Monday, 5 June 2017

மனுஷ்-நன்றி சதிஸ்

சாத்தியமாகும் அன்பு

நான் உன்னை நேசிக்கிறேன்
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
நான் உன்னை சுதந்திரமுள்ளவளாக்குகிறேன்.

நீ இங்கே
இல்லாதபோது மட்டும்.

-மனுஷ்யபுத்திரன்

#குட்டி இளவரசியின் அறிதல்கள்

காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
'நாளைக்கு மழை பெய்தது'
என்கிறாள் அமைதியாக. -மனுஷ்யபுத்திரன்

#காலியிடங்கள்

பறவைகள் இறந்த பிறகு
காலி பறவைக் கூண்டுகள்

மீன்கள் இறந்த பிறகு
காலி மீன் தொட்டிகள்

வளர்ப்பு நாய்கள் இறந்த பிறகு
காலி நாய்ச்சங்கிலிகள்

தொட்டிச் செடிகள் இறந்த பிறகு
காலித்தொட்டிகள்

மனிதர்கள் இறந்து போகிறார்கள்
மற்றெதையும் போல
அவ்வளவு தெளிவாக
இருப்பதில்லை
அது

-மனுஷ்யபுத்திரன்

குழாய் ரிப்பேர்காரனும் தமிழ்க் கவிஞனும்

குழாயைத் திறந்தால்
தண்ணீருக்குப் பதில்
வெறும் காற்று வருகிறது
காதை வைத்துக் கேட்டால்
யாரோ முணுமுணுப்பது போலிருக்கிறது
ஆவிகள் பேசுவது போலவுமிருக்கிறது

குழாய் ரிப்பேர்காரன்
ஒருமணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறான்
என்ன கோளாறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை

தமிழ்க் கவிஞன்
இந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறான்
இரண்டாயிரம் வருடங்களாக.
- மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment