படித்ததில் பிடித்தது
ஒருவர் தன் வீட்டை விற்ற சில தினங்களில் அவ்வீடு நில நடுக்கத்தால் அழிந்ததை அறிந்தார். நல்லவேளை , நான் இப்போது அங்கு இல்லை.. கடவுளே என்னை காப்பாற்றினாய் .. நீ கருணை மிக்கவன் என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.
அப்படி என்றால் அந்த வீட்டை வாங்கியவன் பார்வையில் கடவுள் கருணையற்றவர் ஆகி விடுவாரே..
கடவுள் என யாரும் இல்லை என சொல்வதற்கு மேற்கண்ட எடுத்துக்காட்டை சொல்கிறார் பெட்ராண்ட் ரசல்.
அற்புதமான வாதம்.. கடவுள் நல்லவர்..சாத்தான் கெட்டவன் என்ற மேலை நாட்டு சிந்தனைக்கு இது நல்ல வாதம்தான்.. கடவுள் என ஒருவர் இருந்தால் , ஏன் இத்தனை பிரச்சனைகள் , ஏன் இவ்வளவு போர்கள் ? தீமைதான் ஆதிக்கம் செலுத்துகிறது.. அப்ப சாத்தான் தான் கடவுளை விட பெரியவனா
ஆனால் கீழை நாட்டு சிந்தனை கடவுளை நன்மை மட்டும் செய்பவனாக பார்க்கவில்லை
நல்லோர்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே என்பது நம் ஊர் பார்வை...
அவன் நல்லவனும் அல்ல ..கெட்டவனும் அல்ல. தண்ணீர் விவசாயத்துக்கு நல்லது.. ஆனால் கடலில் கப்பல் மூழ்கி பலர் சாகும்போது அது வில்லன்
அதுபோல கடவுள் என்பது ஒரு சிஸ்டம்.. அழிப்பதும் அதுவே...காப்பதும் அதுவே...
நாம் எதை ரெப்ரசண்ட் செய்கிறோம் என்பதே முக்கியம்..
No comments:
Post a Comment