1775ம் ஆண்டு முதல் டெல்லி முகலாய சுல்தான்கள் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டார்கள். ஆண்டுக்கு ரூ 95,000 பென்ஷன் வழங்கபட்டது. அது அப்போது பெரும் தொகை. ரூ. 2500 இருந்தால் ஒரு யானையை வாங்கிவிடலாம்
படைகள், கோட்டையை மெய்ண்டெய்ன் செய்ய அந்த தொகை வழங்கப்பட்டது. வயதான கடைசி சுல்தான் பகதூர் ஷா பெயரளவுக்கு ஆட்சியில் இருந்தார்.
1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் மூண்டது. சிப்பாய்கள் படை டெல்லிக்கு வந்தது. பகதூர்ஷா அனைத்து மதங்களையும் அரவணைப்பவர் என்பதால் அவரை மன்னராக ஏற்பதாக சொன்னார்கள். அவரும்
ஒப்புக்கொண்டார்
அதன்பின் டெல்லியில் இருந்த ஐரோப்பியர் அனைவரும் பிடிக்கபட்டார்கள். சிப்பாய்கள் நீட்டிய இடத்தில் மன்னர் கையெழுத்து போட்டார். பிடிப்பட்ட ஐரோப்பியர் அனைவரும் படுகொலை செய்யப்பட, அதற்கான ஆவணங்கள்
அனைத்திலும் பகதூர்ஷா கையெழுத்து இருந்தது
கொலைவெறியுடன் டெல்லியை முற்றுகையிட்டு பிடித்தார்கள் ப்ரிட்டிஷார். தன் முன்னோரான ஹுமாயூன் கல்லறையில் அடைக்கலம் புகுந்தார் பகதூர்ஷா. அவருக்கு மரணதண்டனை விதிக்கமாட்டோம் என உறுதிமொழி கொடுத்து சரணடைய வைத்தார் மேஜர் ஹட்சன்
ஆனால் ஐரோப்பியர் கொல்லபட்டதற்கு பழி வாங்க மன்னரின் மூன்று மகன்களும், பேரன்களையும் சுட்டு கொன்றார் ஹட்சன். எந்த விசாரணையும்
இல்லை. பிடிபட்ட இந்திய வீரர்களை விசாரிக்க செல்கையில், ஒரு வீரன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹட்சனை சுட்டு கொன்றுவிட்டார்
அதன்பின் பர்மாவுக்கு மாட்டு வண்டியில் ஏற்றி பல்லாயிரம் மைல்கள் கைதியாக கொண்டு செல்லபட்டார் மன்னர். 250 ஆண்டுகளுக்கு முன்பு மகோன்னதமாக துவங்கிய முகலாய சாம்ராஜ்ஜியம் இப்படியாக முடிவுக்கு வந்தது
பர்மாவிலே ஏழு ஆண்டுகளில் நோய் வாய்ப்பட்டு மரணமும் அடைந்தார். இறக்கும் முன் அவரது புகைப்படம் எடுக்கபட்டது. புகைப்படம் எடுக்கபட்ட முதல் முகலாய மன்னரும் அவர்தான்.
அவரது கல்லறை இன்றும் பர்மாவில் உள்ளது.
தாஜ்மகால் கட்டப்பட்ட நாள் முதல் மும்தாஜுக்கும், அதன்பின் மன்னர் ஷாஜகானுக்கும் தாஜ்மகாலில் உர் (Urs) எனும் நினைவஞ்சலி செலுத்தப்படும். அதற்கு மட்டும் இன்றும் வாரிசுகள் என்ற முறையில் இவரது வாரிசுகள் அழைக்கபடுவார்கள்.
இந்தியாவின் பழைய மன்னர் வம்சாவளிகள் பலருக்கும் இப்படி இன்னுமொ ஒரு சிறு கௌரவம் வழங்கபடுவது அவர்கள் கட்டிய கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்க்ளில் தானே ஒழிய அவர்கள் படை எடுத்து பிடித்த பகுதிளிலோ, நடத்திய போர்களிலோ அவர்களுக்கு எந்த பலனும் இல்லை.
வரலாறு ஈவு, இரக்கம் அற்றது
#history_is_his_story
- நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment