Monday, 5 June 2017

தனியே..தன்னந்தனியே-மணிகண்டபிரபு

தனியே தன்னந்தனியே...
*மணி*

மனைவி இல்லாமல் மனைவியின் உறவினர் விஷேசங்களுக்கு தனியாய் சென்றால் மடியில் மாட்டுக்கறி வைத்திருப்பவனை போல் பார்ப்பாங்க

தெரிந்த முகம் ஒன்று கூட இருக்காது.
தெரியாத முகம் அதிகம் இருக்கும். பப்ளிக் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் மாதிரி..நாம தான் பரிட்சை முடியும்வரை பம்ப் அடிக்கனும்.

எல்லோரிடமும் முகத்தை சிரிச்சா மாதிரி வைத்திருக்கும் நம் முகத்தை செல்ஃபி எடுத்துப்பார்த்தால், வார்டு கவுன்சிலருக்கு ஓட்டுக்கேட்கும் அத்தனை இலட்சணமும் அறியலாம்.

தனியா ஒரு chair கிடைச்சா உட்கார்ந்திரனும்.. ஆந்தையாய் தலை திருப்பும் முன்னாடி சீட்டுக்காரர் உத்து உத்துப் பார்ப்பார்.காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரி.நாம விஜய்னு நினைக்காமல் சார்லி நினைச்சு ஹாலோ சொல்லனும்.

சிலர் வாலன்டியரா வந்து ஹால்லோ மிஸ்டர் வைத்தியநாதன்னு சொல்லி டெம்போ கூட்டுவாங்க, நாமதான் போர்வரட்டும்னு பொறுமையா இருக்கனும்.

நாம எங்க எப்பிடீ இருக்கவேண்டியவங்க., தனியா ரூமில் படுத்து சிவனேனு டிவி பார்ப்பவனை, இப்படி கோர்த்துவிட்ட மனைவியை நினைத்தால் வரும் பாருங்க அதான் அறச்சீற்றம்.

தனியா புலம்பி தவிக்கும்போது நம்மை பார்த்து தலை ஆட்டுவார் தவில்காரர். என் இனமடா நீ

கூட்டத்தில் குல்பி,ஜிகர்தண்டா விற்பவன் போல, கோட் சூட் போட்டுக்கிட்டு மாப்பிள்ளை மச்சான்னு ஒருத்தன் இருப்பான். தெற்கையும் வடக்கையும் அலையும்போது நம்மையே பார்ப்பான்.அதெல்லாம் சர்ஜிகல் அட்டாக்குக்கும் மேல..

நமக்கு தெரிந்த ஒரு மனிதரைப் பார்க்கும்போது தான்,ஜியோ சிம் ஆக்டிவேட் ஆன சந்தோசம்.ஆனா அந்த மனுசனும் ஆயிரம் கமிட்மென்ட்டோட சீக்கிரம் எஸ்கேப் ஆயிடுவாரு..
மறுபடியும் பவரிங் ஆகும் வீடியோ போல் சீக்கிரம் சிவரிங் ஆயிடும்

கடிகாரம் கல்லாய் இருக்கும்.நொடிமுள் முள்ளாய் குத்தும்.காத்திருந்து பார்.
பேச்சுத் துணைக்கு ஆளிருக்காது,
செல்போன் துணைக்கு சார்ஜ் இருக்காது காத்திருந்து பார் னு
வைரமுத்துவின் அசரீரி கேட்கும்

ஒரு வழியா பந்தி ரெடியானதும்
நீட் எக்சாமுக்கு போகிற தமிழ்நாட்டு மாணவர்கள் மாதிரி ஒதுங்கிபோய் ஓரமாய் உட்கார்ந்தாலும்,சார் நாங்க ஃபேமிலியாய் வந்திருக்கோம்.. சீட் மாறி உட்காரச் சொல்லுவாங்க..

நமக்கு அலாட் பன்ன சீட்டில் சென்று அமர்ந்தால் அந்த லைனுக்கு முதல் ரவுண்ட் முடிந்து க்ளைமேக்ஸ் நெருங்கிக்கொண்டிருக்கும். நாம் அப்பதான் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் ஸ்லைடு ஷோவில் இருந்து துவங்குவோம்.

எல்லாரும் சாப்பிட்டு இலை மூடும்போது நாம் கொஞ்சம் சாப்பிட்டிருப்போம்.ஒவ்வொரு பந்திக்கு பின்னாலும் பசியோடு காத்திருக்கும் ஒருவர் நின்றுகொண்டு இருப்பார்.

இலை எடுக்கும் பெண்மணி என்னைப்பார் எரிச்சல் வரும் னு மொடில் இருப்பார்.

ஒருவழியா மொய் கவர் கொடுத்து கிளம்பும்போது, வாக்கிங் போகாமல் இருந்தால் வருமே ஒரு சந்தோசம் அதுமாதிரி இருந்தது.

சுஜாதா சொல்லுவார், "நம்மை யாரென்று தெரியாத இடத்துக்கு செல்லும்போது கற்றுக்கொள்ள நிறைய இருக்கும்" புதிதாய் கிடைக்கும் நட்புக்கள் போல சுவாரஸ்யமானது

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment