெளியில் மாதவிலக்கு பிரச்சனைக்கு சரியாக தீர்வுகள் இல்லை. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வர அமெரிக்கர்களுக்கு 1983 ஆண்டு ஆனது. அன்றுதான் முதல் முதலாக ஒரு அமெரிக்க பெண் விண்வெளிக்கு சென்றார். அவர் மாதவிலக்கு வராமல் தடுக்க மருந்துகள் எடுத்துக்கொண்டார்.இன்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆஸ்ட்ரநாட்டுகளின் யூரின், வியர்வை எல்லாம் சேகரிக்கட்டு, சுத்திகரிக்கபட்டு மறுசுழ்ற்சி செய்யபடுகிறது. அதையே தான் அவர்கள் குடித்தாக வேண்டும். அங்கே செல்லும் பெண் அஸ்ட்ரநட்டுகள் எல்லாம் மாதவிலக்கை தடுக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். டேம்பான் பயன்படுத்துவதில்லைஅதற்கு முன் ஒரு சோவியத் பெண் வாலண்டினா டெரெஷ்கோவா 1963ல் விண்வெளிக்கு சென்றிருந்தார். அவருக்கும் சரியாக உடைகள் இல்லை. ஆனால் விண்வெளிக்கு ஒரு பெண்ணை அனுப்பியே ஆகவேண்டும் என சொல்லி சோவியத் யூனியன் முடிவெடுத்து அனுப்பியது. அமெரிக்கர்க்ளுக்கு பெண்களுக்கான உடைகளை வடிவமைப்பது பெரிய பிரச்சனை இல்லை. சற்று காலதாமதம் ஆகும், அவ்வளவுதான். ஆனால் ரொம்ப குழப்பிக்கொள்ள வேண்டாம் என சொல்லி முழுக்க, முழுக்க ஆண்களையே அனுப்பிவிடலாம் என முடிவெடுத்தார்கள். நிலவில் இதுவரை இறங்கிய 12 பேரும் அதனால் ஆண்கள் தான்தொழில்நுட்ப சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து, இரண்டாவது பெண்ணை விண்வெளிக்கு அனுப்ப மேலும் 20 ஆண்டுகள் ஆனது. இரண்டாவது ரஷ்ய பெண் 1982ம் ஆன்டு விண்வெளிக்கு பறந்தார். அடுத்த ஆண்டு ஒரு அமெரிக்க பெண் முதல் முதலாக விண்வெளிக்கு சென்றார். இப்போது நிலவுக்கு பெண்கள் செல்ல சிக்கல் எதுவும் இல்லை. #பூமியும்_வானமும்~ நியாண்டர் செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment