Sunday, 30 June 2024

மினிமலிசம்


செஸ்டெர்பீல்டு பிரபு 17ம் நூற்றாண்டில் ப்ரிட்டனில் வாழ்ந்தவர். தன் மகனுக்கு இவர் எழுதிய கடிதங்கள் மிக பிரபலமானவை.

அதில் ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

"எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. அவை நிறைவேறாமல் போனால் நாம் ஏமாற்றமடைவோம். உன் வயதில் விளையாட்டுதனமாக இருக்கும் நிறைய சிறுவர்கள் உண்டு. அவர்களின் ஆசை என்ன என கேட்டால் நல்ல வசதியான வீடு, ஆடம்பரமான துணிகள், கேளிக்கைகளில் வீணடிக்க காசு..இவை வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் இதில் அந்த சிறுவனுக்கு பெருமை எதுவும் வருவதில்லை. அவனை துணிக்கடை பொம்மை மாதிரி அலங்கரித்து, காசு கொடுக்கும் பெற்றோரின் முட்டாள்தனம் தான் இதில் தெரியவரும்.

ஆனால் நல்ல பண்புள்ள சிறுவன் அவன் வயதையொத்தவர்களை விட கூடுதலான அறிவும், பண்பாடும் மட்டுமே வேண்டும் என ஆசைபடுவான்.

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பெரியவர்களிடம் கேட்டால் கூட வீடு, சாரட்டு வண்டி, துணிமணிகள் என பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களின் மேலேயே ஆசைகொள்வதாக சொல்வார்கள். 

ஆனால் பணத்தால் வாங்கமுடியாத நல்ல இதயம், சிந்திக்கும் மூளை இவற்றால் மட்டுமே அடையகூடிய கேரக்டர், அறிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டுமே மேலானவர்கள் விரும்புவார்கள். 

பண்டைய கிரேக்கம், ரோமில் அப்படி நினைத்ததால் தான் அங்கே இருந்து ஆழ்ந்த சிந்தனையாளர்கள் உருவானார்கள். சமூகம் வலிமையானதாக இருந்தது. அதுபோலவே நீயும் ஆவாய் என நான் விரும்புகிறேன்..."

இந்த கடிதத்தை எழுதுகையில் அவரது மகனின் வயது ஒன்பது மட்டுமே...

No comments:

Post a Comment