Friday, 27 September 2024

நியாண்டர்


*மெதனாஜின் முப்பாட்டன்*

பூமியில் ஆக்ஸிஜன் இல்லாத துவக்ககாலக்ட்டத்தில் (400 கோடி ஆண்டுகள்) முன்பு கார்பன் டை ஆக்ஸைடை மூச்சுவிட்டு, ஹைட்ரஜனை உணவாக உட்கொள்ளும் வகை அனேரொபிக் மெதனாஜின்கள் (Anaerobic methanogen) தோன்றின. இவற்றின் கழிவுகள் தான் மீதேன் வாயு. பயோகேஸில் இருக்கும் அதே வாயுதான்

ஆக ஹைட்ரஜனும், கார்பன் டைஆக்சைடும் இருக்கும் பகுதிகளில் இம்மாதிரி மெதனாஜின் உயிரிகள் பிழைக்க வாய்ப்புகள் உள்ளன

ஆனால் தட்பவெப்பம் சரியாக இருக்கவேண்டும். வீனஸில் 95% வளிமண்டலம் கார்பன்டைஆக்சைடுதான். ஆனால் வீனஸில் 465 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம். இந்த சூட்டில் எந்த உயிரினாமவது வாழ முடியுமா? வாய்ப்பே இல்லை

செவ்வாயிலும் 95% CO2 தான். ஆனால் வெப்பநிலை மிக குறைவு. ஆனால் செவ்வாயின் மேற்புறத்தில் சூரியனின் கதிர்கள் சும்மா வறுத்தெடுத்து ரோஸ்ட் ஆக்கிவிடும். அதற்கு காந்தபுலன் இல்லாததால் பூமி மாதிரி ரேடியேஷனில் இருந்து பாதுகாப்பு இல்லை.

செவ்வாயின் பூமிக்கு அடியில், சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு கொடுத்தால் மெத்னாஜின் உயிரினங்கள் செழித்து வளர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சொல்லபோனால் செவ்வாயின் சுரங்கங்களில், மலைக்குகைகளில் மெதனாஜின் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியகூற்றை விஞ்ஞானிகள் மறுக்கவில்லை. செவ்வாயில் எங்கே மீதேன் லீக் ஆகிறதோ, அங்கே மெதனாஜின் இருக்கலாம்

செவ்வாயில் கேல் கிரேட்டர் மாதிரியான சில இடங்களில் மீதேன் சுரப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. அங்கே இருப்பது என்ன? மெதனாஜின் உயிரினங்களின் பயாலஜி மூலம் உருவான மீதேனா இல்லை இயற்கையாக நிலவியல் (Geology) மூலம் உருவான மீதேனா?

விடையை என்றாவது ரோவர்கள் கண்டுபிடிக்கும்

-நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment