Monday, 5 June 2017

படித்தது

*பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா*

*தலைவர் கலைஞர் கருணாநிதி*
முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அது தேர்தல் சமயம். 
*திமுக* ஒரு அணியிலும்,
*காங்கிரஸ்* மற்றும் *அதிமுக* எதிரணியிலும் இருந்தன.
அரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர்.
இலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த தலைவர் கலைஞர் கருணாநிதி,
உரையை முடிக்கும் முன்பாக,
“தேர்தல் வரவிருக்கிறது. 
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
உணவருந்தி முடிந்ததும் அனைவரும்
🌱 *இலையை*  தூர போட்டு விட்டு
🤚 *கையை* கழுவி விடுங்கள்’ ” என்றார்.

*அரங்கமே அதிர்ந்தது*
*அதுதான் தலைவர் கலைஞர் கருணாநிதி

#தமிழன்பன்
💥பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது :

💥பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது :

💥பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .

                       - ஈரோடு தமிழன்பன்

#அரசனின் அறிவிப்பை அரைகுறையாகக் கேட்டவர்களே அதிகம். அந்த ஒரே அறிவிப்பால் அரசனின் புகழ் எல்லையில்லாது பரவத் தொடங்கியது.
தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அது திரும்பத் திரும்ப மறு அறிவிப்பு செய்யப்பட்டது. தனது மந்திரியை அருகழைத்து தான் செய்வது எல்லாம் சாகசம் தானா என கேட்டறிந்தான் அரசன்.
அந்த அறிவிப்பு இதுதான்:
''இந்த தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம் தங்க மோதிரம் இலவசம்" என்பதுதான் அது.

அரசனின் அறிவிப்பில் ஒரு பாதியை அறிந்தவர்கள் மறுபாதியை அறியுமுன் தங்க மோதிரம் வாங்க புறப்பட்டுச் சென்றார்கள்.

மோதிரவிரலை வெட்டிக் கொடுத்தால் தான் தங்கமோதிரம் கிடைக்கும் என்பதை அவர்களில் யாருமே அறியவில்லை.

- ஹெச்.ஜி.ரசூல்
போர்ஹேயின் வேதாளம்
நுண்கதைகள்

(திருமாவேலன் பதிலிருந்து)

No comments:

Post a Comment