Monday, 5 June 2017

@manipmp

@manipmp

கவிக்கோவிற்கு ஆழ்ந்த இரங்கல்

நீ உன்னை விற்றால் விபச்சாரம்,
நாங்கள் எங்களை விற்றால் திருமணம்
-அப்துல்ரகுமான்

தூக்கத்தை கொன்றுவிட்டு தூக்கமாத்திரை தயாரித்து தரும் அறிவியலை என்ன செய்வது?
#அப்துல்ரகுமான்

என்னால் வாழவும் முடியவில்லை
ஏனென்றால் உணவில் கலப்படம்.
என்னால் சாகவும் முடியவில்லை
நானருந்திய நஞ்சில் கலப்படம்
-அப்துல்ரகுமான்

குழந்தைகள் தினத்தை மட்டும் கொண்டாடுகிறோம்,
குழந்தைகளை கொண்டாடுவது
எப்போது...
-அப்துல்ரகுமான்

பகல் அறிவின் நேரம்.,
இரவு உணர்ச்சியின் நேரம்
-அப்துல்ரகுமான்

மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!

ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
-அப்துல்ரகுமான்

காகித ஓடங்களை(பாடபுத்தகங்கள்) நம்பி இருப்பவர்கள் ஒரு நாளும் அக்கரை போய் சேரமாட்டார்கள்
#அப்துல்ரகுமான்

பொம்மை செய்யச் சொல்லி கருப்பையை
நச்சரிக்காதீர்கள்
-அப்துல்ரகுமான்

உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்

நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?
#அப்துல்ரகுமான்

வாழ்க்கை சந்தையில் மட்டும் முட்களை வாங்கினால் கொசுறாக கிடைக்கிறது "பூ"
#அப்துல்ரகுமான்

No comments:

Post a Comment