Monday, 5 June 2017

யுகபாரதி

முன்முடிவு

முழம்போட்ட மல்லிகையை
நீளம் விட்டு நறுக்கும் பூக்காரி
நல்லவளாகத் தெரிகிறாள்

உணவு மேசையில் கேட்காமல்
உபரியாய் பரிமாறும் சிப்பந்தி
நல்லவனாகத் தெரிகிறான்

எதிர்ப்படுகையில் சிரிக்கிறவர்களுக்கும்
எல்லாவற்றையும் பகிர்ந்து
கொள்கிறவர்களுக்கும்
நல்லவர்களாக தெரிகிறார்கள்

நாமும் இன்னொருவருக்கு
நல்லவராக தெரிய விரும்புகிறோம்

நல்லது என்பது தெரிவதில் இல்லை
தெரியாததிலும் உண்டு என்பது நமக்குத் தெரியாது

- யுகபாரதி

No comments:

Post a Comment