Monday, 9 September 2024

ஹென்றி மில்லர்


க. மோகனரங்கன் அற்புத பதிவு
எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது.
ஒருவன் அந்த கணத்தில் எதன் மீது உன்னிப்பாக கவனம் செலுத்துகிறானோ, அது  ஒரு புல்லின் இதழாகக் கூட இருக்கலாம், அது ஒரு மர்மமான, அற்புதமான, விவரிக்க முடியாத பிரகாசமுடைய உலகமாக மாறிவிடும் . நான் இந்தப் பரிசோதனையை ஆயிரம் முறை முயற்சி செய்திருக்கிறேன்,  ஒருபோதும் நான் ஏமாற்றமடைந்ததில்லை.

        நான் ஒரு விஷயத்தை எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அதில் காண்கிறேன், மேலும் நான் அதை அதிகமாகப் பார்க்கும்தோறும், நான் அதிகமாகக் காண்பதற்கு விரும்புகிறேன். இது ஒரு வெங்காயத்தை தோல் உரிப்பது போன்றது. எப்போதும் மற்றொரு அடுக்கு உள்ளது, அடுத்து மற்றொன்று,பிறகு மற்றொன்று. மேலும் ஒவ்வொரு அடுக்கும் கடந்த ஒன்றை விடவும் அழகாக இருக்கிறது. இந்த உலகத்தை நான் பார்க்கும் விதம் இதுதான். நான் இதை பொருட்களின் தொகுப்பாக பார்க்கவில்லை, ஆனால் விரிந்து  பரந்தவொரு  மர்மமான 
உயிரினமாக காண்கிறேன். நான் சிறிய விஷயங்களில் அழகைப் பார்க்கிறேன், மிகவும் சாதாரண நிகழ்வுகளில் நான் ஆச்சரியப்படுகிறேன்.  எப்பொழுதும்  நான் மறைவான அர்த்தத்தை, ரகசிய செய்தியை தேடுகிறேன். நான் எப்போதும் வாழ்க்கையின் மர்மத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

                            என்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளமுடியாது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது என்னை முயற்சி செய்வதினின்றும் தடுக்காது. அறியாதவற்றால் சூழப்பட்ட மர்மத்தினூடாக வாழ்வதில் நான் திருப்தியுறுகிறேன். தேடுபவனாக, யாத்ரீகனாக, எங்கும் இல்லாத பாதையில் பயணிப்பவனாக இருப்பதில் நிறைவடைகிறேன். 

~ ஹென்றி மில்லர்

No comments:

Post a Comment