Friday, 20 April 2018

மணி

[17/04, 8:14 am] TNPTF MANI: தாமதமாக வருவோர்களை நனைப்பதெற்கென்றே மழையை சேமித்து வைக்கின்றன மரக்கிளைகள்!!"

-பாமரன்
[17/04, 6:18 pm] TNPTF MANI: குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது என்பதில்லை... சொல்லும் பொய்கேற்றவாறு முகபாவம்தான் வைக்கத் தெரிவதில்லை பாவம்

-செளம்யா
[17/04, 9:23 pm] TNPTF MANI: எந்தப் பூச்சிக்கும்
இறுதிச்சடங்கு செய்வது
எறும்புகளே.!
[17/04, 9:52 pm] ஞானவேல் pc: கடவுளை அடைய
ஒரேயொரு வழிதான் உண்டு
அது- அவர் செய்வதையே
நாமும் செய்வது - படைப்பது

-பால் காகின்
[17/04, 11:17 pm] TNPTF MANI: உறவுகள்...

“அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்.”
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸுக்காய்
அம்மாவும்
அப்பாவும்..!

   -    கலாப்ரியா.

No comments:

Post a Comment