இறைவிக்கு மரியாதை
*மணி*
மனைவி,தாய்,பாட்டி,அக்கா,அம்மாயி என அத்தனை பேரும் ஆண்களின் முதுகெலும்பு மூளை முகுலம் எல்லாம்..அவர்களுக்கு மரியாதை செய்வது கடமை.எப்படி
* ஆப் ஓயிட் பேன்ட்டை அதிகம் அழுக்கு பன்னாமல் இருத்தல்
*ஸ்கூட்டிக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தல்
*ஏடிஎம் கார்டை ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்களுக்கே திருப்பிக்கொடுத்தல்
*பழைய சோறு இருந்தா நங்கு பார்க்காம எடுத்து சாப்பிடுதல்
*பெட்சீட் ஊறவைத்தால் வீதி துவைக்கிற கல்லுல வில்லன் பொன்னம்பலத்தை அடிக்கிற மாதிரி துவைத்து பிழிந்து காயப்போடுதல்
*விசேசத்துக்கு கிளம்பும் போது பட்டுப்பொடவை பிளீட் பிடித்தல்
*பவுடர் குட்டு குட்டா இருக்கானு கேட்டால் கடன் கேட்ட மாதிரி மூஞ்சிய காட்டாம இல்லை இல்லைனு சளிக்காம சொல்லுதல்
*பீரோவுல என்னோட ரேக்கையும் நீயே யூஸ் பன்னிக்கனு சொல்லிட்டு நம்ம துணியை கட்டப் பையில வச்சு கட்டலுக்கு அடியில் வச்சிக்கலாம்
*மணிக்கொரு முறை என்ன வேலை இருக்கு,நீ போய் ரெஸ்ட் எடுனு சொல்லலாம்
*நல்ல தோசைகூட கருகின தோசைக்கும் இடஒதுக்கீடு செய்து நாமும் சாப்பிடலாம்
*ஆறிப்போன காப்பியை குடு நான் குடிச்சிக்கிறேனு சொல்லி ஆறுதல் படுத்தலாம்
*புடவை எடுக்க துணிக்கடைக்கு கூட்டிட்டா பொறுமையாப் போயி ஏவிஎம் சரவணன் மாதிரி கைகட்டி நிற்கலாம்
*வெளியே போவதை தவிர்த்து, வீட்டிலயே அவுங்க கண் எதிரிலேயே இருந்து நல்ல பேர் வாங்கலாம்
*அடகு வச்ச நகையை எவ்வளவு சீக்கிரத்தில் மீட்க முடியுமோ மீட்பது
*மனைவியின் தம்பி மச்சானை புகழ்வது
*இவ்வாறு செய்தால் இறைவியின் அன்புக்கு பாத்திரமாகலாம் அல்லது பாத்திர விளக்கிற பொடியாகவாவது மாறலாம்
இதனை பின்பற்றுதலே இறைவி நமக்கு சொல்லிக்கொடுத்த பாடம்,படிப்பு,பயாஸ்கோப்பு எல்லாம்
ஜெய் இறைவி"!!!!!
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment