வீடென்பது இடமா
விரும்பும் மனமா
வீடென்றால்
எல்லோருக்குமே அம்மா
ஊருக்குள் இருக்கிறது வீடு
வீட்டிற்குள் இருக்கிறார்கள் ப்ரியமானவர்கள்
ப்ரியமானவர்களைத்தான் தேடுகிறது உள்மனது
வீடு கிட்டத்தில் இருக்க வேண்டும்
வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும்
வீடென்பது கனவு
வெளியென்பது எதார்த்தம்
வீடும் வெளியுமாய்த்தான்
விளங்குகிறது உலகம்
இங்கு
எதற்காக
வீடு திரும்ப வேண்டும் நாம்?
யார்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மை?
-விக்ரமாதித்யன்...
No comments:
Post a Comment