Friday, 20 April 2018

படித்தது

தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்

-கல்யாண்ஜி

#ஞகரத்தில் தொடங்கும் சொற்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவானவையே.
ஆனால் அவை ஒவ்வொன்றும் அருஞ்சொற்கள்.
ஞண்டு
ஞயம்
ஞெகிழ்
ஞிமிர்
ஞேயம்
ஆகிய சொற்களை அறிவீர்களா...?
அவற்றின் முதலெழுத்துக்குப் போலியாக 'ந'கரத்தைப்பயன்படுத்தி
நண்டு
நயம்
நெகிழ்
நிமிர்
நேயம்
என்கிறோம்.
ஞாயிறு
ஞாபகம்
போன்ற சில சொற்களைத்தான் ஞகரத்தில் பயன்படுத்துகிறோம்.
காலம்-ஞான்றை
கயிறு-ஞாண்
ஞாலம்-உலகு
_மகுடேசுவரன்.
(விகடன் தடம் இதழில்)

#நான் அவளை பிரிய நேர்ந்தால்
கல் மோதி மறையும் 
நீர் நுரை போல
மெல்ல மெல்ல 
இல்லாமல் போவேன்
-கலல்பொரு சிறுனரையார் ( குறுந்தொகை

No comments:

Post a Comment