உறவுகள் பகிரங்கமாக இருப்பதிலுள்ள நேர்மையை ஏற்காமல், ரகசியமாக நடைபெறுகிறவற்றைக் கண்மூடி அனுமதித்துக் கொண்டிருக்கும் போலிச் சமூகம் நம்முடையது. இச்சமூகம் மனிதனை இரட்டைவேடம் போட நிர்ப்பந்திக்கிறது.
- சுந்தர ராமசாமி
‘
சக மனிதர்களின் உணர்வுகளைச் சாப்பிடாமல் மனிதர்களால் உயிர் வாழவே முடியாது.
- ‘பகடையாட்டம்’ நாவலில்
‘
நாமெல்லோரும் அனுபவங்களின் கைப்பாவைகள்.
- அசோகமித்திரன்
‘
உண்மை என்பது காலத்தின் தேவைக்கேற்பத் தகவல்கள் போடும் வேஷம் மட்டுமே.
- ப்ருனோ
‘
பேசி ஒன்றைப் புரிய வைப்பது, நதிக்கரையில் தண்ணீர் விற்பதைப் போன்றது.
- Zen
‘
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை உள்ளது. அவர்கள் அதை நோக்கித் திரும்புகிறார்கள்.
- குர் ஆன்
‘
நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார்?
- மாணிக்கவாசகர்
‘
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுது
- ஆழ்வார் பாசுரத்தில்
‘
காலம் எனும்
தொலைதூர நகரத்தின் மீது ஒளிரும்
நட்சத்திரத்தின் நீள் நிசப்தத்தினுள்
எனை உருமாற்றி ஒடுங்கியிருப்பேன்.
- ரில்கே
No comments:
Post a Comment