Tuesday, 11 June 2024

டைட்டானிக் கப்பல்


நியூயார்க் கிளம்பிய டைட்டானிக் கப்பலில் ஐஸிடார் ஸ்ட்ராஸ் (Isidor Straus) எனும் மிகப்பெரும் கோடிசுவரர் ஏறினார். அமெரிக்காவின் புகழ்பெற்ற மேசிஸ் எனும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனர். உடன் வந்தது அவரது மனைவி ஐடா (Ida) மற்றும் பணிப்பெண் எல்லன். அவர் நினைத்தால் டைட்டானிக் மாதிரி 30 கப்பல்களை விலைக்கு வாங்க முடியும் எனும் அளவு கோடிசுவரர்

ஆனால் விதி வலியது. கப்பல் விபத்துக்குளாகிறது. உயிர்காக்கும் படகுகள் போதுமானதாக இல்லை. அந்த சூழலிலும், ஒரு படகில் ஒரு இடத்தை ஐஸிடாருக்கு ஒதுக்கினார்கள்.

"கப்பலில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அந்த இடத்தை கொடுங்கள்" என சொல்லி போக மறுத்தார் ஐஸிடோர். கப்பலில் நிறைய பெண்கள் இருந்தார்கள். அதனால் அடுத்து அவரது மனைவி ஐடாவை படகில் ஏற சொன்னார்கள்.

"என் கணவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே தான் நானும் இருப்பேன்" என சொல்லி படகில் ஏற மறுத்தார் ஐடா. தமக்கான அந்த ஒரு இடத்தை பணிப்பெண் எல்லனுக்கு கொடுத்தார்கள்.

படகில் ஏற முனைந்தார் எல்லன்.

"நில்" என சொன்னபடி வந்தார் ஐடா. தனது விலை உயர்ந்த மிங் கோட்டை கழற்றினார். "படகில் குளிரும். இதை அனிந்துகொள்"

ஐடாவும், ஐஸிடோரும் கைகோர்த்து கப்பலின் முகப்பில் நிற்க, படகில் ஏறி அவர்களை பார்த்தபடி சென்றார் எல்லன். கப்பல் மூழ்கியது

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்



~ நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment