Wednesday, 5 June 2024

மனிதர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய வித்தை என நான் நினைக்கிறேன் .இதுவரையில் நான் என் வாழ்வில் தோற்றுப் போனதாக நினைக்கும் ஒரே விஷயம் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே தான் .ஏனெனில் அவர்கள் அன்பாக பேசும் சமயம் நான் அதை அப்படியே நம்பி விடுகிறேன் . அந்த சுவிகிரிக்கப்பட்ட அன்பிற்கு பின்பான வன்மம் என்னை வந்து அடைவதே இல்லை .அதை திடீரென நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் நேரம் என் வாழ்வின் மிகத் துயரமான ஒரு பொழுதை நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது .இதனாலையே மனிதர்களை விட்டு எட்டி இருப்பதை சாலச் சிறந்ததோ என்று தோன்றுகிறது .ஆனால் வாழ்வென்பது மனிதர்களை மறுதலிப்பது அல்ல-தமயந்தி

No comments:

Post a Comment