[16/04, 8:23 pm] TNPTF MANI: மரணத்தின் வாசலில்
அதிகமாய் வலியூட்டுவது
வாழத் தூண்டும்
ஒரு புன்னகைதான்
-லதாமகன்
[17/04, 6:34 am] TNPTF MANI: வறுமை ஏழ்மை – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?
வறுமை என்பது
வறண்ட வற்றிய நிலை.
ஏழ்மை என்பது
என்றும் இருந்திராத இன்மை நிலை.
குளம் கோடைக்காலத்தில் நீரற்று வற்றி வறண்டு இருக்கும்.
அது குளத்தின் வறுமை !
பாலை எல்லாக்காலத்தும் நீர் காணாது நிரந்தரமாக இன்மையில் வாடும்.
அது பாலையின் ஏழ்மை !
எப்போதும் இல்லாத நிலை ஏழ்மை.
இப்போது ஏற்பட்டு விட்ட இல்லாத நிலை வறுமை.
எப்பொழுதும் கொள்கையில்லாத அரசியல் கட்சிகள் ஏழ்மையானவை.
இப்பொழுது பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் வறுமையானவை
.
[17/04, 7:17 am] TNPTF MANI: வாழ்க்கை
---------------------------
நம்ப முடியாத அளவுக்கு
சலிப்பூட்டுகிறது
சொல்ல முடியாத படிக்கு
சாரமற்றிருக்கிறது
விழுங்கிவிட முடியாத அளவுக்கு
கசப்படிக்கிறது
துப்பிவிட முடியாத படிக்கு
சிக்கிக் கொண்டு விட்டிருக்கிறது
கனவுகாண முடியாத அளவுக்கு
வறண்டு போயிருக்கிறது
கற்பனை செய்ய முடியாதபடிக்கு
எரிச்சல் படுத்துகிறது
தீர்த்து வைக்க முடியாத அளவுக்கு
பிரச்சனை கொண்டிருக்கிறது
அணைக்கவே முடியாதபடிக்கு
கனன்று பற்றி எறிந்து கொண்டிருக்கிறது
காற்று போல நீர்போல இல்லாத
இந்த மிருகத்தை என்னதான் செய்வது
---------------------------------------------------------------
-விக்ரமாதித்யன்
[17/04, 7:21 am] TNPTF MANI: கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்.ஷேவ் பண்ணிக்கொள்ள வேண்டிய அவசியத்தை கண்ணாடி அவ்வளவாக வற்புறுத்தவில்லை
-சுந்தர ராமசாமி
[17/04, 7:24 am] TNPTF MANI: சமாதானத்திற்கான நோபல் பரிசை உண்மையில் குழந்தைகளுக்குத் தான் தரப்பட வேண்டும்
-படித்தது
No comments:
Post a Comment