லப்பர் பந்து விமர்சனம்
*மணி
விளையாட்டை மையப்படுத்திய கதையில் அரசியல்,பேண்டசி, பெண்களும் விளையாடனும் என கமர்சியல் படங்கள் அதிகம் வந்துள்ளன.இப்படம் அதிலிருந்து சற்று விலகி குடும்ப பின்னணியுடன் சாதிய சமத்துவத்தை பேசும் படமாய் வந்துள்ளது.
#கதை
2011ல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விஜயகாந்த் ரசிகரான கெத்து தினேஷ் அந்த ஏரியாவின் மாஸ் பேட்ஸ் மேன்.லப்பர் பந்து மேட்ச்சில் இறங்கினாலே சிக்ஸர்தான். அந்த மேட்ச்சை பார்க்க வரும் பவுலரான பள்ளி மாணவன் ஹரீஸ் கல்யாண் ஜாலி ப்ரண்ட்ஸ் டீமில் சேர்ந்து தானும் விளையாட ஆசைப்படுகிறார். ஆனால் ஜாதி காரணத்தால் அவமானப்படுகிறார்.
சிறு இடைவேளைக்கு பின் அனைத்து டீமீலும் கெஸ்ட் ப்ளேயர் போல ஹரீஸ் கல்யாண் விளையாடிக்கொண்டு தன் தொழிலையும் கவனித்து வருகிறார்.
கெத்து தினேஷ் வயதான பின்னும் தன் அதிரடியால் பேட்டிங்கில் சாதனை படைக்கிறார். ஆனால் அவரின் பலவீனங்களை விமர்சிப்பதால் ஹரீஸ் கல்யாண்க்கும் தினேஷ்க்கும் ஈகோ மோதல்.
தான் காதலிக்கும் பெண்ணின் தந்தைதான் தினேஷ் என தெரியவரும் ஹரீஷ்க்கு க்ளீன் போல்டான சோகம்.தன் மகளின் காதலன் ஹரீஸ் என தெரியவரும் தினேஷ்க்கு டக் அவுட்டான ஃபீல்
இவர்களின் ஈகோ யுத்தம் என்ன ஆனது, கிரிக்கெட் விளையாட்டை வெறுக்கும் மனைவி மருமகன் கிரிக்கெட் ப்ளேயர் என தெரிந்ததும்
அவர்களின் காதல் கைகூடியதா, குடும்ப சம்மதத்திற்கு காத்திருக்கும் நாயகியின் நிலை இந்த கதைதான் டி20 போல் இறுதி வரை பரபரப்பாய் ஆடியிருக்கிறது
#ப்ளஸ்
*தினேஷ் மற்றும் கல்யாண் இருவரின் நடிப்பும், ஆக்ரோசமும் யதார்த்தமாய் வெளிப்பட்டுள்ளது.
*விளையாட்டுடன் குடும்பம் காதல், ஈகோ என தொய்வின்றி பயணிக்கும் திரைக்கதை ப்ளஸ்
*சாதித் திமிரா ஆம்பள திமிரா? எனக்கும் எஸ் சி நண்பன் இருக்கான்னு சொல்லும் நீங்க இன்னும் வெசக்கூட்டம், அவன் உங்க தம்பி நாங்க உங்களுக்கு தம்பி மாதிரி என சொல்லும் வசனங்கள் நச்
*காளி வெங்கட்டும் அவரின் மகளும் மேட்ச் ஆடும் இடம்
*திறமைதான் முக்கியம் என்பதை படத்தின் ஆரம்பக்காட்சியில் பேருந்தில் பாடல் ஒலிக்கும் போது ராஜா ராஜாதான்னு சொல்லுவார். பசங்க இது தேவான்னு சொல்லும் இடம் நாயகன் மற்றும் அன்புக்கு குறியீடாக உள்ளது
*தினேசின் மனைவியாய் வரும் சுவாசிகா தன் வாழ்க்கையை போல மகளுக்கும் அமைந்துவிடக் கூடாது என மெனக்கெடுவதும், குடும்பத்தின் மீதான பாசமும் நன்று.
*வெட்டவெளி மைதானத்தின் அழகும் நுட்பத்தையும் ஒளிப்பதிவாளரும், மாண்டேஜ் பாடல்களில் இசையும்,
பொட்டு வச்ச தங்கக்குடம் பாட்டும் விஜயகாந்த் ரெஃரன்சும் ப்ளஸ்
*க்ளைமேக்சில் வரும் சாதிய சமத்துவ மெசேஜ். திறமைக்கு வாய்ப்பு கொடுக்க வைத்திருக்கிறது ஒரு வெற்றி
#மைனஸ்
*லப்பர் பந்து ஆடுபவர் கார்க் பந்தில் முதல் ஆட்டத்தில் தடுமாறும் நாயகன், எந்த வித பயிற்சியும் இல்லாமல் அடுத்த ஆட்டத்தில் 96 ரன் அடிப்பாரா?
*ஈகோ மோதலுக்கு இன்னும் வலுவான காரணம் வைத்திருக்கலாம்.
குறைகளை விட நிறைகள் அதிகம் இருப்பதால் லப்பர் பந்து சிக்ஸ் பறக்கிறது
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment