அமெரிக்காவில் உள்ள தபால் நிலையங்கள் அஞ்சல் மூலம் பெரிய பார்சல்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய ஆரம்பத்தில் தபால் மூலம் எதை அனுப்பலாம், எதை அனுப்ப முடியாது என்பதற்கான விதிமுறைகள் எல்லாம் அப்போது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே மக்களும் எப்போதும் போல இந்தச் சலுகையை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள்.
ஓஹியோவில் வாசித்த ஒரு தம்பதியினர் அவர்களின் 10 வயது மகனை 15 சென்ட் முத்திரைக் கட்டணம் செலுத்தி, ஒரு மைல் தொலைவில் உள்ள பாட்டியின் வீட்டில் டெலிவரி செய்யும் படி சிறுவனை தபால்காரரிடம் ஒப்படைத்தனர். அவரும் அவனின் இம்சைகளை பொறுத்துக் கொண்டே பாட்டியின் வீட்டில் கொண்டு போய் இறக்கிவிட்டார். இன்னொரு தம்பதியினர் தம் 8 மாத குழந்தையை தாத்தா வீட்டுக்கு பார்சலில் அனுப்பினார்கள்.
குறிப்பாக 1910 - 1920 ஆம் ஆண்டுகளில், ஏராளமானோர் பார்சல் தபால் மூலம் குழந்தைகளை அஞ்சல் அனுப்பினர்.
ஆடைகளில் பேட்ஜ்ஜு போல ஒட்டப்பட்ட முத்திரைகளுடன், குழந்தைகள் அவர்கள் தாத்தா பாட்டி வீடுகளுக்கு நீண்டதூரம் கூட ரயில்களில் பயணம் செய்தனர்.
பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை நாடு முழுவதும் உள்ள உறவினர் வீடுகளுக்கு “அஞ்சல்” அனுப்ப போஸ்டல் சர்வீசை பயன்படுத்த தொடங்கினார்கள். ரயில் டிக்கெட்டை வாங்குவதை விட, ரயில்வே மெயில் மூலம் குழந்தையை அனுப்ப முத்திரைக் கட்டணம் மிக மலிவாக இருந்தது. விடுமுறை விட்டாலே போதும், பிள்ளைகளை பேக் செய்து, போஸ்ட்டில் போட ரெடியாகி விடுவார்கள். இதனால் பாடசாலை விடுமுறைகளில் அமெரிக்காவில் பெண்கள் கர்ப்பமாகும் சதவிகிதமும் அதிகரித்தது.
இப்படியே போனால் நிலைமை விபரீதமாகி விடும் என்று விழித்துக்கொண்ட அமெரிக்கா, சிறுவர்களை தபாலில் அனுப்புவது சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி, விண்ணப்பங்களை நிராகரிக்கத் தொடங்கியது.
நல்ல வேளை இன்று இப்படி ஒரு சிஸ்டம் இல்லை. இல்லையென்றால் குழந்தைகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்த்து அப்பாக்களும் தபால் பைக்குள் அமுக்கப்பட்டிருப்பார்கள்.
#HistoryறிVisited
No comments:
Post a Comment