Friday, 20 April 2018

மணி

ஜன்னலில் ஒரு சிறுமி சிறப்பான ஒரு புத்தகம்.இதை எத்தனை ஆசிரியர்கள் படித்தார்கள் எனத் தெரியவில்லை.ஆனால் நிச்சயம் குறைவுதான். ஆசிரியர் என்றாலே போட்டித்தேர்வுக்கு தயாராவது மட்டுமே தற்போது நோக்கமாய் உள்ளது.

ஒருவகுப்பறையின் ஜன்னலுக்கு வெளியே உள்ள ஈர்ப்பு ஜன்னலுக்கு உள்ளே வகுப்பறையில் இல்லை என்ற கருத்து. உண்மையில் வகுப்பில் ஒரு குழந்தையை 7நிமிடம் வரை மட்டுமே கவனம் ஈர்க்க முடியும்.அதற்கு மேல் வேறு சொல்லாவிடில் கவனம் திசைதிரும்பும். இதை புரிந்துகொள்வது ஆசிரியரின் முதல்கடமை.

பல திறமை இருப்போர் இன்னும் முதல் இரு வகுப்பில் தேங்கிவிடுகின்றனர்.ஒரு வகுப்பிலேயே தேங்கிவிடுவது.இதற்கு தீர்வு பாடவேளை படி ஆசிரியரை ஈடுபடுத்துவது.ஒரு நாளில் 7 ஆசிரியர்களை ஒரு மாணவன் சந்திப்பான். பல தகவலோ ஆளுமையால் ஈர்க்கப்படுவான்.ஒரே ஆசிரியர் காலைமுதல் மாலை வரை இருப்பது இருவருக்கும் சலிப்பு தரும். மாதம் ஒரு முறை வேறு வகுப்பிலிருந்து Academic counsil report அடிப்படையில் தனியார் பள்ளி போன்று மதிப்பீடு செய்யலாம்.இது அவர்களுக்குள்ளாகவே தர மேம்பாடு அடைய வலியுறுத்தும்.தலைமை ஆசிரியரிடம் அளிக்கும்போது நட்பு அடிப்படையில் இதனை பள்ளி அளவிலேயே சரி செய்யலாம்.

கண்காணிக்கப்படுகிறோம் என்பது தவறுகளை சரிசெய்வதற்கும், தவிர்ப்பதற்கும் வாய்ப்பு. எனக்கெல்லாம் எங்க நேரம் படிக்க என்பவர்கள் ஆசிரியர் வேலைக்கே தகுதியற்றவர்கள். உங்கள் குழந்தைகளை படித்த ஆசிரியர்களிடம் அனுப்பாதீர்கள் படிக்கின்ற ஆசிரியர்களிடம் அனுப்புங்கள் என்ற கலீல் ஜிப்ரானின் வரிகள் நிதர்சனம். அந்த வகையில் ஜன்னலில் ஒரு சிறுமி வகுப்பறை சூழலை வலியுறுத்தும் ஆசிரியர்க்கு ஒரு பாடம்

No comments:

Post a Comment