கெட்டுப்போன உணவை
குப்பையில் போட மனமில்லாமல்
ஒரு வறிய மனிதனைத் தேடிப்போய்
கொடுக்கிற கருணை மிகுந்த உலகின்
ஈரக்கைகள் என்னை தொடும்போது
நான் அவ்வளவு பயப்படுகிறேன்...
மனுஷ்யபுத்திரன்
பெரிய ஆசை ஒன்றுமில்லை
சற்று தொலைவில் வீடுகளில்
மாலை உணவு தயாரிக்கும் புகை
எழும்பி வானில் போவதைப் பார்க்கும்படி ஒரு கல்லறை
-போகன்
புத்தகங்கள் படிக்காதிருப்பதும் ஒரு பழக்கம்தான். நிறுத்த முயன்றுபாருங்கள், மிகக் கடினமாக இருக்கும்.
-பேயோன்
புதிரின் ஒரு முனை திறந்து கொண்டபோதும் விசித்திரத்தின் முடிச்சை அத்தனை சுலபமாக அவிழ்த்துவிட எவரால் முடியும்?
-எஸ்.ரா (உபபாண்டவம்)
நிழல்தேடி அலைகிறேன்.. காலடியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது!"
-படித்தது
No comments:
Post a Comment