‘சக்ஸஸ்’ என்பதற்குப் பெருவிரலை உயர்த்திக் காண்பிக்கிறோமே, ஏன்?
கட்டை விரல் வாளின் குறியீடு! போரில் வெற்றி பெற்ற வீரர்கள் தலைக்கு மேலே வாளை உயர்த்திக் காட்டுகிறார்கள் இல்லையா, அதே அர்த்தம்தான்! பண்டைய ரோம் நாட்டில், ஸ்டேடியத்தில் இரு வீரர்கள் மோதுவார்கள். ஒருவர் தோற்று வீழ்ந்தவுடன், மக்கள் ‘கொல்லு, கொல்லு’ என்று ஆர்ப்பரிக்க, மன்னர் தன் கட்டை விரலைத் திருப்பிக் கீழே காட்டுவார். ‘அவனைக் கொன்று விடு!’ என்று அர்த்தம்.
‘அவனை உயிரோடு விட்டு விடு!’ என்பதற்கு, மன்னர் கட்டை விரலை மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொண்டு, முஷ்டியை உயர்த்திக் காட்டுவார். இப்போதும், இத்தாலியில் மட்டும் ‘சக்ஸஸ்’ என்பதற்கு அப்படித்தான் காட்டுகிறார்கள். ‘தம்ஸ் அப்’ பழக்கம், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பாடு அதை அமெரிக்கர்கள் பிரபலப்படுத்தினார்கள். நாமும் அதைக் காப்பி அடிக்கிறோம்!
-மதன்
No comments:
Post a Comment